நம் இணையதளத்துக்கு வருவோரை இசையால், பேச்சால், நம் வாயால் நம் மொழியால் நாமே வரவேற்போம்.

திசெம்பர் 14, 2009 at 5:53 பிப 6 பின்னூட்டங்கள்

நம் இணையதளத்திற்கு வருவோரை கண்களால் மட்டும்
அழகு படுத்தினால் போதுமா ? காதினால் இனிமையான
ஒலி வந்து அவர்களின் காதுகளையும் வருட வேண்டாமா?
என்னிடம் எந்த மென்பொருளும் இல்லை என்கிறீர்களா ?
பராவாயில்லை. நம் இணையதளத்திற்கு வருவோரை
நம் குரலால் வரவேற்கலாம் , நல்ல இசையால்
வரவேற்கலாம்.ஆங்கில எழுத்துக்களை கொடுத்து அதை
ஒலியாக மாற்றியும் வரவேற்கலாம்.ஒரு பைசா செலவில்லாமல்
எந்த விளம்பரமும் இல்லாமல் இது சாத்தியமா என்றால்
சாத்தியம் தான். எப்படி இதை உருவாக்குவது என்று இனி
பார்ப்போம்.
www.audiopal.com இந்த இணையதளத்திற்கு செல்லவும்.
“GET YOURS IT’S FREE ” என்ற பட்டனை அழுத்தவும்.
போன் மூலம் உங்கள் குரலை பதிவு செய்யலாம்.
அல்லது வார்த்தையை ஒலியாகமாற்றி சொல்லவைக்கலாம்,
மைக்ரோபோன் மூலம் பேசியும் , விரும்பிய இசையை
அப்லோட் செய்யும் வசதியும் உள்ளது.
இப்போது நாம் படம் 2-ல் காட்டியபடி ” Text to speech”
என்பதை தேர்வு செய்துள்ளோம். உள்தோன்றும் கட்டத்தில்
நாம் விரும்பிய வார்த்தையை டைப் செய்யவும்.எந்த நாட்டின்
மொழி என்பதயும் ஆண் அல்லது பெண் குரல் யார் சொல்ல
வேண்டும் என்பதை தேர்வு செய்து “Say It ” என்ற பட்டனை அழுத்தவும்.
Preview-ல் பிளே பட்டனை அழுத்தி சரிபார்த்துக்கொள்ளவும்.
அடுத்ததாக உங்கள் இமெயில் முகவரியை கொடுத்து “ Get it “
என்ற பட்டனை அழுத்தவும். அடுத்த நிமிடம் உங்கள் இமெயில்-ல்
ஒரு லிங்க் ( Link Url) தொடுப்பு கொடுக்கபட்டிருக்கும். அதை க்ளிக்
செய்யவும்.
பட்ம் 3-ல் காட்டியபடி தோன்றும். Publish Destinations
என்ற மெனு இந்த ஒலியை உங்கள் Facebook , Myspace ,
Hi5, Live, Friendster போன்றவற்றில் இணைக்கலாம்
“ Play on load ” என்ற பட்டனை தேர்வுசெய்தால் நம் பக்கம்
லோட் ஆகி முடிந்ததும் தானாகவே Play ஆகும்.
Copy code என்பதை க்ளிக் செய்து உங்கள் இணையத்தில் Paste
செய்யவும்.
Other என்ற மெனுவை தேர்வுசெய்து உங்களின்
சொந்த இணையதளத்திலும் ஒலியை கேட்க வைக்கலாம்.
உங்கள் இணையதளத்தில் இதே மாதிரி குட்டி ஒலிப்பான்
வந்துவிடும்.
உதாரணமாக நாம் உருவாக்கியதை பார்க்க கீழ் உள்ள முகவரியை சொடுக்கவும்.
http://www.audiopal.com/grab_your_widget.html?mId=32248586.2

Entry filed under: அனைத்து பதிவுகளும், இணையதளம், தொழில்நுட்ப செய்திகள், பயனுள்ள தகவல்கள். Tags: , , .

உங்கள் சாதனையை உலக சாதனையாக கின்னஸில் பதிவு செய்ய மாணவர்களுக்கு மைக்ரோசாப்ட் அள்ளிக்கொடுக்கும் இலவச மென்பொருள்கள்

6 பின்னூட்டங்கள் Add your own

  • 1. Thomas Ruban  |  5:44 முப இல் திசெம்பர் 15, 2009

    தென்காசியாரை போல, தினமும் ஒரு பயனுள்ள நல்ல பதிவுகளை தந்து கொண்டு இருக்கும் உங்களுக்கு நன்றி அய்யா.

    மறுமொழி
  • 2. முனைவர்.இரா.குணசீலன்  |  11:06 முப இல் திசெம்பர் 15, 2009

    அட
    நன்றாக இருக்கிறதே..

    மறுமொழி
  • 3. Jawahar  |  5:44 முப இல் திசெம்பர் 16, 2009

    கோடை(code) எந்த இடத்தில் பேஸ்ட் செய்ய வேண்டும்?

    http://kgjawarlal.wordpress.com

    மறுமொழி
    • 4. winmani  |  9:41 முப இல் திசெம்பர் 16, 2009

      உங்களுக்கு இணையதளத்தில் எந்த இடத்தில் வேண்டுமோ அந்த இடத்தில் பேஸ்ட் செய்யலாம். வேர்டுபிரஸ். காம் -ல் மேம்படுத்தப்பட்ட அக்கவுண்ட் இருந்தால் மட்டுமே
      பயன்படுத்த முடியும். ஆனால் ப்லாக்ஸ்பாட்-ல் பயன்படுத்தலாம்.

      மறுமொழி
  • 5. stalin  |  2:00 பிப இல் ஜனவரி 15, 2011

    மேம்படுத்தப்பட்ட அக்கவுண்ட் என்றால் என்ன நண்பரே

    மறுமொழி
    • 6. winmani  |  6:00 பிப இல் ஜனவரி 15, 2011

      @ stalin
      காசு கொடுத்து வாங்கும் அக்கவுண்ட்-க்கு பெயர் தான் மேம்படுத்தப்பட்ட அக்கவுண்ட்.
      நன்றி

      மறுமொழி

பின்னூட்டமொன்றை இடுக

Subscribe to the comments via RSS Feed


பதிவுகள் காப்பூரிமை

உங்கள் மின்னஞ்சலை
உள்ளிட்டு இவ்வலைப்பூவிற்கு
சந்தாதாரராகி,புதிய பதிவுகளை
மின்னஞ்சலில் பெறுங்கள்.

Join 2,733 other subscribers

வின்மணியின் சேவை

சிறந்த முறையில் இணையதளம் உருவாக்க GooLittle.com.நேர்மையான விலையில் சிறப்பான சேவை.

மேலும் விபரங்களுக்கு

அண்மைய பதிவுகள்

Our Sponsors

HOTEL SIVAMURUGAN KANYAKUMARI

HOTEL SIVAMURUGAN

நாள் காட்டி

திசெம்பர் 2009
தி செ பு விய வெ ஞா
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  

தகவல் பாதுகாப்பு

அனைத்து தகவல்களும் முறையாக Creative Common 2.5 - ஆல் காப்பிரைட் செய்யப்பட்டு வெளிவருகிறது.
Creative Commons License
winmani by winmani is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 2.5 License.

நம் வின்மணி இணைப்பு உங்க தளத்தில் கொடுக்க…

உடனுக்குடன் பெற

winmani

winmani.com

www.winmani.com

TNPSC Ebook

TNPSC Group 1, Group 2,Group 3, Group 4 மற்றும் VAO தேர்வில் அடிக்கடி கேட்கப்பட்ட 3000 வினாக்கள் கொண்ட சிறப்பு இ-புத்தகம். மேலும் விபரங்களுக்கு...