Archive for திசெம்பர் 16, 2009
மேலதிகாரிகளின் பார்வையில் இருந்தும் கடும் சொல்லில் இருந்தும் உங்களை காப்பாற்ற ஒரு மென்பொருள்.
அலுவலகத்தில் நாம் தொடர்ந்து பணியாற்றிக்கொண்டிருப்போம் சில
நேரங்களில் நமக்கு எரிச்சலாக இருக்கும் சரி மூளையை கொஞ்சம்
ரெஃப்ரஸ்( Refresh ) பண்ணலாமே என்று ( youtube ) யூடியுப் பார்ப்போம்
அந்த நேரத்தில் தான் நம் மேலதிகாரி வருவார் இவ்வளவு நேரமா
என்ன பண்னிகிட்டுஇருந்திங்க என்று கூச்சலிடுவார்.ஆபிஸ்-ல
நமக்கு இருந்த கொஞ்ச மானத்தையும் கேட்டு வாங்குவார்.
இனி உங்களுக்கு அந்த பிரச்சினை இல்லை பயமும் இல்லை
எப்படி என்று பார்ப்போம்.

இந்த இணையதளத்திற்கு சென்று ” Desktops ” என்ற மென்பொருளை
தரவிரக்கி இன்ஸ்டால் செய்து கொள்ளவும்.

டாஸ்க்பாரின் வலது பக்கத்தில் படம் 1 -ல் இருப்பது போல்
ஐகான் ஒன்று வந்து விடும்.அதை ரைட் கிளிக் செய்து “Option”
என்பதை தேர்வு செய்யவும் படம்-2 ல் இருப்பது போல் உங்களுக்கு
பிடித்த கீயை கான்பிகர் செய்து கொள்ளவும்.

( “Alt ” அல்லது “Ctrl” அல்லது “Shift”” அல்லது ” Windows ” )
அடுத்து உங்களுக்கு தேவையான புரோகிராம் விண்டோவை ஒபன்
செய்து வைத்துக்கொண்டு மறுபடியும் ஐகானை ரைட் க்ளிக் செய்து
“Select Desktop ” என்பதை தேர்வு செய்யவும்.

படம் -3 ல் காட்டியபடி தோன்றும்.
இப்போது “Press to Create desktop 1 or 2 or 3 or 4 ” என்பதை க்ளிக்
செய்யவும். இதே போல் ஒவ்வொரு கீயையும் கான்பிகர் செய்து
கொள்ளவும். இப்போது உதாரணமாக Alt கீயை தேர்வுசெய்திருந்தால்
“Alt + 1 ” என்றால் 1 ஆவது முதலாவதாக நாம் தேர்வு செய்த
Screen Desktop தெரியும். ” Alt + 2 ” என்றால் 2 ஆவதாக நாம்
தேர்வு செய்த Screen Desktop தெரியும். இதே போல் மற்ற கீ-களுக்கும்
வைத்துக்கொள்ளலாம். மேலதிகாரிகளின் பார்வையில்இருந்து
உங்களை கண்டிப்பாக காப்பாற்றும்.