மாணவர்களுக்கு மைக்ரோசாப்ட் அள்ளிக்கொடுக்கும் இலவச மென்பொருள்கள்
திசெம்பர் 15, 2009 at 6:10 பிப பின்னூட்டமொன்றை இடுக

எதையும் புதிய கோணத்தில் ஆராயும் மாணவர்களுக்கு மைக்ரோசாப்ட்
புதிதாக ஒன்றை ஆரம்பித்துள்ளது. மாணவரின் படைப்பாற்றலை
இருகரம் நீட்டி வரவேற்கிறது. இதற்காக மைக்ரோசாப்ட் டீரிம்ஸ்பார்க்
என்று ஒன்றை ஆரம்பித்திள்ளது. படிப்பைத்தவிர மற்றவற்றில் நாட்டம்
செல்லும் மாணவர்களுக்கு இது ஒரு தங்கமான வாய்ப்பு. உங்கள்
கற்பனை படைப்பை எங்களிடம் சொல்லுங்கள் நாங்கள் வாய்ப்பு
தருகிறோம் என்கின்றனர்.
நீங்கள் இணையதள வடிவமைப்பாளராக இருக்கலாம். புதிய
கற்பனையில் விளையாட்டை உருவாக்குபவராகும் இருக்கலாம்.
உங்களுக்கு மைக்ரோசாப்ட் இலவசமாக மென்பொருள்களை தருகிறது.
இதில் எப்படி நாம் சேரலாம் என்று பார்ப்போம்.

https://www.dreamspark.com/Default.aspx இந்த இணையதளத்திற்கு
செல்லவும்.படம் 1- ல் காட்டியபடி ” GO ” என்ற பட்டனை அழுத்தி
ஒரு புது கணக்கு துவக்கவும்.அல்லது Windows live Email ID
மூலமும் Sign in செய்து கொள்ளளாம். அப்புறம் என்ன உங்கள்
தகவல்களை கொடுத்து மைக்ரோசாப்ட் டீரிம்ஸ்பார்க்-ல் சேர்ந்து
கொள்ளவும்.என்னென்ன மென்பொருள்கள் எல்லாம் இலவசமாய்
கிடைக்கும் என்று படம் 2 -ல் காட்டியுள்ளோம்.

எல்லா மாணவர்களுக்கும் பயிற்ச்சியையும் அவர்களே
அளித்துவிடுகிறார்கள். அது மட்டுமின்றி நமக்கு எழும் அனைத்து
கேள்விகளுக்கும் விடை அளிக்கின்றனர்.

வருங்காலத்தில் மைக்ரோசாப்ட் டீரிம்ஸ்பார்க்-ல் பயிற்ச்சி பெற்ற
அனைவருக்கும் வேலை என்று வந்தாலும் வரலாம். நம் தமிழ்
மாணவர்களுக்கும் இந்த தகவலை தெரியப்படுத்துங்கள்.
Entry filed under: அனைத்து பதிவுகளும், இணையதளம், தொழில்நுட்ப செய்திகள், பயனுள்ள தகவல்கள். Tags: மாணவர்களுக்கு மைக்ரோசாப்ட் அள்ளிக்கொடுக்கும் இலவச மென்பொருள்கள்.
Subscribe to the comments via RSS Feed