Archive for திசெம்பர் 7, 2009
குழந்தையை கொண்டு செல்லும் புதிய சூட்கேஸ்
பிறந்த குழந்தைகளை ஒரு இடத்தில் இருந்து மற்றொறு
இடத்திற்கு எடுத்து செல்லும் போது பல பிரச்சினைகளை
சந்திக்க வேண்டியிருக்கிறது. புதிய இடத்தின் காலநிலை
தட்பவெட்பம் என பலவற்றை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது.
இதற்காகவே ஒரு புதிய சூட்கேஸ் ஒன்றை உருவாக்கியுள்ளனர்.
பேருந்தில் பயணம் செய்யும் போதோ விமானத்தில் பயணம்
செய்யும் போதோ குழந்தையை இதனுள் வைத்துக்கொள்ளலாம்.
அனைத்து காலநிலையையும் தாங்கும் வண்ணம் வடிவமைத்துள்ளனர்.
இதுனுள் ஒரு கேமிரா ம்ற்றும் எல்சிடி பொருத்தப்பட்டுள்ளது.
இதே போல் தாயின் இடமும் கேமிரா ம்ற்றும் எல்சிடி
கொடுக்கப்பட்டுள்ளது.

குழந்தையின் தற்போதய நிலையை பெற்றோர் உடனுக்குடன்
பார்த்துக்கொள்ளலாம்.அதே போல் தாயின் முகத்தை குழந்தையும்
பார்த்துக்கொள்ளலாம். உடல் நிலை சரியில்லாத குழ்ந்தையை
வெளிநாட்டிற்கு சிகிச்சைக்காக அனுப்பும்போது குழந்தையை
இது பத்திரமாக எடுத்து செல்லும் என்பதில் ஐயமில்லை.
விண்டோஸ் 7 -ல் சிஸ்டம் ரிப்பேர் டிஸ்க் (System Repair Disk) உருவாக்க
விண்டோஸ் 7 -ல் மேம்படுத்தப்பட்ட சிஸ்டம் ரிப்பேர் டிஸ்க்
( System Repair Disk ) பாதுகாப்பு வழிமுறை உருவாக்குவது
பற்றிய பதிவு.
விண்டோஸ் 7 -ல் எழும் பிரச்சினைகளுக்கு தீர்வாக சிஸ்டம் ரிப்பேர்
டிஸ்க் ( System Repair Disk ) உள்ளது. சில நேரங்களில் தேவைஇல்லாமல்
தோன்றும் செய்திகளை நீக்க சிஸ்டம் ரீஸ்டோர் (System Restore)
செய்வோம் ஆனால் பிரச்சினை பெரிதானால் இந்த சிஸ்டம் ரீஸ்டோர்
வேலை செய்வதில்லை.இதற்கு தீர்வாக சிஸ்டம் ரிப்பேர் டிஸ்க் மூலம்
பிரச்சினைகளை சரிசெய்யலாம்.
சிஸ்டம் ரிப்பேர் டிஸ்க் ( System Repair Disk ) எப்படி உருவாக்குவது
என்பதை பற்றி பார்ப்போம்.
-> Control Panel -ல் சென்று Backup and Restore என்ற ஐகான்-ஐ
Click செய்யவும்.
இப்போது தோன்றும் விண்டோவில் இடதுபக்கத்தில் இருக்கும்
Create a system repair disc என்பதை தெரிவு செய்யவும்.
இப்போது பதிவு செய்ய வேண்டிய புதிய டிவிடி டிஸ்கை
உங்கள் DVD Drive-ல் செலுத்தவும்

Create a system repair disc
Create disc பட்டனை Click செய்யவும்.

இப்படி முழுமையான சிஸ்டம் ரிப்பேர் டிஸ்க் ( System Repair Disk )
உருவாக்கலாம். இதை எப்படி பயன் படுத்துவது என்பதை பற்றி
பார்ப்போம். windows 7 -ல் தீர்க்க முடியாத சீரியஸ் Error வரும்
போது இது உதவும்.கம்யூட்டர் ஆன் செய்யும் போது ( DEL button
அல்லது F10 key ) மூலம் SETUP -ல் சென்று Boot Option -ல்
First Boot Drive-ல் CD or DVD Option -ஐ select செய்யவும்.
இப்போது சிஸ்டம் ரிப்பேர் டிஸ்க் ( System Repair Disk ) உங்கள்
DVD Drive-ல் செலுத்தவும். F10 Key அழுத்தி Save and Exit
செய்யது வெளியேவரவும்.Restart ஆனவுடன் உங்கள் திரையில்
press any key to start the computer from the system repair disc
என்று தோன்றும். எதாவது ஒரு Key -ஐ press செய்யவும். இனி
அதுவாக பிரச்சினைகளை இனம் கண்டு சரி செய்யும், எல்லாம்
முடிந்து Restart ஆகும் போது சிஸ்டம் ரிப்பேர் டிஸ்க்
(System Repair Disk) உங்கள் DVD Drive-ல் இருந்து எடுத்துவிடவும்.
Windows 7 -ல் பாதுகாப்புக்கு பஞ்சம் இல்லை