Archive for திசெம்பர் 19, 2009
அனைத்து இணையதளத்தையும் 3D – வியூவில் பயர்பாக்ஸ்-ல் பார்க்க
பயர்பாக்ஸ் இணைய உலாவியில் மட்டும் செயல்படக்கூடியது.
உங்களிடம் பயர்பாக்ஸ் இணையஉலாவி இல்லை என்றால்
www.mozilla.com என்ற தளத்திற்கு சென்று தரவிரக்கி கொள்ளவும்.
ஒரே நேரத்தில் பல இனையதளங்களை திறந்து வைத்து இருக்கும்
நமக்குத்தான் இந்த பதிவு.
பல இணையதளங்களை திறந்து வைத்திருக்கும் போது ஒன்றில்
இருந்து மற்றொன்றிற்கு செல்லும் போது கொஞ்சம் சிரமமாகத்தான்
இருக்கும். இப்ப்படி ஒரு இணையதளத்தில் இருந்து மற்றொரு இணைய
தளத்திற்கு 3D-வியூ ல் சென்றால் எப்படி இருக்கும். அதைத்தான் இனி
பார்க்கப் போகிறோம். பயர்பாக்ஸ் இணைய உலாவியில்
https://addons.mozilla.org/en-US/firefox/addon/8879 முகவரிக்கு செல்லவும்.
” Add to Firefox ” என்பதை அழுத்தவும். அதுவாகவே டவுன்லோட்
ஆகிவிடும். Install பட்டனை அழுத்தவும்அதன் பின் பயர்பாக்ஸ் -ஐ
Retstart செய்யவும்.இப்போது பயர்பாக்ஸ் இணையதளதில் பல
இணையதளங்களை திறந்து வைத்துக்கொள்ளவும்.
படம் 1 ல் காட்டிய ஐகான் தேர்வு செய்யவும். நாம் திறந்து வைத்த
இணையதளங்களை 3D வியூவில் பார்க்கலாம் விரும்பிய
இணையதளத்திற்கும் நொடியில் செல்லலாம்.
படம் 2 ல் காட்டிய ஐகானை தேர்வுசெய்வதன் மூலம்
விரும்பியபடி 3D வியூவையும் Background-ம் வடிவமைத்து
கொள்ளலாம்.