ஆன்லைன் மூலம் ஒரே நேரத்தில் இரண்டு கோப்புகள் சரியாக இருக்கிறதா என்று நொடியில் சரிபார்க்கலாம்.

ஜூலை 9, 2011 at 2:55 முப பின்னூட்டமொன்றை இடுக

இரண்டு தட்டச்சு கோப்புகள் வெவ்வேறு இடத்தில் இருந்து வருகிறது அல்லது நாம்  ஏற்கனவே தட்டச்சு செய்த கோப்புக்கும் இப்போது மாற்றம் செய்த கோப்புக்கும் என்ன  வித்தியாசம் இருக்கிறது என்பதை நொடியில் ஆன்லைன் மூலம் அறிந்து கொள்ளலாம்  நமக்கு உதவுவதற்காக ஒரு தளம் உள்ளது இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.

படம் 1

இரண்டு கோப்புகளில் என்ன வித்தியாசம் இருக்கிறது என்று அலுவகத்தில் நம்மை சரி பார்க்கக் கூறினால் நாம் பார்க்கும் போது இரண்டும் ஒரே மாதிரி தான் இருக்கும் ஆனாலும் சில வித்தியாசங்கள் இருக்கவே செய்யும் இது போன்ற வித்தியாசங்களை கண்டுபிடிப்பதற்காக பெருமளவு நேரத்தையும் காசு செலவு செய்து எந்த மென்பொருளையும் வாங்க வேண்டாம் ஆன்லைன் மூலம் நமக்கு உதவுவதற்காக ஒரு தளம் உள்ளது.

இணையதள முகவரி : http://diffchecker.com

இத்தளத்திற்கு சென்று நாம் படம் 1-ல் காட்டியபடி  இடது பக்கம் இருக்கும் கட்டத்திற்குள் சரியாக இருக்கும் கோப்பையும் வலது பக்கம் இருக்கும் கோப்பின் எழுத்தையும் கொடுக்கலாம் அல்லது Choose File என்பதை சொடுக்கி நம்மிடம் இருக்கும் ஆபிஸ் கோப்புகளையும் தேர்வு செய்யலாம் இரண்டையும் தேர்ந்தெடுத்தபின் Find Difference என்ற பொத்தானை சொடுக்கி இரண்டில் இருக்கும் மாற்றம்  என்பதை நொடியில் தெரிந்து கொள்ள்லாம், ஒவ்வொரு பிழையும் எளிதாக தெரிந்து கொள்ளும் வண்ணம் வேறு வண்ணத்தால் (Highlight) ஆகி இருக்கும்.  இரண்டு ஆபிஸ் கோப்புகளை சரிபார்க்க விரும்பும் அனைவருக்கும் இந்தப்பதிவு பயனுள்ளதாக இருக்கும்.

நம் டிவிட்டர் செய்திகள் அனைத்தையும் சேமிக்க (Backup) செய்ய ஒரு பயனுள்ள தளம்.

புதிதாக நிறுவனம் தொடங்குபவர்களுக்கு பிராஜெக்ட் நிர்வாகம் செய்ய உதவும் பயனுள்ள தளம்.

உலக அளவில் பல்வேறு வரலாற்று தகவகல்களையும், குழந்தைகளின் நற்செயல்களையும் ஊக்குவிக்கும் பயனுள்ள தளம்.

ஆன்லைன்-ல் தட்டச்சு செய்த வார்த்தையை MP3 கோப்பாக மாற்றி சேமிக்கலாம்

 
வின்மணி இன்றைய சிந்தனை
வாழ்க்கையில் வெற்றி பெற நினைக்கும் ஒருவருக்கு
நாம் செய்யும் உதவி நமக்கு பத்து மடங்காக திரும்பி வரும்.
 
TNPSC  Questions  Group 1,Group 2,Group 3,Group 4 
கடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட
வினாக்கள் மற்றும் பதில்கள்
1.சுயமரியாதை  இயக்க முதல் மாநாடு நடந்த இடம் எது ?
2.தமிழ் தென்றல் என்று அழைக்கப்படுபவர் யார் ?
3.தமிழகத்தில் பஞ்சாயத்து ராஜ் சட்டம் நிறைவேற்றப்பட்ட ஆண்டு?
4.சுதந்திரம் அடைந்தவுடன் இணைந்த முதல் சமஸ்தானம் ?
5.சோலார் அப்சர்வேட்டரி உள்ள இடம் எது ?
6.ISO 9002 தரச் சான்றிதழ்  வாங்கிய ஒரே துறைமுகம் எது ?
7.அகல்விளக்கு என்ற நூலின் ஆசிரியர் யார் ?
8.துப்பாக்கி வெடிமருந்து தொழிற்சாலை தமிழ்நாட்டில் எங்குள்ளது?
9.குலக்கல்வி முறையை ராஜாஜி கொண்டு வந்த ஆண்டு எது ?
10.கோவையில் தொடர் குண்டுவெடிப்பு நடந்த ஆண்டு ?
பதில்கள்
1.செங்கல்பட்டு, 2.திரு.வி.க, 3.1994,  4.புதுக்கோட்டை, 
5.கொடைக்கானல், 6.தூத்துக்குடி, 7.மு.வரதராசனார்,
8.அரவங்காடு, 9.1953, 10.1998.
 
இன்று ஜூலை 9

பெயர் : கைலாசம் பாலசந்தர், 
பிறந்ததேதி : ஜூலை 9, 1930
தமிழ்த் திரைப்பட இயக்குனர்.இவர் மேடை
நாடகத்  துறையில் இருந்து திரைத்துறைக்கு
வந்தவர். இவருடைய பெரும்பாலான படங்களில்,
மனித உறவு முறைகளுக்கு இடையிலான
சிக்கல்கள், சமூகப் பிரச்சினைகள் ஆகியவையே
கருப்பொருளாய் விளங்கின.தமிழ்த் திரையுலகின் முக்கிய
நடிகர்களான கமல் ஹாசன் மற்றும் ரஜினிகாந்தை அறிமுகம்
செய்தவர். K.B என்று அனைவராலும் அழைக்கப்படுபவர்.

PDF ஆக தறவிரக்க இங்கே சொடுக்கவும்

Entry filed under: அனைத்து பதிவுகளும், இணையதளம், தொழில்நுட்ப செய்திகள், பயனுள்ள தகவல்கள். Tags: .

உங்கள் குழந்தைகளுக்கு செஸ்( சதுரங்கம் ) விளையாட்டை வீடியோவுடன் சொல்லி கொடுக்கும் தளம். வீடியோ சாட்டிங் ( Free Video Conferencing ) முகம் மட்டும் பார்த்து பேசலாம் புதுமையிலும் புதுமை.

பின்னூட்டமொன்றை இடுக

Subscribe to the comments via RSS Feed


பதிவுகள் காப்பூரிமை

உங்கள் மின்னஞ்சலை
உள்ளிட்டு இவ்வலைப்பூவிற்கு
சந்தாதாரராகி,புதிய பதிவுகளை
மின்னஞ்சலில் பெறுங்கள்.

Join 2,725 other subscribers

வின்மணியின் சேவை

சிறந்த முறையில் இணையதளம் உருவாக்க GooLittle.com.நேர்மையான விலையில் சிறப்பான சேவை.

மேலும் விபரங்களுக்கு

அண்மைய பதிவுகள்

Our Sponsors

HOTEL SIVAMURUGAN KANYAKUMARI

HOTEL SIVAMURUGAN

நாள் காட்டி

ஜூலை 2011
தி செ பு விய வெ ஞா
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031

தகவல் பாதுகாப்பு

அனைத்து தகவல்களும் முறையாக Creative Common 2.5 - ஆல் காப்பிரைட் செய்யப்பட்டு வெளிவருகிறது.
Creative Commons License
winmani by winmani is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 2.5 License.

நம் வின்மணி இணைப்பு உங்க தளத்தில் கொடுக்க…

உடனுக்குடன் பெற

winmani

winmani.com

www.winmani.com

TNPSC Ebook

TNPSC Group 1, Group 2,Group 3, Group 4 மற்றும் VAO தேர்வில் அடிக்கடி கேட்கப்பட்ட 3000 வினாக்கள் கொண்ட சிறப்பு இ-புத்தகம். மேலும் விபரங்களுக்கு...