வீடியோ சாட்டிங் ( Free Video Conferencing ) முகம் மட்டும் பார்த்து பேசலாம் புதுமையிலும் புதுமை.
ஜூலை 10, 2011 at 5:40 முப பின்னூட்டமொன்றை இடுக
வெளிநாட்டில் இருக்கும் நம் சொந்தங்களின் குரலை மட்டுமல்ல வீடியோவையும் நாம் பார்த்துக் கொண்டே பேசலாம், எந்த விளம்பர இடைஞ்சலும் இல்லாமல் நேரடியாகவும் வேகமாகவும் , முகம் மட்டும் பார்த்து வீடியோ சாட்டிங் செய்யும் வசதியும் கொண்டு ஒரு தளம் அறிமுகமாகி உள்ளது இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.

படம் 1
வீடியோ சாட்டிங் செய்ய பல இணையதங்கள் இருக்கும் நிலையில் , பல வீடியோ சாட்டிங் செய்யும் இணையதளங்கள் தேவையில்லா விளம்பரங்களை கொடுத்து வெறுப்படையச் செய்துவிடுகின்றன, வீடியோ சாட்டிங்-ல் முதல் முறையாக முகம் மட்டும் பார்த்து சாட் செய்யும் சேவையை ஒரு தளம் எந்த விளம்பரமும் இல்லாமல் அறிமுகப்படுத்தியுள்ளது.
இணையதள முகவரி : http://jottle.com
இத்தளத்திற்கு சென்று நமக்கென்று ஒரு பயனாளர் பெயர் கொடுத்து உள்நுழையலாம் அடுத்து வரும் திரையில் வெப் கேமிரா மூலம் நம் வீடியோவை எடுத்து சரியாக 30 நொடிகளுக்குள் நம் முகத்தை மட்டும் காட்டுகிறது , நாம் யாருடன் வீடியோ சாட் செய்ய வேண்டுமோ அவர்களின் பயனாளர் முகவரியை கொடுத்தால் போதும் சில நொடிகளில் நாமும் அவரும் முகம் பார்த்து பேசலாம், முகத்தை மட்டும் சரியாக Detect செய்து காட்டுவதெல்லாம் சாத்தியம் இல்லை என்று இல்லை என்று சொல்பவர்கள் கூட ஒரு முயற்சியாக செய்து பார்ப்பதால் சற்றே புதுமையாகத்தான் இருக்கும். அலுவலக வேலைகளுக்கான வீடியோ சாட்டிங் செய்பவர்களும் மற்றும் வேகமாக வீடியோ சாட்டிங் செய்ய விரும்பும் அனைவருக்குமே இந்தப்பதிவு பயனுள்ளதாக இருக்கும். இதைப்பற்றிய ஒரு அறிமுக வீடியோவையும் இத்துடன் கொடுத்துள்ளோம்.
டைட்டானிக் கப்பலின் அரிய பல தகவல்களை வீடியோவுடன் சொல்லும் பயனுள்ள தளம்.
ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடியோ பாடல்களை பாடல் வரிகளுடன் கொடுக்கும் தளம்.
எக்சசைஸ் செய்து உடலை வலிமையாக்கலாம் வீடியோவுடன் சொல்லும் தளம்.
அனைத்துவிதமான Professional Diagram -ம் உடனடியாக உருவாக்க வீடியோவுடன்
வின்மணி இன்றைய சிந்தனை நல்லவர்களின் அறிமுகம் கிடைப்பதே நாம் முன்பு செய்த நல்லவையின் பலனாகத் தான் இருக்கும்.
TNPSC Questions Group 1,Group 2,Group 3,Group 4 கடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட வினாக்கள் மற்றும் பதில்கள் 1.கத்தியின்றி ரத்தமின்றி யுத்தம் ஒன்று வருகுது என்று பாடியவர்? 2.மெட்ராஸ் பிரசிடென்ஸி உருவாக்கப்பட்ட ஆண்டு ? 3.அவ்வை இல்லம் தொடங்கி நடத்தியவர் யார் ? 4.இந்தியாவின் 13-வது எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் எங்குள்ளது ? 5.காமராசர் முதலமைச்சராக இருந்த ஆண்டுகள் ? 6.தமிழ்நாட்டில் பெண்களுக்கு வேலை வாய்ப்பில் இட ஓதுக்கீடு ? 7.இந்திரா காந்தி தேசிய பூங்கா உள்ள இடம் எது ? 8.சென்னை மாகானத்தில் முதன் முதலில் மதுவிலக்கு அறிமுகம் செய்தவர் யார் ? 9.மதுரை - இராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலை எண் ? 10.பல்லவப் பேரரசை முடிவுக்கு கொண்டுவந்த சோழன் யார் ? பதில்கள் 1.இராமலிங்கம் பிள்ளை,2.1801, 3.டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி, 4.பனங்குடி, 5.9 ஆண்டுகள், 6.33%, 7.ஆனைமலை ( நீலகிரி) , 8.இராஜாஜி, 9.NH.49, 10.ஆதித்ய சோழன்.
இன்று ஜூலை 10
ஜூலை 10, 1973 , பஹாமாஸ் விடுதலை நாள் அட்லாண்டிக் பெருங்கடலில் சுமார் 2000 மணல் மேடுகளையும் 700 தீவுகளையும் கொண்ட ஒரு நாடாகும். இது ஐக்கிய அமெரிக்க நாடுகளின் புளோரிடா மாநிலத்திற்கு கிழகுத் திசையில் கியுபாவிற்கும் கரிபியாவிற்கு வடக்கிலும் பிரிட்டானிய கடல்கடந்த ஆட்சிப்பகுதியான துர்கசும் கைகோசுவிற்கு வடமேற்கிலும் அமைந்துள்ளது.
PDF ஆக தறவிரக்க இங்கே சொடுக்கவும்
Entry filed under: அனைத்து பதிவுகளும், இணையதளம், தொழில்நுட்ப செய்திகள், பயனுள்ள தகவல்கள். Tags: வீடியோ சாட்டிங் ( Video Conferencing ) முகம் மட்டும் பார்த்து பேசலாம் புதுமையிலும் புத.
Subscribe to the comments via RSS Feed