உங்கள் குழந்தைகளுக்கு செஸ்( சதுரங்கம் ) விளையாட்டை வீடியோவுடன் சொல்லி கொடுக்கும் தளம்.

ஜூலை 8, 2011 at 6:48 முப 3 பின்னூட்டங்கள்

ராஜாக்களின் விளையாட்டு என்று செல்லமாக அழைக்கப்படும் செஸ் விளையாட்டை குழந்தைகள் முதல் செஸ் விளையாட்டிற்கு புதியவர்கள் வரை அனைவருக்கும் எப்படி செஸ் விளையாட வேண்டும் என்று வீடியோவுடன் சொல்லிகொடுக்க ஒரு தளம் உள்ளது இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.

படம் 1

துருப்பிடித்து கிடக்கும் நம்முடைய மூளைக்கு வேலை கொடுப்பதற்கு மட்டுமல்ல , சிந்தனையை தூண்டும் ஒரு அரிய  விளையாட்டான செஸ் விளையாட்டை எப்படி விளையாட வேண்டும் என்பதை குழந்தைகள் முதல் அனைவருக்கும் புரியும் வண்ணம் வீடியோவுடன் எடுத்துச் சொல்ல ஒரு தளம் உள்ளது .

இணையதள முகவரி : http://www.chesskid.com

குழந்தைகளுக்கு செஸ் விளையாட்டை சொல்லி கொடுப்பதற்கு நேரம் இல்லையே என்று சொல்லும் அனைவருக்கும், உங்களின் குழந்தைகளுக்கு சதுரங்க விளையாட்டின் அடிப்படை பயிற்சியையும் அதற்கான நெளிவு சுளிவுகளையும் இத்தளம் தெளிவாக எடுத்து சொல்கிறது. குழந்தைகள், பெற்றோர் மற்றும் செஸ் பயிற்சிவிப்பாளர்கள் என மூவருக்கும் எப்படி திறமையாக விளையாடி  ஜெயிக்கலாம் என்பதை வீடியோவுடன் காட்டுகிறது. இத்தளத்திற்கு சென்று ஒரு இலவச பயனாளர் கணக்கு உருவாக்கிக் கொண்டு நேரடியாக செஸ் விளையாடலாம் , நமக்கு நேரம் கிடைக்கும் போது இத்தளத்திற்கு சென்று நம் பயனாளர் கணக்கை கொடுத்து விட்ட இடத்தில் இருந்து மறுபடியும் ஆரம்பிக்கலாம், இதுவரை நீங்கள் செஸ் விளையாடி பெற்ற மதிப்பெண்கள் என்ன என்பது வரை அத்தனையுமே காட்டுகிறது, ஓவ்வொரு நாளும் புதிதாக வெற்றி பெற்றவர்களின் வீடியோவும் நமக்கு காண கிடைக்கிறது. செஸ் விளையாடும்  நண்பர்களுக்கும் இனி செஸ் விளையாட இருக்கும் குழந்தைகளுக்கும் மற்றும்  நண்பர்களுக்கும் இந்தப்பதிவு பயனுள்ளதாக இருக்கும்.

சதுரங்க விளையாட்டில் இனி வெற்றி உங்கள் பக்கம்

செஸ் விளையாட்டு இனி இமெயிலில் இருந்து கொண்டே விளையாடலாம்.

திறமையான ‘சுடோ’ சுடுக்கு பேப்பரில் பிரிண்ட் செய்து விளையாடலாம்

ஆங்கில சொல்வளத்தை அதிகரிக்கும் ஆன்லைன் விளையாட்டு.

 
வின்மணி இன்றைய சிந்தனை
ஒவ்வொரு நாளும் அன்று தான் பிறந்தோம் என்ற எண்ணம்
இருந்தால் அன்றை தினத்தை பயனுள்ளதாக பயன்படுத்தலாம்.
 
TNPSC  Questions  Group 1,Group 2,Group 3,Group 4 
கடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட
வினாக்கள் மற்றும் பதில்கள்
1.கன்னியாகுமரி திருவள்ளூவர் சிலையை வடிவமைத்தவர் யார்?
2.தமிழ் இலக்கியங்கள் அயல்நாடு வணிகரைக் குறிப்பிடும்
 பெயர் என்ன ? 
3.முதலாம் மகேந்திரவர்மனின் மகன் யார் ?
4.தமிழ்நாட்டின் முதல் அனல் மின் திட்டம் எது ?
5.தோல் மற்றும் தோல் பொருட்கள் தயாரிக்கும் மாவட்டங்கள்?
6.கூரம் என்ற பட்டயம் உடன் தொடர்புடையவர்கள் ?
7.தமிழ்நாட்டின் முதல் நீர்மின் திட்டம் ?
8.தில்லையாடி வள்ளியம்மை பிறந்த இடம் எது ?
9.1983 -ல் தொடங்கப்பட்ட பல்கலைக்கழகம் எது ?
10.தமிழ்நாட்டில் ஆண்கள் எழுத்தறிவு விகிதம் என்ன ?
பதில்கள்
1. கணபதி ஸ்தபதி, 2.யவணர்கள், 3.முதலாம் நரசிம்மன், 
4.நெய்வேலி, 5.வேலூர் , திண்டுக்கல், 6.பல்லவர்கள், 
7.பைகாரா (நீலகிரி), 8.ஜோகன்ஸ் பர்க் (தென் ஆப்பிரிக்கா),
9.அன்னை தெரசா பல்கலைக்கழகம்,10.82.4%.
 
இன்று ஜூலை 8

பெயர் : ராஜசேகர ரெட்டி, பிறந்ததேதி : ஜூலை 8, 1949
இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியை சேர்ந்த
இந்திய அரசியல்வாதியாகவும், ஆந்திரப்
பிரதேசத்தின் முதலமைச்சராகவும் இருந்தார்.
இந்திய மக்களவைக்கு நான்கு முறையும்
ஆந்திரப் பிரதேச சட்டமன்றத்துக்கு நான்கு முறையும்
தேர்ந்தெடுக்கப்பட்டார். செப்டம்பர் 2 , 2009-ல் வானூர்தி
விபத்தில் மரணமடைந்தார்.

PDF ஆக தறவிரக்க இங்கே சொடுக்கவும்


Entry filed under: அனைத்து பதிவுகளும், இணையதளம், தொழில்நுட்ப செய்திகள், பயனுள்ள தகவல்கள்.

உலக அளவில் இணையம் மூலம் தமிழ் வளர்க்கும் ” தமிழ் பாடநூல் ” பயனுள்ள தளம். ஆன்லைன் மூலம் ஒரே நேரத்தில் இரண்டு கோப்புகள் சரியாக இருக்கிறதா என்று நொடியில் சரிபார்க்கலாம்.

3 பின்னூட்டங்கள் Add your own

  • 1. buruhani  |  6:23 பிப இல் ஜூலை 10, 2011

    avar maraintha varudaththaiyum solli irukkalame?

    மறுமொழி
    • 2. winmani  |  12:35 முப இல் ஜூலை 11, 2011

      @ buruhani
      அதையும் கொடுத்தாச்சு,
      மிக்க நன்றி

      மறுமொழி
  • 3. guna  |  3:59 பிப இல் ஓகஸ்ட் 7, 2011

    தமிழ்

    மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

Subscribe to the comments via RSS Feed


பதிவுகள் காப்பூரிமை

உங்கள் மின்னஞ்சலை
உள்ளிட்டு இவ்வலைப்பூவிற்கு
சந்தாதாரராகி,புதிய பதிவுகளை
மின்னஞ்சலில் பெறுங்கள்.

Join 2,742 other followers

வின்மணியின் சேவை

சிறந்த முறையில் இணையதளம் உருவாக்க GooLittle.com.நேர்மையான விலையில் சிறப்பான சேவை.

மேலும் விபரங்களுக்கு

அண்மைய பதிவுகள்

Our Sponsors

HOTEL SIVAMURUGAN KANYAKUMARI

HOTEL SIVAMURUGAN

நாள் காட்டி

ஜூலை 2011
தி செ பு விய வெ ஞா
« ஜூன்   ஆக »
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031

டிவிட்டரில் நம்மோடு சேர…

தகவல் பாதுகாப்பு

அனைத்து தகவல்களும் முறையாக Creative Common 2.5 - ஆல் காப்பிரைட் செய்யப்பட்டு வெளிவருகிறது.
Creative Commons License
winmani by winmani is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 2.5 License.

நம் வின்மணி இணைப்பு உங்க தளத்தில் கொடுக்க…

உடனுக்குடன் பெற

winmani

winmani.com

www.winmani.com

TNPSC Ebook

TNPSC Group 1, Group 2,Group 3, Group 4 மற்றும் VAO தேர்வில் அடிக்கடி கேட்கப்பட்ட 3000 வினாக்கள் கொண்ட சிறப்பு இ-புத்தகம். மேலும் விபரங்களுக்கு...

%d bloggers like this: