உங்களுக்கு என்று தனியாக பிளாக் இலவசமாக தொடங்கலாம் எளிய வழிமுறை

ஜூன் 2, 2010 at 11:10 பிப 23 பின்னூட்டங்கள்

இணையதள உலகில் நமக்கென்று தனியாக பிளாக் ஒன்று வைத்து
அதில் நமக்கு தோன்றும் நல்ல கட்டுரைகள் தகவல்கள் போன்ற
பலவற்றை இலவசமாக எழுதலாம். பிளாக் எப்படி உருவாக்க
வேண்டும் என்பதை பற்றியும் அதில் எப்படி நம் தகவல்களை
பதியலாம் என்பதை பற்றிய சிறப்பு பதிவு.

படம் 1

நமக்கென்று இலவசமாக ஒரு இணையப்பக்கம் உருவாக்கி
அதில் நாம் விரும்பும் தகவல்களை அனைத்து மக்களுக்கும்
கொண்டு சென்று சேர்க்கலாம். இனி கூகுள் கொடுக்கும் சிறந்த
சேவைகளில் ஒன்றான பிளாக் ஸ்பாட் ( Blogspot ) மூலம்
இலவசமாக இணையப்பக்கம் உருவாக்கலாம் எப்படி என்பதை
பார்ப்போம்.

http://www.blogger.com என்ற இணையதளத்திற்க்கு செல்லவும்
படம் 1-ல் காட்டியபடி இருக்கும் அதில் usename என்ற கட்டத்திற்க்குள்
உங்கள் ஜீமெயில் முகவரியையும் பாஸ்வேர்ட் என்ற கட்டத்திற்க்குள்
பாஸ்வேர்ட-ஐ கொடுத்து Sign in என்ற பொத்தானை அழுத்தவும்.
( ஜீமெயில் முகவரி இல்லாதபட்சத்தில் புது ஜீமெயில் முகவரி
உருவாக்கிக்கொள்ளவும் ).

படம் 2

அடுத்து வரும் திரை படம் 2-ல்  காட்டப்பட்டுள்ளது இதில் Display Name
என்பதில் பிளாக்-க்கு என்ன பெயர் வைக்க வேண்டுமோ அதை
கொடுக்கவும் உதாரணமாக நாம் Tamil Blog என்ற பெயரில்
வைத்துள்ளோம். அடுத்து விதிமுறைகள்( I accept the Term of Service)
படித்து அதில் இருக்கும் கட்டத்தை டிக் செய்யவும்.தேர்வு செய்ததும்
Continue என்ற பொத்தனை அழுத்தவும்.

படம் 3

அடுத்து வரும் திரை படம் 3 -ல் காட்டப்பட்டுள்ளது இதில் நாம்
உருவாக்க இருக்கும்  பிளாக்கின் டைட்டில்-ஐ Blog Title என்பதில்
கொடுக்கவும் அடுத்து உருவாக்க்க இருக்கும் பிளாக்குக்கான
முகவரியை கொடுத்து அதேபெயரில் வேறு ஏதாவது முகவரி
இருக்கிறதா என்பதை அறிய “Check Availability ” என்பதை அழுத்தி
பார்த்துக்கொள்ளவும். உதாரணமாகநாம் tamiltestblogs என்ற பெயரில்
வைத்துள்ளோம்.( நம் முகவரி http:\\tamiltestblogs.blogspot.com
என்ற பெயரில் இருக்கும்) முகவரி தேர்வு செய்து முடித்ததும் Continue
என்ற பொத்தானை அழுத்தவும்.

படம் 4

அடுத்து வரும் திரை படம் 4 -ல் காட்டப்பட்டுள்ளது இதில் நமக்கு
பிடித்த பிளாக்கின் வடிவமைப்பை தேர்வு செய்து Continue என்ற
பொத்தானை அழுத்தவும்.

படம் 5

அடுத்து வரும் திரை படம் 5-ல் காட்டப்படுள்ளது இதில் இருக்கும்
Start Blogging என்ற பொத்தனை அழுத்தியவுடன் நம் பிளாக்
உருவாகிவிடும்.

படம் 6

அடுத்து வரும் திரை படம் 6-ல் உள்ளது இதில் Title என்பதில்
நாம் பதிய இருக்கும் பதிவு பற்றிய தலைப்பை கொடுக்கவும்
அதன் பின் உள்ளே இருக்கும் கட்டத்திற்க்கு செய்தியை தட்டச்சு
செய்து கொள்ளவும். எழுத்தின் வடிவம் , கலர் போன்றவற்றை
தேர்வு செய்து முடித்ததும் “Save Now ” என்ற பொத்தானை அழுத்தவும்
அடுத்து “Publish Post ” என்ற பொத்தானை அழுத்தி நம் பதிவை
தளத்தில் தெரிய வைக்கலாம்.

படம் 7

படம் 8

அடுத்து வரும் திரை படம் 7-ல் காட்டப்பட்டுள்ளது. இதில்
” View Post ” என்பதை அழுத்தியதும் நாம் உருவாக்கிய பதிவை
படம் 8 -ல் பார்க்கலாம்.  இந்த முறையில் கூகுளின் பிளாக் ஸ்பாட்-ல்
எளிதாக நமக்கென்று ஒரு இணையதளம் உருவாக்கிக்கொள்ளலாம்.
தணிகாசலம் ,கார்த்திகேயன் ,மார்க்ஸ், மற்றும் கயல்விழி போன்ற
நண்பர்கள் பிளாக் எப்படி உருவாக்கு என்பது பற்றி கேட்டிருந்தனர்
கண்டிப்பாக அனைவருக்கும் இந்த தகவல் பயனுள்ளதாக இருக்கும்.

வின்மணி சிந்தனை
மக்களை ஏமாற்றும் அனைவரும் மக்களை ஏமாற்றவில்லை 
தன்னுள் இருக்கும் கடவுளைத் தான் ஏமாற்றுகிறார்கள்.
TNPSC  Questions  Group 1,Group 2,Group 3,Group 4
கடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட
வினாக்கள் மற்றும் பதில்கள்
1.சரஸ்பூர் எந்த மாநிலத்தில் உள்ளது ?
2.தொழுநோயை போக்கும் தன்மை கொண்ட மருந்து எது ?
3.சந்திரனில் ஒலியை ஏன் கேட்க முடியாது ?
4.இந்தியாவின் கடற்படை தலமையகம் எங்குள்ளது ?
5.1995 ஆம் ஆண்டு பெப்ஸி கோப்பையை வென்ற நாடு எது ?
6.இரவில் மலரும் அற்புத மலர் எது ?
7.’கருப்பு ஈயம் எனப்படும் தாது எது ?
8.’டிக்பாய்’ என்பது என்ன ?
9.மைக்டைசன் எந்த விளையாட்டுடன் தொடர்புள்ளவர் ?
10.’நாகசாகி’ நகரம் எந்த நாட்டில் உள்ளது ?
பதில்கள்:
1.அஹமதாபாத், 2.கந்தகம், 3.காற்று இல்லாததால்,
4.டெல்லி,5.இந்தியா, 6. நிஷகந்தி,7.கிராபைட், 
8.பெட்ரோலியம் தொழிற்சாலை,9.பாக்ஸிங்,10.ஜப்பான் 
இன்று ஜுன் 2 
பெயர் : இளையராஜா ,
பிறந்த தேதி : ஜுன் 2, 1943
இந்தியாவின் சிறந்த திரைப்பட இசையமைப்
பாளர்களுள் ஒருவர்.அன்னக்கிளி என்ற தமிழ்த்
திரைப்படத்துக்கு இசை அமைத்ததின் மூலம்
1970 களின் பிற்பகுதியில் அறிமுகமானார். 
இதுவரை 800 க்கும் மேற்பட்ட தமிழ், தெலுங்கு, மலையாளம், 
கன்னடம், இந்தி திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார். 
இவருக்கு இந்திய அரசின் படைத்துறை-சாரா விருதுகளில்
மூன்றாவது உயரிய விருதான பத்ம பூசண் விருது 2010-ஆம்
ஆண்டு அளிக்கப்பட்டது. ஆன்மிக நாட்டம் உள்ளவர்.

PDF ஆக தறவிரக்க இங்கே சொடுக்கவும்

Entry filed under: அனைத்து பதிவுகளும், இணையதளம், தொழில்நுட்ப செய்திகள், பயனுள்ள தகவல்கள். Tags: .

ஐபேட் போட்டியாக சீனா அறிமுகப்படுத்த இருக்கும் ஐபெட் சிறப்பு வீடியோவுடன் எதிர்காலத்தில் அனுப்ப வேண்டிய எல்லா வகையான செய்திகளையும் இப்போதே அனுப்பலாம் .

23 பின்னூட்டங்கள் Add your own

  • 1. தணிகாசலம்  |  6:56 முப இல் ஜூன் 3, 2010

    மிக்க நன்றி. திரு வின்மணி. என் சார்பிலும் கார்த்திக்கேயன், மார்க்ஸ் , கயல்விழி மற்றும் ஏனைய அனைத்து நண்பர்கள் (நிச்சயம், அவர்கள் தனியே தெரிவிப்பார்கள்) சார்பிலும் உங்களின் அன்பான துரித நடவடிக்கைக்கு ஒரு ஓ! போடுவதோடு சேவையை என்றும் நினைவில் வைத்திருப்பேன்.
    அன்புடன்,
    தணிகாசலம்,
    மலேசியா.

    மறுமொழி
    • 2. winmani  |  3:30 பிப இல் ஜூன் 3, 2010

      @ தணிகாசலம்
      மிக்க நன்றி

      மறுமொழி
  • 3. ul.ahamed rasmy  |  7:32 முப இல் ஜூன் 3, 2010

    உங்கள் கட்டுரை பயனுள்ளதாக இருக்கிறது. ப்ளொக்ஸ்பொட் மற்றும் வேர்ட் பிரஸ் தளங்களில் எமக்காக எவ்வளவு இடவசதி தருகிறார்கள் எனபதனை தயவு செய்து தெரிவிக்கவும்.
    நன்றி

    மறுமொழி
    • 4. winmani  |  3:33 பிப இல் ஜூன் 3, 2010

      @ ul.ahamed rasmy
      பிளாக் ஸ்பாட்-ல் நாம் எவ்வளவு வேண்டுமானாலும் பதியலாம் இடவசதி பிரச்சினை இல்லை ஆனால் வேர்டுபிரஸ்-ல் அதிகமான இடவசதி இல்லை.
      மிக்க நன்றி

      மறுமொழி
  • 5. faizal  |  9:49 முப இல் ஜூன் 3, 2010

    நன்றி சார் வெகு நாளாக ப்ளாக் ஆரம்பிக்க வேண்டும் என்று நினைத்து இருந்தேன் ஆனா எப்படி என்பது தெரியவில்லை உங்கள் பதிவின் மூலம் தெரிந்து கொண்டு ஆரம்பித்து விட்டேன் மிக மிக நன்றி

    மறுமொழி
  • 7. கயல்விழி  |  5:34 பிப இல் ஜூன் 3, 2010

    வின்மணிக்கு நன்றி , உங்கள் சேவை வளர எங்கள் மனமார்ந்த
    வாழ்த்துக்கள்.
    கயல்விழி

    மறுமொழி
    • 8. winmani  |  5:37 பிப இல் ஜூன் 3, 2010

      @ கயல்விழி
      மிக்க நன்றி தோழி .

      மறுமொழி
  • 9. அருள்  |  8:03 முப இல் ஜூன் 4, 2010

    மிக்க நன்றி. மிகவும் பயனுள்ள பதிவு. வெகு நாளாக ப்ளாக் ஆரம்பிக்க வேண்டும் என்று நினைத்து இருந்தேன் ஆனால் எப்படி என்பது தெரியவில்லை உங்கள் பதிவின் மூலம் தெரிந்து கொண்டு ஆரம்பித்து விட்டேன் மிக்க நன்றி.
    தொடர்ந்து எப்படி வகைப் படுத்த வேண்டும் என்பதை பதிவாக எழுதவும். நன்றி.
    ப. அருள்

    மறுமொழி
  • 11. வித்யாசாகர்  |  9:50 முப இல் ஜூன் 4, 2010

    வாழ்வது சிறப்பு தான், வழிகாட்டியாக வாழ்வது மிக சிறப்பு. கடவுள் உங்களுக்கு நற்பயனை தந்துள்ளார். நல்லவராக இருப்பதென்பது அவன் செயலன்றி வேறில்லை. மிக்க நன்றிகள் விண்மணி!!

    வித்யாசாகர்

    மறுமொழி
    • 12. winmani  |  11:30 முப இல் ஜூன் 4, 2010

      @ வித்யாசாகர்
      மிக்க நன்றி.

      மறுமொழி
    • 13. JAWAHAR  |  4:31 முப இல் ஜூன் 10, 2010

      unmaiyilum unmai

      மறுமொழி
      • 14. winmani  |  4:33 முப இல் ஜூன் 10, 2010

        @ JAWAHAR
        மிக்க நன்றி

  • 15. udhaya  |  2:06 பிப இல் ஜூன் 4, 2010

    voice to speech converter

    இலவச மென்பொருள் ஏதாவது உள்ளதா. தகவல் இருந்தால்
    தெரிவிக்கவும்.
    நன்றி
    உதயகுமார்
    மதுரை

    மறுமொழி
  • 16. ஜெகதீஸ்வரன்  |  4:10 பிப இல் ஜூன் 4, 2010

    என்னைப் பொருத்தவரை பிளாகரைவிடவும் வேர்டுபிரஸ் கொஞ்சம் அதிகமாகவே ஈர்க்கின்றது.,

    – ஜெகதீஸ்வரன்.

    மறுமொழி
    • 17. winmani  |  5:44 பிப இல் ஜூன் 4, 2010

      @ ஜெகதீஸ்வரன்
      மிக்க நன்றி

      மறுமொழி
  • 18. தமிழார்வன்  |  8:05 பிப இல் ஜூன் 4, 2010

    பதிவருக்கு வணக்கம்,

    தனிவலைப்பக்கம் தொடங்குவது எப்படி என்ற தங்களது பதிவு பயனுள்ளதாக இருந்ததது. வாழ்த்துக்கள்.

    மறுமொழி
    • 19. winmani  |  8:06 பிப இல் ஜூன் 4, 2010

      @ தமிழார்வன்
      மிக்க நன்றி

      மறுமொழி
  • 20. ஹக்  |  1:07 முப இல் ஜூன் 15, 2010

    வலைப்பக்க வடிவமைப்பு பற்றிய கட்டுரை எளிமை, இனிமை, வாழ்த்துக்கள். வலைப்பக்க வடிவமைப்பு சார்ந்த அனைத்து தகவல்கலளயும் ஒரு கட்டத்தினுள் தனியே எப்போதும் தெரிவதும் போல் செய்தால் மிகவும் பயனளிக்கும். நன்றி

    மறுமொழி
  • 22. Priya  |  5:08 முப இல் ஓகஸ்ட் 10, 2010

    thanks winmani.your site is awesome… plz continue ur service for us… and i want to write my blog in tamil, help me to write in. because when i choose tamil font its shows the page in tamil, cant permit to write in tamil. plz tell the procedure… thanks in advance……

    மறுமொழி

பின்னூட்டமொன்றை இடுக

Subscribe to the comments via RSS Feed


பதிவுகள் காப்பூரிமை

உங்கள் மின்னஞ்சலை
உள்ளிட்டு இவ்வலைப்பூவிற்கு
சந்தாதாரராகி,புதிய பதிவுகளை
மின்னஞ்சலில் பெறுங்கள்.

Join 2,733 other subscribers

வின்மணியின் சேவை

சிறந்த முறையில் இணையதளம் உருவாக்க GooLittle.com.நேர்மையான விலையில் சிறப்பான சேவை.

மேலும் விபரங்களுக்கு

அண்மைய பதிவுகள்

Our Sponsors

HOTEL SIVAMURUGAN KANYAKUMARI

HOTEL SIVAMURUGAN

நாள் காட்டி

ஜூன் 2010
தி செ பு விய வெ ஞா
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  

தகவல் பாதுகாப்பு

அனைத்து தகவல்களும் முறையாக Creative Common 2.5 - ஆல் காப்பிரைட் செய்யப்பட்டு வெளிவருகிறது.
Creative Commons License
winmani by winmani is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 2.5 License.

நம் வின்மணி இணைப்பு உங்க தளத்தில் கொடுக்க…

உடனுக்குடன் பெற

winmani

winmani.com

www.winmani.com

TNPSC Ebook

TNPSC Group 1, Group 2,Group 3, Group 4 மற்றும் VAO தேர்வில் அடிக்கடி கேட்கப்பட்ட 3000 வினாக்கள் கொண்ட சிறப்பு இ-புத்தகம். மேலும் விபரங்களுக்கு...