Archive for ஜூன் 12, 2010

நம் டிவிட்டரின் முகப்பு பக்கத்தை அழகானதாக மாற்றலாம்.

டிவிட்டரில் சிலரின் முகப்பு பக்கம் பார்க்க அழகானதாக
இருக்கும் நம்முடைய முகப்பு பக்கமும் அதுபோல்
அழகானதாக மாற்றுவது எப்படி என்பதைப்பற்றி தான்
இந்த பதிவு.

படம் 1

இதற்காக போட்டோஷாப் போன்ற எந்த மென்பொருளும்
தேவையில்லை எளிதாக அதுவும் ஆன்லைன் மூலம் சில
நிமிடங்களில் நம் டிவிட்டரின் முகப்பு பக்கத்தை அழகான
தாக மாற்றலாம்.பல இணையதளங்கள் டிவிட்டர் முகப்பு
பக்கதை அழகுபடுத்தி கொடுப்பதற்க்காக இருந்தாலும் நாம்
அதில் நம் டிவிட்டரின் பயனாளர் பெயர் மற்றும் கடவுச்சொல்
கொடுத்து தான் மாற்ற முடியும் ஆனால் இந்த தளத்தில் நாம்
டிவிட்டரின் எந்த தகவலையும் கொடுக்காமல் எளிதாக
டிவிட்டரின் அழகான முகப்பு பக்கம் உருவாக்கலாம்.

இணையதள முகவரி : http://freetwitterdesigner.com

படம் 2

படம் 3

இந்த இணையதளத்திற்க்கு சென்றதும் படம் 1-ல் இருப்பது
போல் Use without signing in என்பதை தேர்ந்தெடுத்து
கொள்ளவும் அடுத்து வரும் திரையில் (படம் 2) உங்களுக்கு
பிடித்த டிசைனை தேர்ந்தெடுத்து ” Let’s Get Started ” என்ற
பொத்தானைஅழுத்தவும் அடுத்து வரும் திரை படம் 3-ல்
காட்டப்பட்டுள்ளது இதில் வலது பக்கம் இருக்கும்  control
box -ல் நமக்கு பிடித்த வார்த்தை மற்றும் நமக்கு பிடித்த
படங்களையும் வண்ணங்களையும் தேர்ந்தெடுத்து
கொள்ளவும். எல்லாம் தேர்ந்தெடுத்து முடித்த பின் Generate Image
என்ற பொத்தனை அழுத்தி படத்தை நம் கணினியில்
சேமித்துக் கொள்ளவும்.இனி இதை எப்படி நம் டிவிட்டரில்
சேர்ப்பது என்பதை பற்றி பார்க்கலாம்.

படம் 4

டிவிட்டரில் உங்கள் கணக்கை திறந்து கொள்ளவும் அடுத்து
settings என்பதை அழுத்தி அதில் “Design tab ” என்பதை
தேர்ந்தெடுக்கவும் அடுத்து Change Background Image
என்பதை அழுத்து நாம் கணினியில் சேமித்து வைத்த
படத்தை தேர்ந்தெடுத்து கொள்ளவும். இனி நாம் உருவாக்கிய
அழகான படம் நம் டிவிட்டரிம் முகப்பு பக்கமாக
மாற்றப்பட்டிருக்கும். இதே தளத்தில் நம் டிவிட்டர் கணக்கை
திறந்து எளிதாக முகப்பு பக்கத்தை மாற்றம் செய்யலாம்
என்றாலும் யாரிடமும் நம் டிவிட்டர் பாஸ்வேர்ட் கொடுப்பது
நல்லது அல்ல என்ற காரணத்தில் தான் இந்த முறையை
நாம் தேர்ந்தெடுத்துள்ளோம்.

வின்மணி சிந்தனை
ஒருவன் வளர்ச்சிக்காக நீ பாடுபட்டால் கண்டிப்பாக
உன் வளர்ச்சிக்கா இறைவன் ஏதாவது வழியில்
உதவி செய்வான்.
TNPSC  Questions  Group 1,Group 2,Group 3,Group 4
கடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட
வினாக்கள் மற்றும் பதில்கள்
1.வேப்ப இலையில் உள்ள வைட்டமின் எது ?
2.நம் கண்களின் விட்டம் எத்தனை செண்டி மீட்டர் ?
3.லேசர் கதிர் எப்போது உருவாக்கப்பட்டது ?
4.பெயிண்ட் தயாரிப்பில் உதவும் உலோகம் ?
5.’கண்ணாடி சோப்பு’ என்று அழைக்கப்படுவது எது ?
6.வடதுருவத்திற்க்கு சென்ற முதல் பெண்மணி யார் ?
7.’இந்திய ஒருமைப்பாட்டு தினமாக கொண்டாடப்படும் நாள் எது?
8.ராஜா செல்லையா கமிட்டி எதற்காக வடிவமைக்கப்பட்டது ?
9.எந்த மொழியில் அதிக எண்ணிக்கையில் நாளிதழ்கள் 
  வருகின்றன ?
10.’டிஸ்கவரி ஆப் இந்தியா ‘ யாரால் எழுதப்பட்டது ?
பதில்கள்:
1.வைட்டமின் ஏ, 2.இரண்டு செ.மீ,3.1951,4.காரீயம்,
5.மாங்கனீசு, 6.ப்ரான் டாப்ஸ்,7.நவம்பர் 19,
8.வரிச் சீர்திருத்தம்,9.உருது,10.ஜவஹர்லால் நேரு
இன்று ஜூன் 12 
பெயர் : பத்மினி ,
பிறந்த தேதி : ஜூன் 12, 1932
பிரபல இந்திய நடிகை ஆவார். தமிழ்,தெலுங்கு,
மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய 
மொழிப்படங்களில் நடித்தும் நாட்டியமாடியும்
 புகழ் பெற்றவர்.நாட்டியப் பேரொளி
எனப் பெயர் எடுத்தவர்.

PDF ஆக தறவிரக்க இங்கே சொடுக்கவும்

ஜூன் 12, 2010 at 6:25 பிப 5 பின்னூட்டங்கள்


பதிவுகள் காப்பூரிமை

உங்கள் மின்னஞ்சலை
உள்ளிட்டு இவ்வலைப்பூவிற்கு
சந்தாதாரராகி,புதிய பதிவுகளை
மின்னஞ்சலில் பெறுங்கள்.

Join 2,729 other followers

வின்மணியின் சேவை

சிறந்த முறையில் இணையதளம் உருவாக்க GooLittle.com.நேர்மையான விலையில் சிறப்பான சேவை.

மேலும் விபரங்களுக்கு

அண்மைய பதிவுகள்

Our Sponsors

HOTEL SIVAMURUGAN KANYAKUMARI

HOTEL SIVAMURUGAN

நாள் காட்டி

ஜூன் 2010
தி செ பு விய வெ ஞா
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  

டிவிட்டரில் நம்மோடு சேர…

தகவல் பாதுகாப்பு

அனைத்து தகவல்களும் முறையாக Creative Common 2.5 - ஆல் காப்பிரைட் செய்யப்பட்டு வெளிவருகிறது.
Creative Commons License
winmani by winmani is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 2.5 License.

நம் வின்மணி இணைப்பு உங்க தளத்தில் கொடுக்க…

உடனுக்குடன் பெற

winmani

winmani.com

www.winmani.com

TNPSC Ebook

TNPSC Group 1, Group 2,Group 3, Group 4 மற்றும் VAO தேர்வில் அடிக்கடி கேட்கப்பட்ட 3000 வினாக்கள் கொண்ட சிறப்பு இ-புத்தகம். மேலும் விபரங்களுக்கு...

%d bloggers like this: