Archive for ஜூன் 6, 2010
மாடுகளை மகிழ்விக்க எல்ஈடி LED டிவி ஸ்பெஷல் ரிபோர்ட்
மாடுகளை மகிழ்வித்து அதனிடம் இருந்த அதிக அளவு பாலைப்
பெறுவதற்க்காக புதிதாக LED ஒன்று வந்துள்ளது இதைப்பற்றிய
ஒரு சிறப்பு பதிவு.
மாடுகளை அடர்ந்த புல் வெளி நிறைந்த காட்டுக்குள் கொண்டு சென்று
மேயவிட்டால் தான் அதை மகிழ்விக்க முடியும் என்பதெல்லாம் இனி
தேவையில்லை சாதாரனமாக நாம் ஒரே இடத்தில் கட்டிப்போட்டுக்
கொண்டே அதன் மனதை மகிழ்ச்சியாக மாற்றி அதனிடம் இருந்து
அதிக அளவு பாலை பெறமுடியும் என்பதை ரஷ்ய விஞ்ஞானிகள்
நிரூபித்துள்ளனர்.
மாடுகளை அடைத்திருக்கும் தொழுவத்தில் புதிதாக LED டிவி
ஒன்றை சரியான கோண்த்தில் வைத்து அதை மாடு பார்க்கும்
வண்ணம் வடிவமைத்துள்ளனர். அந்த LED டிவியில் எப்போதும்
பச்சை பசேல் என்று வளர்ந்திருக்கும் புல்வெளிகளை காட்டுகின்றனர்
மாடுகளும் அதைப் பார்த்துக்கொண்டே அங்கு இருக்கும் உணவை
சாப்பிடுகிறது. மாடுகள் எங்கும் கொண்டு செல்லாமல் இருக்கும்
இடத்திலிருந்தே புல் வெளிக்கு சென்றது போல் ஒரு உணர்வு
ஏற்படுவதால் அதிக அளவு பால் கொடுக்கிறது. இந்த LED டிவியில்
தொடர்ச்சியாக எப்போதும் புல்வெளி நிறைந்த காட்சிகள் வந்து
கொண்டே இருக்கும். ஒரு மாட்டு தொழுவத்திற்கு மொத்தமாக
இவர்களே வந்து LED டிவியை சரியான கோனத்தில் அமைத்து
கொடுக்கின்றனர். இதைப் பற்றிய சிறப்பு படங்களையும் இத்துடன்
இணைத்துள்ளோம்.
வின்மணி சிந்தனை ஆயிரம் பொன் பணம் கொடுத்தாலும் , தனக்கு துரோகம் செய்தாலும் தான் கற்ற கலையை அடுத்தவருக்கு எதிராக பயன்படுத்தாதவன் தான் வல்லவன்.
TNPSC Questions Group 1,Group 2,Group 3,Group 4 கடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட வினாக்கள் மற்றும் பதில்கள் 1.’ஐங்கடல் நாடு’ என்று அழைக்கப்படுவது எது ? 2.தமிழில் முதல் பேசும் படம் எது ? 3.ஒரு நிமிடத்திற்க்கு 200 முறை சுவாசிக்கும் உயிரினம் எது ? 4.சரிஸ்கா புலி பூங்கா எங்கே உள்ளது ? 5.அக்பர் பின்பற்றிய ஷெர்ஷாவின் சீர்திருத்தம் எது ? 6.இந்தியாவின் முதல் பெண் குதிரைப் பந்தய வீராங்கனை யார்? 7.வாத்து இனங்கள் எத்தனை ? 8.’வால்ட் டிஸ்னி’எத்தனை ஆஸ்கார் விருதுகளை பெற்றுள்ளது? 9.முதன்முதலில் கட்டுமான கோவில்களை கட்டிய மன்னர் யார்? 10.முதன்முதலாக கேள்விக்குறி பயன்படுத்தப்பட்ட மொழி எது? பதில்கள்: 1.ஆசியா, 2. காளிதாஸ், 3.எலி, 4.மத்தியப்பிரதேசம், 5.நில வருவாய் சீர்திருத்தம்,6.ஆயிஷா காப்டன்,7.180, 8. 32 , 9.ராஜசிம்மன்,10.லத்தீன் மொழி
இன்று ஜூன் 6பெயர் : அலெக்சாண்டர் புஷ்கின் , பிறந்த தேதி : ஜூன் 6, 1799 ரஷ்ய மொழியில் காதல் காவியங்கள் படைத்த ஒரு சிறந்த எழுத்தாளர். இவர் நவீன ரஷ்ய இலக்கியத்தின் நிறுவனராகவும் மிகப்பெரிய கவிஞராகவும் பலராலும் கருதப்படுகிறார்.புஸ்கின் தனது கவிதைகளிலும் நாடகங்களிலும் உரைநடையைக் கையாள்வதில் முன்னோடியாகவிருந்தார்.