Archive for ஜூன் 30, 2010
ஹரிபாட்டர் அடுத்த தொழில்நுட்ப வேட்டைக்கு தயார் சிறப்பு விடியோவுடன்
ஹாரிபாட்டர் கதையின் அடுத்த டெட்த்லி ஹாலோஸ் படத்தின்
திரைக்காட்சிகள் முழுமை பெற்ற நிலையில் இதன் சிறப்பு விடியோ
காட்சி வெளியீடப்பட்டுள்ளது இதைப்பற்றிதான் இந்த பதிவு.
காட்சிகளில் வேகம் தொழில்நுப்டத்தில் பிரம்மாண்டம் பெரிய நடிகர்
இல்லாவிட்டாலும் சக்கைபோடு போடும் ஒரு குழந்தைகளுக்காகன
கதையை மையமாகக்கொண்டு வெளிவந்திருக்கும் ஹரிபாட்டர்
படத்தின் அடுத்த தொடருக்கான படம் தயார். ஹரிபாட்டர் படத்தில்
மாயாஜால வேலைகளுக்கு பஞ்சமே இருக்காது என்பதால்
கிராபிக்ஸ்-லும் 3D -யிலும் அதிவேக மாற்றம் புதுமை என
அனைத்தையும் கொண்டு தயாராகிவிட்டது ஹரிபாட்டர் டெட்த்லி
ஹாலோஸ்,இரண்டு பகுதிகளாக வெள்வர இருக்கும் இந்த
திரைப்படத்தின் முதல் பாகம் இந்த ஆண்டு நவம்பர் மாதமும்
இரண்டாம் பாகம் ஜூலை 2011 ஆம் ஆண்டும் வெளிவர இருக்கிறது.
இதன் சிறப்பு காட்சிகள் பிரம்மாண்டத்தை மட்டுமல்ல பிரமிப்பையும்
ஏற்படுத்துவதாக உள்ளது. இதன் சிறப்பு விடியோவையும் இத்துடன்
இணைத்துள்ளோம்.
வின்மணி சிந்தனை அளவான பணமும் நோயில்லாத வாழ்க்கையும் நமக்கு இறைவன் கொடுத்தால் அதைவிட சிறப்பானது ஒன்றுமில்லை
TNPSC Questions Group 1,Group 2,Group 3,Group 4 கடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட வினாக்கள் மற்றும் பதில்கள் 1.இதுவரை அறியப்பட்டுள்ள வைட்டமின்கள் எத்தனை ? 2.பாலே நடனம் எங்கு பிறந்தது ? 3.முள்ளங்கி கிழங்கா வேரா? 4.18 ச.கி.மீ பரப்பளவே உள்ள நாடு எது ? 5.உலகின் ஒரே நாத்திக நாடு எது ? 6.கத்தியால் வெட்டக்கூடிய பாறை எது ? 7.ஆங்கில எழுத்துக்களில் அதிகம் பயன்படக்கூடிய எழுத்து ? 8.ஒளி புகக் கூடிய உலோகம் எது ? 9.நோபல் பரிசு எப்போதிலிருந்து வழங்கப்படுகிறது ? 10.மேக்கப் முறையை கண்டுபிடித்தவர் யார் ? பதில்கள்: 1.25, 2.இத்தாலி,3.வேர்,4.எமானகோ, 5.அல்பேனியா, 6.சோப்ஸ்டோன்,7.E,8.மைக்கா, 9.1901ஆம் ஆண்டிலிருந்து,10.மேக்ஸ்ஃபாக்டர்.
இன்று ஜூன் 29பெயர் : வ. ஐ. சுப்பிரமணியம் , மறைந்த தேதி : ஜூன் 29, 2009 மொழியியல் அறிஞரும் தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் முதல் துணைவேந்தரும் ஆவார்.கேரளப் பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறை வளர்ச்சியிலும் மொழியியல் துறை வளர்ச்சியிலும் மிகப்பெரிய பங்களிப்பு செய்தவர்.