நம் உடலை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ள வீடியோவுடன் உடற்பயிற்சி கொடுக்கும் தளம்.

ஜூலை 4, 2011 at 7:50 முப 5 பின்னூட்டங்கள்

ஆரோக்கியமான உடலில் நோய் நெருங்காது என்பது பழமொழி அந்த வகையில் நம் உடலை கட்டுக்கோப்பாகவும் பாதுகாப்பாகவும் வைத்துக்கொள்ள உதவுவது தான் உடற்பயிற்சி, உடற்பயிற்சி கூடத்திற்கு செல்ல நேரம் இல்லையா இனி கவலை வேண்டாம் இருக்கும் இடத்தில் இருந்து உடற்பயிற்சி எப்படி செய்ய வேண்டும் என்பதை சொல்ல ஒரு தளம் உள்ளது இதைப்பற்றித்தான்  இந்தப்பதிவு.

படம் 1

மனித உடலை சரியான முறையில் உடற்பயிற்சி மூலம் பழக்கப்படுத்தி மிடுக்கான உடலையும் நோய் இல்லாத வாழ்வையும் பெறலாம் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று தான் இருந்தும் நாம் உடற்பயிற்சிக்கு முக்கியத்துவம் கொடுக்காததற்கு காரணம் நேரமின்மை தான் , ஆனால் இனி நேரம் இல்லை என்றெல்லாம் சொல்ல முடியாது ஆம் எப்போது வேண்டுமானாலும் உடற்பயிற்சி  பற்றிய தகவல்களை நமக்கு வீடியோவுடன் சொல்ல ஒரு தளம் உதவுகிறது.

இணையதள முகவரி : http://www.bodybuilding.com/fun/bbmaintrain.htm

இத்தளத்திற்கு சென்று உடற்பயிற்சியின் அடிப்படை வீடியோவை ஒவ்வொன்றாக இலவசமாக பார்க்கலாம். ஒவ்வொரு வீடியோவும் தனித்தனி உடற்பயிற்சியை நமக்கு அளிப்பதாக உள்ளது,  இந்த பயிற்சியை எப்படி செய்ய வேண்டும் என்பதில் தொடங்கி எத்தனை நிமிடங்கள் செய்ய வேண்டும் , இந்த பயிற்சி செய்வதால் ஏற்படும் பயன் என்ன என்பது வரை அத்தனை தகவல்களையும் துல்லியமாக  கொடுக்கின்றனர், குண்டாக இருப்பவர்கள் ஒல்லியாகவும் , ஒல்லியாக இருப்பவர்கள் சற்று குண்டாகவும் எந்த விதமான  உடற்பயிற்சிகள் இருக்கிறது என்பதைக்கூட எளிதாக தெரிந்து கொள்ளலாம். நமக்கு ஒய்வு நேரம் கிடைக்கும் போது இது போன்ற  வீடியோக்களை பார்த்து அடிப்படை உடற்பயிற்சிகளை வீட்டில் இருந்தபடியே செய்யலாம். ஆண்களுக்கு மட்டுமின்றி பெண்களும் தங்கள் உடலை அழகாக வைத்துக்கொள்ள பல உடற்பயிற்சிகளையும் இத்தளம் வீடியோவுடன் சொல்லிக்கொடுக்கிறது. உடற்பயிற்சி செய்ய விரும்பும் நண்பர்களுக்கும் , உடலை 6 -PACK ஆக மாற்ற விரும்பும் அனைவருக்கும் இந்தப்பதிவு பயனுள்ளதாக இருக்கும்.

நம் உடல் வியாதிகளுக்கு தீர்வு சொல்ல இலவச மருத்துவர் இருக்கிறார்.

திறமையான ‘சுடோ’ சுடுக்கு பேப்பரில் பிரிண்ட் செய்து விளையாடலாம்

ஆங்கில சொல்வளத்தை அதிகரிக்கும் ஆன்லைன் விளையாட்டு.

மருத்துவரிடம் இலவச ஆலோசனை பெற முத்தான மூன்று இணையதளங்கள்.

 
வின்மணி இன்றைய சிந்தனை
கோபத்தில் செய்யும் சிறு செயல்கள் கூட நம் மனதில்
இருக்கும் அன்பை மறக்க செய்துவிடுகிறது.
 
TNPSC  Questions  Group 1,Group 2,Group 3,Group 4 
கடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட
வினாக்கள் மற்றும் பதில்கள்
1.அமராவதி எந்த நதியின் துணை ஆறு ? 
2.தமிழ்நாட்டின் தொன்மையான விளையாட்டு எது ?
3.தமிழ்நாட்டில் அலுமினிய ஆலை உள்ள இடம் எது ?
4.ஆற்காட்டு வீரர் என அழைக்கப்பட்டவர் யார் ?
5.பான தீர்த்தம் நீர்விழ்ச்சி ஏற்படுத்தும் ஆறு எது ?
6.முதுமலை சரணாலயம் எதற்கு பெயர் பெற்றது ?
7.மணிமேகலை நூலை எழுதியவர் யார் ?
8.திண்டுக்கல் கோட்டையை கட்டியவர் யார் ?
9.முதல் உழவர் சந்தை தொடங்கப்பட்ட இடம் எது ?
10.லீலாவதி என்பது என்ன ?
பதில்கள்
1.காவேரி, 2.கபடி, 3.மேட்டூர், 4.இராபர்ட் கிளைவ்,
5.தாமிரபரணி,6.யானைகள்,7.சீத்தலை சாத்தனார்,
8.திப்பு சுல்தான், 9.அண்ணாநகர் (மதுரை), 
10.சிறந்த கணிதப் புத்தகம்.
 
இன்று ஜூலை 4 
பெயர் : சுவாமி விவேகானந்தர்,
மறைந்ததேதி : ஜூலை 4 , 1902
இராமகிருஷ்ண பரமஹம்சரின் சீடர்,
நம் இந்திய தேசத்திற்காகவே வாழ்ந்து
காட்டியவர். 1893 ஆம் ஆண்டு அவர்
சிகாகோவின் பாராளுமன்றத்தில் நிகழ்த்திய
சொற்பொழிவுகள் உலகப்புகழ் பெற்றது.
உங்களால் நம் தேசத்திற்கு பெருமை.

PDF ஆக தறவிரக்க இங்கே சொடுக்கவும்

Entry filed under: அனைத்து பதிவுகளும், இணையதளம், தொழில்நுட்ப செய்திகள், பயனுள்ள தகவல்கள். Tags: .

கணிதத்தை அனிமேசனுடன் வேடிக்கையாக சொல்லி கொடுக்கும் பயனுள்ள தளம். நாம் விரும்பும் வண்ணத்தில் எந்த இணையதளத்தையும் மாற்றி பார்க்கலாம் புதுமையான தளம்.

5 பின்னூட்டங்கள் Add your own

  • 1. சுகுமாரன்.சீ.அ,  |  8:32 பிப இல் ஜூலை 5, 2011

    நலம் தரும் செய்தி.தொடர்ந்து தாருங்கள்.

    மறுமொழி
    • 2. winmani  |  10:01 பிப இல் ஜூலை 5, 2011

      @ சுகுமாரன்.சீ.அ
      மிக்க நன்றி

      மறுமொழி
  • 3. Life Direction Network  |  10:38 பிப இல் ஜூலை 5, 2011

    துறை வாரியாக ஒவ்வொரு நாளும் வெவ்வேறு 
    பயனுள்ள தகவலை தொடர்ந்து வழங்குகிறீர்கள் நன்றி.

    மறுமொழி
    • 4. winmani  |  10:43 பிப இல் ஜூலை 5, 2011

      @ Life Direction Network
      மிக்க நன்றி நண்பரே.

      மறுமொழி
  • 5. venki  |  3:12 பிப இல் ஓகஸ்ட் 16, 2011

    dindigul fort was construction started by muthu krihnappa naickar
    and finished by thriumalai naickar. tippu sultan lived in dindigul fort sir.

    மறுமொழி

பின்னூட்டமொன்றை இடுக

Subscribe to the comments via RSS Feed


பதிவுகள் காப்பூரிமை

உங்கள் மின்னஞ்சலை
உள்ளிட்டு இவ்வலைப்பூவிற்கு
சந்தாதாரராகி,புதிய பதிவுகளை
மின்னஞ்சலில் பெறுங்கள்.

Join 2,733 other subscribers

வின்மணியின் சேவை

சிறந்த முறையில் இணையதளம் உருவாக்க GooLittle.com.நேர்மையான விலையில் சிறப்பான சேவை.

மேலும் விபரங்களுக்கு

அண்மைய பதிவுகள்

Our Sponsors

HOTEL SIVAMURUGAN KANYAKUMARI

HOTEL SIVAMURUGAN

நாள் காட்டி

ஜூலை 2011
தி செ பு விய வெ ஞா
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031

தகவல் பாதுகாப்பு

அனைத்து தகவல்களும் முறையாக Creative Common 2.5 - ஆல் காப்பிரைட் செய்யப்பட்டு வெளிவருகிறது.
Creative Commons License
winmani by winmani is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 2.5 License.

நம் வின்மணி இணைப்பு உங்க தளத்தில் கொடுக்க…

உடனுக்குடன் பெற

winmani

winmani.com

www.winmani.com

TNPSC Ebook

TNPSC Group 1, Group 2,Group 3, Group 4 மற்றும் VAO தேர்வில் அடிக்கடி கேட்கப்பட்ட 3000 வினாக்கள் கொண்ட சிறப்பு இ-புத்தகம். மேலும் விபரங்களுக்கு...