இலத்தீன் மொழியில் இணையதளமுகவரி தொடக்கம் மெகா சாதனை

மே 9, 2010 at 6:04 பிப 8 பின்னூட்டங்கள்

உலகஅளவில் இணையதளமுகவரி அனைத்தும் ஆங்கிலமொழி-ஐ
மையமாகக்கொண்டு தான் செயல்பட்டுவருகிறது சமீபத்தில் இனி
இணையதளங்களின் பெயர் அந்தந்த நாட்டின் மொழிகளில்
வரவிருக்கிறது என்ற செய்தி தெரிந்தது தான் இப்போது அதன்
தொடக்கமாக முதல் இணையதள முகவரியை இலத்தீன் மொழியில்
ஆரம்பித்துள்ளனர் இதைப்பற்றித்தான் இந்த பதிவு.

இணைய உலகில் புதிய அத்தியாயம் தொடக்கம் என்று கூறினால்
தான் சரியாக இருக்கும் இண்டர்நெட்டில் இணையதளமுகவரிகளை
பதிவு செய்யும் ICANN (Internet Corporation for Assigned Names and Numbers)
புதிதாக இலத்தீன் மொழியில் அரேபி பெயரை இணையதள
முகவரியாக வைத்து சோதித்து வெற்றியும் பெற்றுள்ளது.
அவர்களுடைய மொழியில் இணையதளத்தின் பெயரை
நாம் இணைய உலாவியின் address bar- ல் கொடுத்தால் போதும்
அவர்களின் மொழியிலே யார் வேண்டுமானாலும் பார்க்கலாம்.
சற்று விரிவாக பார்க்க வேண்டும் என்றால் இனி இணையதளங்களின்
முகவரி தமிழ் மொழியில் அதாவது தமிழ்நாடு.கொம் என்று
கொடுத்தால் போதும் ஆங்கில வார்த்தையை கொடுப்பதற்க்கு
பதில் தமிழ் வார்த்தையை முகவரியாக வைக்கலாம். இதன் சோதனை
முயற்ச்சியாகத்தான் இப்போது அரேபி மொழியில் வைத்துள்ளனர்.
அதன் முகவரி http://موقع.وزارة-الأتصالات.مصر/
இப்போதைக்கு இதில் ஒரு சிறிய குறை என்னவென்றால் இந்த தளத்தின்
பெயரை நாம் Mozilla Firefox 3.6.3 மற்றும் Google Chrome உலாவியில்
மட்டுமே பயன்படுத்த முடியும் இப்போதைக்கு இந்த பெயரை
IDN (International Domain Name) அங்கீகரித்துள்ளனர். விரைவில்
தமிழிலும் இணையதளப்பெயர்கள் வரும் என்பதில் எந்த
சந்தேகமும் இல்லை.

வின்மணி சிந்தனை
ஏமாறுபவனாக இருந்தாலும் ஏமாற்றுபவனாக
இருக்காதீர்கள் காலம் கண்டிப்பாக உரிய
தண்டனையை உரியவருக்கு கொடுக்கும்.
TNPSC  Questions  Group 1,Group 2,Group 3,Group 4
கடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட
வினாக்கள் மற்றும் பதில்கள்
1.புறஊதாக் கதிர்களை உருவாக்கும் மூலம் எது ?  
2.உலகின் மிகப்பெரிய இரயில் நிலையம் எங்குள்ளது ?
3.நீரில் கரையாத சர்க்கரை எது ?   
4.பசு எத்தனை மாதத்தில் கன்று ஈனும் ?    
5.நாக்குப்பூச்சியின் இருப்பிடம் எது ?  
6.சூயஸ் கால்வாய் எப்போது திறக்கப்பட்டது ?   
7.வைகை அனை எந்த மாவட்டத்தில் உள்ளது ?   
8.இந்தியாவின் இரண்டாவது ஜனாதிபதி யார் ?
9.ஈராக்கின் தலைநகரம் எது ?   
10.பூவாது காய்க்கும் மரங்கள் எவை ?  
பதில்கள்:
1.சூரியன்,2. நீயூயார்க், 3. பாலிசேக்ரைட்,4.பத்து மாதத்தில்
5.மனிதக்குடல் , சோழர்கள்,6.1869, 7.தேனி,
8. டாக்டர் இராதாகிருஷ்ணன் 9.பாக்தாத்,10.பலா,அத்தி,ஆல்
இன்று மே 9 
பெயர் : அன்னமாச்சாரியார்,
பிறந்த தேதி : மே 9, 1408
15ம் நூற்றாண்டில் தென்னிந்தியாவில்
வாழ்ந்த கர்நாடக இசைக் கலைஞர். திருப்பதி
வெங்கடேஸ்வரர் கோயிலுடன் மிக நெருங்கிய
தொடர்பு கொண்டிருந்தவர். வெங்கடேஸ்வரர்
மீது அவர் பாடிய சங்கீர்த்தனைகள் என்ற
பஜனைப் பாடல்கள் புகழ்பெற்றவை.

PDF ஆக தறவிரக்க இங்கே சொடுக்கவும்

Entry filed under: அனைத்து பதிவுகளும், இணையதளம், தொழில்நுட்ப செய்திகள், பயனுள்ள தகவல்கள். Tags: .

உலகத்தமிழ் முக்கியச்செய்திகள் அனைத்தையும் பகுதி வாரியாக காட்டும் பயனுள்ளதளம் 3D-ல் பிடித்த வடிவங்களை எளிதாக ஆன்லைன் மூலம் உருவாக்கலாம்

8 பின்னூட்டங்கள் Add your own

  • 1. கிரி  |  12:14 முப இல் மே 10, 2010

    தகவலுக்கு நன்றி

    மறுமொழி
  • 3. mohamed khaiyum  |  2:54 முப இல் மே 10, 2010

    கசோலைகளில் எப்படி பெயர், தொகை எழுத்தாலும் எண்ணலும் பூர்த்தி செய்து நம் பிரிண்டரில் எடுப்பது. மேலும் letter head pad யில் எப்படி விவரங்களை எழுதி பிரிண்டரில் எடுப்பது

    மறுமொழி
    • 4. winmani  |  3:11 பிப இல் மே 10, 2010

      @ mohamed khaiyum
      மைக்ரோசாப்ட் வேர்டு -ல் எளிதாக செய்யலாம் ஏற்கனவே அதில் Template என்பதில் இந்த letter head உருவாக்குவதற்க்கு எளிதான வழிமுறை உள்ளது. முயற்ச்சித்துப்பாருங்கள்.

      மறுமொழி
  • 5. Rajasurian  |  5:02 முப இல் மே 10, 2010

    தமிழில் இணைய தள பெயர்கள் வரும் இனிய நாளை எதிர் நோக்கி உள்ளேன்.

    மறுமொழி
    • 6. winmani  |  2:59 பிப இல் மே 10, 2010

      @ Rajasurian
      கண்டிப்பாக விரைவில் வரும் நாமும் எதிர்பார்த்து கொண்டிருக்கிறோம்.
      மிக்க நன்றி

      மறுமொழி
  • 7. chutti  |  4:22 பிப இல் மே 10, 2010

    நீங்கள் நன்றாக எழுதுகின்றீர்,
    சில கணினி நுணுக்கங்களை பற்றி எழுதலாமே?எடுத்துக்காட்டிற்கு கணினியின் பைல்ஸ் பற்றி சொல்லலாம்.
    நன்றி,
    விண்மணி.

    மறுமொழி
    • 8. winmani  |  4:27 பிப இல் மே 10, 2010

      @ chutti
      மிக்க ந-ன்றி , விரைவில் தொடங்கலாம்.

      மறுமொழி

பின்னூட்டமொன்றை இடுக

Subscribe to the comments via RSS Feed


பதிவுகள் காப்பூரிமை

உங்கள் மின்னஞ்சலை
உள்ளிட்டு இவ்வலைப்பூவிற்கு
சந்தாதாரராகி,புதிய பதிவுகளை
மின்னஞ்சலில் பெறுங்கள்.

Join 2,725 other subscribers

வின்மணியின் சேவை

சிறந்த முறையில் இணையதளம் உருவாக்க GooLittle.com.நேர்மையான விலையில் சிறப்பான சேவை.

மேலும் விபரங்களுக்கு

அண்மைய பதிவுகள்

Our Sponsors

HOTEL SIVAMURUGAN KANYAKUMARI

HOTEL SIVAMURUGAN

நாள் காட்டி

மே 2010
தி செ பு விய வெ ஞா
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

தகவல் பாதுகாப்பு

அனைத்து தகவல்களும் முறையாக Creative Common 2.5 - ஆல் காப்பிரைட் செய்யப்பட்டு வெளிவருகிறது.
Creative Commons License
winmani by winmani is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 2.5 License.

நம் வின்மணி இணைப்பு உங்க தளத்தில் கொடுக்க…

உடனுக்குடன் பெற

winmani

winmani.com

www.winmani.com

TNPSC Ebook

TNPSC Group 1, Group 2,Group 3, Group 4 மற்றும் VAO தேர்வில் அடிக்கடி கேட்கப்பட்ட 3000 வினாக்கள் கொண்ட சிறப்பு இ-புத்தகம். மேலும் விபரங்களுக்கு...