இணையத்தில் உள்ள வீடியோவை ஒரே சொடுக்கில் விரும்பிய Format-க்கு மாற்றலாம்.

திசெம்பர் 7, 2011 at 10:15 முப 4 பின்னூட்டங்கள்

இணையத்தில் கிடைக்கும் பலவகையான வீடியோக்களில் நமக்கு பிடித்த வீடியோக்களை ஒரே சொடுக்கில் சில நிமிடங்களில் நம் கணினியில் விரும்பிய ஃபார்மெட்-ஆக மாற்றி சேமிக்கலாம் நமக்கு உதவுவதற்காக ஒரு தளம் உள்ளது இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.

படம் 1

இணையத்தில் இருந்து வீடியோக்களை தறவிரக்க அதிக நேரம் எடுத்துக்கொள்கிறது, சில வீடியோக்களில் ஆடியோ மட்டும் தான் நமக்கு தேவைப்படும் அப்படி ஆடியோ மட்டும் தேவைப்பட்டாலும் நாம் முழுவீடியோவையும் தறவிரக்கி தான் கேட்க முடியும். இனி இணையத்தில் உள்ள வீடியோ முகவரியை கொடுத்து விரும்பிய ஃபார்மெட்டுக்கு எளிதாக மாற்ற ஒரு தளம் உதவுகிறது.

இணையதள முகவரி : http://www.convertvideotoaudio.com

இத்தளத்திற்கு சென்று படம் 1-ல் காட்டியபடி URL என்று உள்ள கட்டத்திற்குள் எந்த தளத்தின் வீடியோவை மாற்ற வேண்டுமோ அந்த தளத்திம் வீடியோ முகவரியை கொடுக்கவும். அடுத்து இருக்கும் Output என்ற கட்டத்திற்குள் எந்த ஃபார்மெட்டில் நமக்கு சேமிக்க வேண்டும் என்பதையும் கொடுத்து Download என்று இருக்கும் பொத்தனை சொடுக்கினால் போதும் அடுத்து வரும் திரையில் நாம் தேர்ந்தெடுத்த வீடியோ சில நிமிடங்களில் குறிப்பிட்ட ஃபார்மெட்டுக்கு மாற்றப்பட்டு இருக்கும் இதில் இருக்கும் Download ஐகானை சொடுக்கி நம் கணினியில் எளிதாக தறவிரக்கலாம். இனி வீடியோக்களில் உள்ள ஆடியோ மட்டும் தான் வேண்டும் என்று  நினைப்பவர்கள் கூட சில நிமிடங்கள் மட்டுமே செலவு செய்து எளிதாக இத்தளத்தின் மூலம் பெறலாம். கண்டிப்பாக இந்தப்பதிவு வீடியோ ரசிகர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.

மில்லின் கணக்கில் வீடியோக்களை அள்ளி கொடுக்கும் விக்கியின் புதிய பரிமாணம் Qwiki .

பெளதிகம் மற்றும் வானியல் தொடர்புடைய அரிய 60 குறியீடுகளுக்கான விளக்கங்கள் வீடியோவுடன்.

ஆங்கிலத்தை தினமும் வீடியோ மூலம் வேடிக்கையாக கற்றுத்தரும் அசத்தலான தளம்.

டைட்டானிக் கப்பலின் அரிய பல தகவல்களை வீடியோவுடன் சொல்லும் பயனுள்ள தளம்.

 
வின்மணி சிந்தனை
சோம்பேறியாக இருப்பவனால் தான் உலகிற்கு பல
புதிய கண்டுபிடிப்புகள் கிடைக்கிறது.
 
இன்று டிசம்பர் 7

பெயர் : நோம் சோம்சுக்கி ,
பிறந்ததேதி : டிசம்பர் 7, 1928
அமெரிக்காவில் வாழும் ஓர் பேரறிஞர். பல 
துறைகளில் அடிப்படையான அறிவாக்கங்கள் 
தந்திருக்கின்றார். மொழியியல் துறையில் 
தோற்றுவாய் இலக்கணம் (generative grammar)
என்னும் அறிவுக்கொள்கையை முன்வைத்தவர். உள்ளம்,
அறிவுத்திறன், உள்ளறிவு, உள்ளுணர்தல் முதலியவற்றைத்
தொடர்பு கொள்ளும் அறிதிறன் அறிவியல் (cognitive science)
என்னும் துறையில் பெரும் புரட்சியைத் தூண்டியவர் இவர்.

PDF ஆக தறவிரக்க இங்கே சொடுக்கவும்

Entry filed under: அனைத்து பதிவுகளும், ஆன்லைன் வேலை, இணையதளம், தொழில்நுட்ப செய்திகள், பயனுள்ள தகவல்கள். Tags: .

நம்மை நீக்குபவர்களை கண்டுபிடிக்க உதவும் கூகிள் மைனஸ் ( Google MINUS ). நம் மெடிக்கல் மற்றும் இன்சுரன்ஸ் விபரங்களை நிர்வகிக்க உதவும் பயனுள்ள இணையதளம்.

4 பின்னூட்டங்கள் Add your own

  • 1. thiruppul123  |  4:34 பிப இல் திசெம்பர் 18, 2011

    நண்பரே!
    rmtp server வழியாக இணையத்தில் ஒளிபரப்பப்படும் வீடியோக்களை தரவிறக்குவது எப்படி? உதாரணமாக http://www.chennaistream.com/ahobilamutt

    மறுமொழி
    • 2. winmani  |  11:56 பிப இல் திசெம்பர் 18, 2011

      @ thiruppul123
      Internet Download Manager பயன்படுத்தி தரவிரக்கலாம்.
      நன்றி

      மறுமொழி
      • 3. thiruppul123  |  9:53 பிப இல் திசெம்பர் 19, 2011

        முடியவில்லை! தயவு செய்து அந்த முவரியில் சென்று தரவிறக்க முறசித்துப் பாருங்கள்.

      • 4. winmani  |  12:22 முப இல் திசெம்பர் 20, 2011

        @ thiruppul123
        Internet Download Manager பயன்படுத்தி தறவிரக்கம் செய்யுங்கள் என்று ஏற்கனவே சொல்லியாச்சு. இதை முயற்சிக்க வேண்டாம்.

பின்னூட்டமொன்றை இடுக

Subscribe to the comments via RSS Feed


பதிவுகள் காப்பூரிமை

உங்கள் மின்னஞ்சலை
உள்ளிட்டு இவ்வலைப்பூவிற்கு
சந்தாதாரராகி,புதிய பதிவுகளை
மின்னஞ்சலில் பெறுங்கள்.

Join 2,725 other subscribers

வின்மணியின் சேவை

சிறந்த முறையில் இணையதளம் உருவாக்க GooLittle.com.நேர்மையான விலையில் சிறப்பான சேவை.

மேலும் விபரங்களுக்கு

அண்மைய பதிவுகள்

Our Sponsors

HOTEL SIVAMURUGAN KANYAKUMARI

HOTEL SIVAMURUGAN

நாள் காட்டி

திசெம்பர் 2011
தி செ பு விய வெ ஞா
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  

தகவல் பாதுகாப்பு

அனைத்து தகவல்களும் முறையாக Creative Common 2.5 - ஆல் காப்பிரைட் செய்யப்பட்டு வெளிவருகிறது.
Creative Commons License
winmani by winmani is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 2.5 License.

நம் வின்மணி இணைப்பு உங்க தளத்தில் கொடுக்க…

உடனுக்குடன் பெற

winmani

winmani.com

www.winmani.com

TNPSC Ebook

TNPSC Group 1, Group 2,Group 3, Group 4 மற்றும் VAO தேர்வில் அடிக்கடி கேட்கப்பட்ட 3000 வினாக்கள் கொண்ட சிறப்பு இ-புத்தகம். மேலும் விபரங்களுக்கு...