புதுமையான முறையில் எளிதாக வெளிநாட்டு மொழி கற்க்கலாம்.

ஜூலை 6, 2010 at 7:22 பிப 8 பின்னூட்டங்கள்

வெளிநாட்டு மொழி கற்க்க வேண்டும் என்றால் நமக்கு
நேரம் கிடைக்க வில்லை என்கிறோம் ஆனால் புதுமையாகவும்
எளிதாகவும் நமக்கு நேரம் கிடைக்கும் போதும் ஆன்லைன் மூலம்
நாம் வெளிநாட்டு மொழியை கற்க்கலாம் எப்படி என்பதைப்பற்றித்
தான் இந்த பதிவு.

தமிழ் மொழி போல் இனிமையான மொழி எங்கும் இல்லை என்பது
உண்மைதான் வேற்று நாட்டு மொழிகளை கற்க்கும் ஆர்வம்
உள்ள நண்பர்களுக்கு உதவுவதற்க்காக ஒரு தளம் உள்ளது.
இந்தத் தளத்தின் சிறப்பம்சம் என்னவென்றால் புதுமையான
முறையில் எளிதாக மொழியை கற்றுக்கொடுக்கின்றனர்.
ஒரு மொழியை பேசவும் எழுதவும் புதுமையான முறையில்
விளையாட்டாகவும் முழுமையாகவும் கற்றுக்கொடுக்கின்றனர்.

இணையதள முகவரி :  http://lingt.com

இந்தத் தளத்திற்க்குச் சென்று நமக்கு என்று ஒரு கணக்கு
உருவாக்கிக் கொள்ள வேண்டும் . பின் எந்த மொழியை நாம்
கற்க்க வேண்டுமோ அந்த மொழியை எளிதாக கற்க்கலாம்.பேசவும்
எழுதவும் தனித்தனி பயிற்ச்சி அளிக்கின்றனர்.ஆரம்பத்திலிருந்து
மொழியை எப்படி கற்க்க வேண்டும் என்று நம் கையைப்பிடித்து
பயிற்ச்சி அளிக்கின்றனர். சைனிஸ் மொழியை மட்டும் இப்போது
முழுமையாக அறிமுகப்படுத்தியுள்ளனர். இதிலிருந்து நாம் எளிதாக
சைனிஸ் மொழியை பேசவும் எழுதவும் கற்றுக்கொள்ளலாம்.
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் இந்த
தளம் பயனுள்ளதாக இருக்கும்.

வின்மணி சிந்தனை
எந்த மனிதரையும் குறைவாக மதிப்பிடாதிர்கள் ,
எல்லா மனிதர்களையும் படைத்தவன் இறைவன்.
அவன் படைப்பில் எல்லோரும் மதிக்கப்பட வேண்டியவர்கள்.
TNPSC  Questions  Group 1,Group 2,Group 3,Group 4
கடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட
வினாக்கள் மற்றும் பதில்கள்
1.அமெரிக்காவின் தந்தை என்று அழைக்கப்படுபவர் யார் ?
2.’கார்ல் மார்க்ஸ்’ எந்த நாட்டைச் சேர்ந்தவர் ?
3.நீரின் கொதிநிலை என்ன ?
4.மனிதனின் சிறுநீரில் உள்ள அமிலத்தில் பெயர் என்ன ?
5.பாம்புகளே இல்லாத நாடு எது ?
6.கென்யா நாட்டின் ஆரம்ப கால பெயர் என்ன ?  
7.இந்தியாவில் 1000 -மாவது வருடத்தைக் கொண்டாடிய
 நகரம் எது ?
8.ஈபிள் டவர் எப்போது கட்டி முடிக்கப்பட்டது ?
9.சீனப்பெருஞ்சுவரின் நீளம் என்ன  ?
10.செஸ் சாம்பியன்கள் எப்போது அங்கீகரிக்கப்பட்டனர் ?
பதில்கள்:
1.ஜார்ஜ் வாஷிங்டன், 2.ஜெர்மனி,3.100 டிகிரி செல்சியஸ்,
4.யூரிக் அமிலம்,5.அயர்லாந்து,6.மாலிண்டி, 7.கட்டாக்,
8.31-3-1889,9.1684 மைல்கள், 10.1886 ஆம் ஆண்டு.
இன்று ஜூலை 5 
ஜூலை 5 - 1996  ஆம் ஆண்டு 
குளோனிங் முறையில் முதலாவது பாலூட்டி,
டோலி என்ற ஆடு ஸ்கொட்லாந்தில் பிறந்தது.
அறிவியலின் வளர்ச்சியில் இதுவும் ஒரு
மைல்கல்.

PDF ஆக தறவிரக்க இங்கே சொடுக்கவும்

Entry filed under: அனைத்து பதிவுகளும், இணையதளம், தொழில்நுட்ப செய்திகள், பயனுள்ள தகவல்கள். Tags: .

யூடியுப்-ஐ தாக்கி சைக்கிள் ஒட்டிய கணினி கொள்ளையர்கள் கணினியில் அதிவேகமாக தட்டச்சு செய்ய எளிமையான வழி

8 பின்னூட்டங்கள் Add your own

  • 1. ♠புதுவை சிவா♠  |  4:11 முப இல் ஜூலை 7, 2010

    Thanks winmani

    மறுமொழி
    • 2. winmani  |  9:04 முப இல் ஜூலை 7, 2010

      @ ♠புதுவை சிவா♠
      மிக்க நன்றி

      மறுமொழி
  • 3. Timas  |  4:58 முப இல் ஜூலை 7, 2010

    ஆங்கிலம், ஹிந்தி படிக்க மென்பொருள் –
    இனையத்தில் ஆங்கிலம் படிக்க நிறைய சிறந்த நூல்கள், தளங்கள், மென்பொருட்கள் இருக்கின்றன. ரொசெட்டா ஸ்டோன் எனப்படும் இந்த மென்பொருளையும் பரீட்சீத்து பாருங்கள்.
    http://tamilfa.blogspot.com/2010/06/blog-post_02.html

    மறுமொழி
    • 4. winmani  |  9:05 முப இல் ஜூலை 7, 2010

      @ Timas
      மிக்க நன்றி நண்பரே…

      மறுமொழி
  • 5. Elamurugan  |  9:35 முப இல் ஜூலை 9, 2010

    மிக்க நன்றி,பல புதிய தகவல்களை வாரி வழங்கும் உங்கள் பணி சிறக்க வாழ்த்துகள்

    மறுமொழி
  • 7. suresh  |  10:29 முப இல் திசெம்பர் 27, 2010

    english,hindi,telugu,kannada,malaayalam

    மறுமொழி

suresh -க்கு பதில் அளிக்கவும் மறுமொழியை நிராகரி

Subscribe to the comments via RSS Feed


பதிவுகள் காப்பூரிமை

உங்கள் மின்னஞ்சலை
உள்ளிட்டு இவ்வலைப்பூவிற்கு
சந்தாதாரராகி,புதிய பதிவுகளை
மின்னஞ்சலில் பெறுங்கள்.

Join 2,733 other subscribers

வின்மணியின் சேவை

சிறந்த முறையில் இணையதளம் உருவாக்க GooLittle.com.நேர்மையான விலையில் சிறப்பான சேவை.

மேலும் விபரங்களுக்கு

அண்மைய பதிவுகள்

Our Sponsors

HOTEL SIVAMURUGAN KANYAKUMARI

HOTEL SIVAMURUGAN

நாள் காட்டி

ஜூலை 2010
தி செ பு விய வெ ஞா
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  

தகவல் பாதுகாப்பு

அனைத்து தகவல்களும் முறையாக Creative Common 2.5 - ஆல் காப்பிரைட் செய்யப்பட்டு வெளிவருகிறது.
Creative Commons License
winmani by winmani is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 2.5 License.

நம் வின்மணி இணைப்பு உங்க தளத்தில் கொடுக்க…

உடனுக்குடன் பெற

winmani

winmani.com

www.winmani.com

TNPSC Ebook

TNPSC Group 1, Group 2,Group 3, Group 4 மற்றும் VAO தேர்வில் அடிக்கடி கேட்கப்பட்ட 3000 வினாக்கள் கொண்ட சிறப்பு இ-புத்தகம். மேலும் விபரங்களுக்கு...