Posts tagged ‘எல்லாவித சர்டிபிக்கேட்(சான்றிதழ்) இலவசமாக தரவிரக்கலாம்.’

எல்லாவித சர்டிபிக்கேட்(சான்றிதழ்) இலவசமாக தரவிரக்கலாம்.

பள்ளி மாணவர்களுக்கு , விளையாட்டு வீரர்களுக்கு, அலுவலகத்தில்
பணிபுரிபவர்களுக்கு என அனைவருக்கும் அவரவரின் திறமைக்கேற்ப
(சர்டிபிக்கேட்) சான்றிதழ் சில நிமிடங்களில் தரவிரக்கி உருவாக்கலாம்
இதைப்பற்றி தான் இந்த பதிவு.

ஊக்குவிப்பு தான் எந்தத்துறையிலும் மக்கள் முன்னேற காரணமாக
இருக்கும் ஒரு மிகப்பெரிய பரிசு. பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு
கூட மாதம் ஒரு முறை வைக்கும் தேர்வில் சிறந்த மாணவர் என்று
ஒருவரை தேர்ந்தெடுத்து (ரேங் அட்டையைத்தவிர) சிறப்பு சான்றிதழ்
ஒன்றை அனைவரின் முன்னிலையிலும் கொடுத்தால் அது அந்த
மாணவரை மட்டுமல்லாது அனைத்து மாணவருக்கும் தானும் இதே
போல் வெற்றி பெற வேண்டும் என்ற ஆர்வத்தை கொடுக்கும்.
இதே போல் தான் ஊரில் பல விளையாட்டு போட்டிகள் நடத்துவது
உண்டு அப்போது வெற்றி பெறுபவர்களுக்கு டிபன் பாக்ஸ் ,தட்டு,
இன்னும் பல பொருள்கள் கொடுப்பது உண்டு கூடவே ஒரு வெற்றிச்
சான்றிதழும் கொடுத்தால் எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கும் கண்டிப்பாக
வீட்டில் அதை பத்திரமாக வைத்திருப்பார்கள். எப்படி ஒரு சான்றிதழ்
இருக்க வேண்டும் என்ற எண்ணம் பலருக்கும் உண்டு உங்களுக்காக
ஒரு இணையதளம் வந்துள்ளது இந்த இணையதளத்தில் நாம் பள்ளி
மாணவரிலிருந்து விளையாட்டு வீரர் ,நிறுவனங்களில் பணிபுரிபவர்
வரை அனைவருக்கும் தேவையான சான்றிதழை இலவசமாக
தரவிரக்கலாம் எந்த கணக்கும் தேவையில்லை. ஒவ்வொன்றும்
தனித்தனி வகையாக பிரிக்கப்பட்டு பல வடிவங்களில் சான்றிதழ்கள்
உள்ளது நமக்கு எந்த வகை சான்றிதழ் பிடித்துள்ளதோ அதை
தரவிரக்கி நம் பள்ளியின் பெயரையே , நிறுவனத்தின் பெயரையோ
இட்டு பயன்படுத்திக்கொள்ளலாம்.

இணையதள முகவரி :  http://www.certificatestreet.com

வின்மணி இன்றைய சிந்தனை
ஏழை மற்றும் பணக்காரனை சமமாக மதிக்கும்
அரசியல்வாதி மறைந்த பின்னும் புகழுடன் இருப்பார்.
இன்று புரோகிராமர்க்கான உதவித் துளிகள்
PHP Calendar Functions
cal_days_in_month()  Returns the number of days in a
             month for a specified year and calendar.
cal_from_jd()    Converts a Julian day count into a
                 date of a specified calendar.
cal_info()  Returns information about a given calendar.
cal_to_jd()   Converts a date to Julian day count.
easter_date()   Returns the Unix timestamp for midnight
                on Easter of a specified year
easter_days()  Returns the number of days after
 March 21, on which Easter falls for a specified year
இன்று மார்ச் 25 

1954 ஆண்டு மார்ச் 25-ஆம் நாள் முதலாவது
வர்ணத் தொலைக்காட்சிப் பெட்டியை RCA
நிறுவனம் வெளியிட்டது. 12" திரையளவு 
கொண்ட இதன் விலை: $1,000.

மார்ச் 25, 2010 at 9:59 பிப 2 பின்னூட்டங்கள்


பதிவுகள் காப்பூரிமை

உங்கள் மின்னஞ்சலை
உள்ளிட்டு இவ்வலைப்பூவிற்கு
சந்தாதாரராகி,புதிய பதிவுகளை
மின்னஞ்சலில் பெறுங்கள்.

Join 2,733 other subscribers

வின்மணியின் சேவை

சிறந்த முறையில் இணையதளம் உருவாக்க GooLittle.com.நேர்மையான விலையில் சிறப்பான சேவை.

மேலும் விபரங்களுக்கு

அண்மைய பதிவுகள்

Our Sponsors

HOTEL SIVAMURUGAN KANYAKUMARI

HOTEL SIVAMURUGAN

நாள் காட்டி

மே 2024
தி செ பு விய வெ ஞா
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  

தகவல் பாதுகாப்பு

அனைத்து தகவல்களும் முறையாக Creative Common 2.5 - ஆல் காப்பிரைட் செய்யப்பட்டு வெளிவருகிறது.
Creative Commons License
winmani by winmani is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 2.5 License.

நம் வின்மணி இணைப்பு உங்க தளத்தில் கொடுக்க…

உடனுக்குடன் பெற

winmani

winmani.com

www.winmani.com

TNPSC Ebook

TNPSC Group 1, Group 2,Group 3, Group 4 மற்றும் VAO தேர்வில் அடிக்கடி கேட்கப்பட்ட 3000 வினாக்கள் கொண்ட சிறப்பு இ-புத்தகம். மேலும் விபரங்களுக்கு...