Posts tagged ‘இரண்டு நிமிடத்தில் மொபைல் போன் மூலம் கண் பரிசோதனை செய்யலாம்’

இரண்டு நிமிடத்தில் மொபைல் போன் மூலம் கண் பரிசோதனை செய்யலாம்

கண்களை பரிசோதித்து கண்ணாடி அணிவது எல்லாம் ஒரு காலம்
ஆனால் இப்போது மொபைல் மூலம் எளிதாக மருத்துவமனைக்கே
செல்லாமல் நம் கண்னை பரிசோதிக்கலாம் எப்படி என்பதைப்பற்றி
தான் இந்த பதிவு.

கண்களை பரிசோதிக்க எத்தனையோ பல புதிய வழிமுறைகள்
இருந்தாலும் அத்தனையும் தாண்டி இப்போது புதிதாக ஒரு
மொபைல் போன் மற்றும் சிறிய கருவி துனை கொண்டு நம்
கண்ணை பரிசோதித்துக்கொள்ளலாம் எந்த மருத்துவரும்
தேவையில்லை எந்த மருத்துவமனைக்கும் செல்ல வேண்டாம்
காலத்தின் வேகமான வளர்ச்சியால் விஞ்ஞானிகள் இந்த
புதுவித கருவியை உருவாக்கியுள்ளனர்.இந்த கருவியை நம்
மொபைல் போனில் பொருத்திவிட வேண்டும் இதற்க்கான
அப்ளிகேசனும் இலவசமாக கிடைக்கிறது. இதை நிறுவிக்கொண்டு
நம் கண்னை எளிதாக சோதிக்கலாம். எந்த கண்ணாடி லென்ஸ்
அளவு என்ன என அனைத்தையும் நமக்கு காட்டிவிடும் இந்த
கருவியின் ஹார்டுவேர் சிக்கிராப் 2010 கொண்டும் இதற்க்கான
பெயர் நெட்ரா என்றும் வைத்துள்ளனர். அனைத்து ஸ்மார்ட்போன்
மற்றும் சேம்சங்,கூகுள் நெக்சஸ் போனிலும் இது சோதிக்கப்பட்டு
சோதனை ஓட்டத்திலே அனைவரின் கவனத்தை மட்டுமல்ல
நம்பிக்கையையும் பெற்றுள்ளது. இந்த மாத இறுதியில் இந்த
கருவி விலைக்கு கிடைக்கும் என்றும் எதிர்பார்க்கபடுகிறது.
இது எப்படி வேலை செய்கிறது என்பது பற்றிய சிறப்பு
விடியோவையும் இத்துடன் இணைத்துள்ளோம்.

வின்மணி சிந்தனை
கடவுள் சில நேரங்களில் சிறிய பிரச்சினைக்கு கூட நம்மை
முழவதுமாக சோதிப்பான் ஆனால் இறுதியில் வெற்றியை
நம் பக்கம் தருவான்.
TNPSC  Questions  Group 1,Group 2,Group 3,Group 4
கடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட
வினாக்கள் மற்றும் பதில்கள்
1.ஆயுள் முழுவதும் மாறாதது எது ?
2.பெல்ஜிய விமான சர்வீஸின் பெயர் என்ன ?
3.பிராகிருதமும் தமிழும் கலந்த மொழி எது ?
4.குதுப்மினார் கோவிலின் நிழல் விழாத நாள் எது ?
5.காசி ராங்கோ என்னும் சரணாலயம் எங்குள்ளது ?
6.சுந்தரவனக்காடுகள் காணப்படும் இடம் எது ?  
7.ஓரிசாவில் மீன்பிடிப்பு பகுதியாக விளங்குவது எது ?
8.சணலின் சிறப்புப் பெயர் என்ன ?
9.இந்தியாவில் கரும்பு அதிக அளவில் பயிரிடப்படும் 
  மாநிலம் எது ?
10.ஆக்டோபஸிக்கு எத்தனை இதயங்கள் ?
பதில்கள்:
1.ரத்தவகை, 2.சபீனா,3.தெலுங்கு மொழி,4.ஜீலை 20,
5.அஸ்ஸாம் மாநிலத்தில், 6.கங்கை டெல்டா பகுதி,
7.சில்கா ஏரி, 8.தங்க இழை,9.உத்திரப்பிரதேசம்,
10.மூன்று.
இன்று ஜூலை 1 
பெயர் : கல்பனா சாவ்லா,
பிறந்ததேதி : ஜூலை 1, 1961
இந்தியாவில் பிறந்து விண்வெளியில் பறந்த
முதல் பெண்மணி. STS-107 என்ற கொலம்பியா
விண்ணோடத்தில் பறந்து பூமிக்குத் திரும்பும்
பொழுது விண்கலம் வெடித்துச் சிதறியதில்
உயிரிழந்தார்.கல்பனா சாவ்லாவை கௌரவிக்கும் விதமாக
நியூயார்க் நகரிலுள்ள ஒரு வீதிக்கு அவரது பெயர் வைத்துள்ளனர்.

PDF ஆக தறவிரக்க இங்கே சொடுக்கவும்

ஜூலை 2, 2010 at 6:14 பிப 7 பின்னூட்டங்கள்


பதிவுகள் காப்பூரிமை

உங்கள் மின்னஞ்சலை
உள்ளிட்டு இவ்வலைப்பூவிற்கு
சந்தாதாரராகி,புதிய பதிவுகளை
மின்னஞ்சலில் பெறுங்கள்.

Join 2,733 other subscribers

வின்மணியின் சேவை

சிறந்த முறையில் இணையதளம் உருவாக்க GooLittle.com.நேர்மையான விலையில் சிறப்பான சேவை.

மேலும் விபரங்களுக்கு

அண்மைய பதிவுகள்

Our Sponsors

HOTEL SIVAMURUGAN KANYAKUMARI

HOTEL SIVAMURUGAN

நாள் காட்டி

மே 2024
தி செ பு விய வெ ஞா
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  

தகவல் பாதுகாப்பு

அனைத்து தகவல்களும் முறையாக Creative Common 2.5 - ஆல் காப்பிரைட் செய்யப்பட்டு வெளிவருகிறது.
Creative Commons License
winmani by winmani is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 2.5 License.

நம் வின்மணி இணைப்பு உங்க தளத்தில் கொடுக்க…

உடனுக்குடன் பெற

winmani

winmani.com

www.winmani.com

TNPSC Ebook

TNPSC Group 1, Group 2,Group 3, Group 4 மற்றும் VAO தேர்வில் அடிக்கடி கேட்கப்பட்ட 3000 வினாக்கள் கொண்ட சிறப்பு இ-புத்தகம். மேலும் விபரங்களுக்கு...