Posts tagged ‘வீடியோ டிரைவர் மென்பொருளை பேக்கப் எடுத்து வைக்கலாம்.’
ஆடியோ, வீடியோ டிரைவர் மென்பொருளை பேக்கப் எடுத்து வைக்கலாம்.
நாம் பயன்படுத்தும் விண்டோஸ் ஆப்ரேட்டிங் சிஸ்டத்தின் ஆடியோ
வீடியோ டிரைவர் மென்பொருள்-களை பாதுகாப்பாக சேமித்துக்
கொள்வது எப்படி என்பதைப்பற்றித்தான் இந்தப் பதிவு.

படம் 1
நாம் கணினி வாங்கிய போது டிரைவர் CD என்று ஒன்று கொடுப்பார்கள்
அதில் தான் நம் கணினியின் ஆடியோ, வீடியோ டிரைவர் மென்பொருள்
இருக்கும். எப்போதாவது நம் கணினியில் பிரச்சினை என்றால் நாம்
உடனடியாக விண்டோஸ் – ஐ அழித்து விட்டு புதிதாக நிறுவ முயற்சி
செய்யலாம் என்று நினைத்தாலும் நம்மிடம் ஆடியோ , வீடியோ டிரைவர்
CD இல்லையே என்று இப்போதைக்கு அழிக்காமல் பிரச்சினையோடு
பயன்படுத்துவோம் என்று இருக்காமல் ஏற்கனவே நம் கணினியில்
இருக்கும் ஆடியோ வீடியோ டிரைவர் மென்பொருளை நாம் பேக்கப்
செய்து பயன்படுத்தலாம் இதற்கு பல மென்பொருள்கள் இருந்தாலும்
அத்தனையும் காசு கொடுத்து தான் பயன்படுத்த முடியும் ஆனால்
சில மென்பொருள்கள் இலவசமாக ஆடியோ,வீடியோ டிரைவர்
சேமிக்க உதவுகின்றது அப்படி இருக்கும் மென்பொருளில் Double Driver
என்ற மென்பொருளைப்பற்றித்தான் பார்க்க இருக்கிறோம்.
இந்த சுட்டியை சொடுக்கி மென்பொருளை தரவிரக்கிக்கொள்ளவும்.
இந்த மென்பொருளை தரவிரக்கி நம் கணினியில் இண்ஸ்டால் செய்து
கொள்ளவும். அடுத்து Double Driver என்ற மென்பொருளை இயக்கி
படம் 1-ல் உள்ளது போல் இருக்கும் Scan Current System என்ற
பொத்தானை அழுத்தவும். நம் கணினியில் நிறுவியிருக்கும் அனைத்து
டிரைவர் மென்பொருள்களையும் நமக்கு காட்டும் இதில் எதெல்லாம்
நமக்கு தேவையோ அதை தேர்ந்தெடுத்துக்கொண்டு Backup now
என்ற பொத்தானை அழுத்தி விரும்பும் இடத்தில் டிரைவர்
மென்பொருள்களை சேமித்துக்கொள்ளவும். டிரைவர் Cd இல்லாதவர்கள்
கண்டிப்பாக இப்போதே ஆடியோ, வீடியோ டிரைவர் மென்பொருள்களை
சேமித்து வைத்துக்கொள்ளவும். அவசர நேரத்தில் இணையத்தில்
சென்று தேடும் நேரமும் தரவிரக்கும் நேரமும் குறையும்.
விண்டோஸ் 98 முதல் விண்டோஸ் 7 வரை அனைத்து
விண்டோஸ் ஆப்ரேட்டிங் சிஸ்டத்திற்கும் துணை புரியும்.
வின்மணி சிந்தனை நாம் செய்யும் தவறுக்காக அடுத்தவர் மனம் துன்பப்படுமேயானால் கடவுள் நம்மை விட்டு உடனே சென்று விடுவார்.
TNPSC Questions Group 1,Group 2,Group 3,Group 4 கடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட வினாக்கள் மற்றும் பதில்கள் 1.இந்தியாவிலுள்ள பாட்னாவின் பழைய பெயர் என்ன ? 2.திமிங்கலத்தின் உடலின் எவ்வளவு இரத்தம் இருக்கும் ? 3.சீனாவின் புனித விலங்கு எது ? 4.மாம்பழத்தின் பிறப்பிடம் எது ? 5.ஜப்பானியரின் தேசிய உடையின் பெயர் என்ன ? 6.தங்கப்போர்வை நிலம் எது ? 7.தென் ஆப்பிரிக்காவுக்கு எத்தனை தலைநகர்கள் உண்டு ? 8.கிரிக்கெட் மட்டை எந்த மரத்தால் தயாரிக்கப்படுகிறது ? 9.போக்குவரத்து காவலர்களே இல்லாத நாடு எது ? 10.சுருக்கெழுத்து முறையை கண்டுபிடித்தவர் யார் ? பதில்கள்: 1.பாடலிபுத்திரம்,2.8 ஆயிரம் லிட்டர்,3.பன்றி,4.இந்தியா, 5.கிமோனா,6.ஆஸ்திரேலியா,7.மூன்று,8.வில்லோ மரம், 9.நீயூசிலாந்து,10.பிட்மேன்.
இன்று ஆகஸ்ட் 30பெயர் : என். எஸ். கிருஷ்ணன் , மறைந்த தேதி : ஆகஸ்ட் 30, 1957 தமிழ்த் திரைப்பட நகைச்சுவை நடிகரும் பாடகரும் ஆவார்.49 ஆண்டுகள் வாழ்ந்து ஆயிரம் ஆண்டு காலச் சாதனையை கலைத்துறை மூலம் செய்து காட்டியவர் கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன் அவர்கள். கூத்தாடிகளாக, குறை மனிதர்களாக, அரிதார வேலைக்காரர்களாகக் கருதி ஒதுக்கித் தள்ளப்பட்ட நடிகர் சமுதாயத்தில், அறிவு விளக்கேற்றி வைத்து மக்களுக்குத் தொண்டு செய்யப் பிறந்தவர்கள் என்ற நிலையை உருவாக்கியவர்.