Posts tagged ‘சிங்கப்பூரில் நடக்கும் இண்டர்நெட்ஷோ முன்பதிவு இலவசம்’
சிங்கப்பூரில் நடக்கும் இண்டர்நெட்ஷோ முன்பதிவு இலவசம்.
இண்டெர்நெட் பற்றிய அனைத்து தகவல்களும் அன்று முதல்
இன்று வரை என்னவெல்லாம் தொழில்நுட்ப மாற்றம்
வந்திருக்கிறது என்பதை பற்றிய ஒரு ஷோ சிங்கப்பூரில்
வரும் 2010 ஆண்டு ஏப்ரல் 21 தேதி மற்றும் 22 தேதி ஆகிய
இரண்டு நாட்கள் நடைபெறவிருக்கின்றது. இதற்கு முன்பதிவு
இலவசமாக நடை பெறுகிறது.
யார் எல்லாம் இதில் பங்கு பெறலாம் என்றால் கல்லூரி
மாணவர்கள் முதல் இண்டெர்நெட்டில் சம்பாதிக்க வேண்டும்
என்ற எண்ணம் உள்ள அனைவரும் இதில் பங்கு பெறலாம்.
அதுமட்டுமின்றி சிறுதொழில் செய்வோர் முதல் பெரிய நிறுவனங்களின்
மேலதிகாரிகள் வரை அனைவரும் தங்கள் பொருள்களை
இணையதளத்தில் எவ்வாறு புதுமையாக விற்கலாம் என்பது பற்றிய
அனைத்து தகவல்களும் இடம் பெறபோகின்றது.
மாணவர்கள் தங்கள் திறமையை வெளிகாட்ட ஒரு நல்ல சந்தர்ப்பம்.
உங்களின் புதிய கண்டுபிடிப்புகளையும் இங்கு தெரியபடுத்தலாம்.
உங்களின் தொழில்நுட்பதிறமைகளையும் இங்கு காட்டலாம். பல
முன்னனி நிறுவனங்களின் மேலதிகாரிகளையும் நீங்கள் கொடுக்கும்
செமினார் மூலம் கவர்ந்து உங்கள் வேலையை உறுதிபடுத்தலாம்.
இணையதளமுகவரி : http://theinternetshows.com/2010/Singapore/
இந்த இணையதளத்திற்கு சென்று உங்கள் தகவல்களை
இலவசமாக பதிவு செய்து கொள்ளுங்கள். நம் தமிழர்கள்
பல பேர் இதில் பங்கு பெற்று வெற்றி பெற வேண்டும்
என்பதே நம் நோக்கம். வாழ்த்துக்கள்…