Posts tagged ‘ஒரே நொடியில் நம் கணினியின் எழுத்துருக்கள்(Fonts) அத்தனையும் ஒரே இடத்தில் Preview ப’
ஒரே நொடியில் நம் கணினியின் எழுத்துருக்கள்(Fonts) அத்தனையும் ஒரே இடத்தில் Preview பார்க்கலாம்.
கிராபிக்ஸ் டிசைனர்கள் முதல் வெப் டிசைனர்கள் வரை அனைவருக்கும் ஒவ்வொரு Fonts மீது ஈர்ப்பு இருக்கும். மொத்தமாக நம் கணியில் பல எழுத்துருக்கள் (Fonts) இருந்தால் ஒவ்வொரு Font -ம் நம் எழுத்துக்கள் எப்படி இருக்கும் என்று சோதிப்பதற்கு அதிக நேரம் எடுத்துக்கொள்ளும் இந்தப்பிரச்சினையை போக்குதற்காக ஒரு தளம் உள்ளது இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.
எழுத்தின் மேல் விருப்பம் உள்ள அனைவரும் நம் பெயர் அல்லது நிறுவனத்தின் பெயரை ஒவ்வொரு எழுத்துருவாக மாற்றி பார்த்து அதிலிருந்து சிறந்ததை கண்டுபிடிக்க வேண்டும் என்றால் ஆகும் நேரம் அதிகம் தான் ஆனால் இனி ஒரே நொடியில் நம் கணினியில் இருக்கும் Fonts Preview ஒரே இடத்தில் இருந்து பார்க்கலாம் நமக்கு உதவுவதற்காக ஒரு தளம் உள்ளது.