Posts filed under ‘வைரஸ் நீக்க’

கணினியில் வைரஸ் நீக்கும் இலவச மென்பொருள்.

வின்மணி வைரஸ் ரீமுவர்கணினியில் வரும் வைரஸை நீக்குவதற்கு காசு கொடுத்து வாங்கும் பல ஆண்டிவைரஸ் மென்பொருட்கள் வேலை செய்யாத நிலையில் உங்கள் கணினியில் இருக்கும் வைரஸ் கோப்புகளை கண்டறிந்து நீக்குவதற்காக உருவாக்கப்பட்டது தான் வின்மணி வைரஸ் ரீமுவர்.  முதல் பதிப்பிற்கு நீங்கள் கொடுத்த ஆதரவினால் தான் இரண்டாம் பதிப்பை வெளியீட்டு இருக்கிறோம்.  முற்றிலும் இலவச மென்பொருள். (மேலும்…)

நவம்பர் 1, 2015 at 3:45 பிப 1 மறுமொழி

சூர்யகண்ணன் வலைப்பூவில் கணினி கொள்ளையர்கள் அட்டகாசம்

பயனுள்ள தொழில்நுட்ப கட்டுரைகளை வழங்கிவரும் சூர்யகண்ணனின்
வலைப்பூவில் கணினி கொள்ளையர்கள் தங்கள் கைவரிசையை
காட்டியுள்ளனர் இதைப்போன்ற கணினி கொள்ளையர்களிடம் இருந்து
நம் வலைப்பூ மற்றும் இமெயிலை பாதுகாப்பது எப்படி என்பதைப்
பற்றிய சிறப்பு பதிவு.

கணினி பற்றியும் புதிதாக வந்திருக்கும் தொழில்நுட்ப செய்திகள்
பற்றியும் சொல்வதில் நண்பர் சூர்யகண்ணனின் வலைப்பூவுக்கு தனி
மரியாதை உண்டு என்று சொல்லும் அளவிற்கு தரமான தகவல்கள்
பல உண்டு. இவருடைய வலைப்பூவின் முகவரி http://suryakannan.blogspot.com
கடந்த  16-07-2010 -ம் தேதி இரவு இந்த தளத்தை குறிவைத்து
கணினி கொள்ளையர்கள் இவர் வலைப்பூவுக்குகாக பயன்படுத்தும்
இமெயில் கடவுச்சொல்லை திருடி அவர் வலைப்பூவில் உள்ள
அத்தனை தகவல்களையும் அழித்துவிட்டனர்.மறுநாள் காலை
நண்பர் சூரியகண்ணன் நம்மிடம் அலைபேசியில் தொடர்பு கொண்டு
நடந்த தகவல்களை கூறினார். நாம் மெயில் தொடர்பான சில
விபரங்களையும் மற்றும் உடனடியாக நாம் அவரிடம் Task Manager-ல்
சென்று process -ஐ ஒரு Screen shot செய்து அனுப்ப சொன்னோம்
பத்தே நிமிடத்தில் நம் கையில் Screen shot வந்துவிட்டது.
எந்த வைரஸ்-ம் இல்லை, ஆனால் இமெயில் பாஸ்வேர்ட் இவர்
கணினி மூலம் தான் சென்றிருக்கிறது என்பது மட்டும் தெளிவாக
தெரிந்தது. நன்றாக நினைவில் வைத்துக்கொள்ளுங்கள் ஆண்டிவைரஸ்
மென்பொருளால் Trojan போன்றவற்றை தடுக்க இயலாது.
அது நம் கணினிக்கு எந்த பாதிப்பும் செய்யாது ஆனால் நம்
கடவுச்சொல்லை திருடி குறிப்பிட்ட நபருடைய இமெயிலுக்கு
அனுப்பிவிடும் இதன் பின்னனி பற்றி பார்ப்போம். அதாவது
கணினியில் நாம் தட்டச்சு செய்யும் கடவுச்சொல்லை (**)
எழுத்துக்களை குகிஸ்-ல் என்று சொல்லக்கூடிய இடத்தில்
வேறுவிதமாக சேமித்துவிடுகின்றனர். நாம் என்ன உலாவி
பயன்படுத்தினாலும் இது அந்தந்த உலாவிக்குறிய கூகுஸில்
வேறுவிதமாக சேமித்துவிடும். அடுத்து நம் கணினியில்
Script Error என்று ஒரு செய்தி வரும் இந்த செய்தியில் நாம்
ok கொடுக்கும் போது இணைய இணைப்பு இருந்தால் http
புரோட்டாகால் மூலம் தகவலானது தனிப்பட்ட நபருக்கு நம்
கடவுச்சொலை எளிதாக அனுப்பிவிடும். சில நேரங்களில்
அடிக்கடி இந்த Script Error செய்தி வரும். எந்தப்பெயரில்
வேண்டுமானாலும் இருக்கலாம். இதிலும் தொழில்நுட்பத்தை
கையாள்கிறார்கள் அதாவது அடிக்கடி நாம் பயன்படுத்தும்
மென்பொருளை ரெஸிஸ்டிரி மூலம் அறிந்து அந்த
மென்பொருளில் பிழை இருப்பது போல் Script உருவாக்கி
விடுகின்றனர்.

இதைத் தடுக்க வழிமுறைகள் :

* நீங்கள் பயன்படுத்திக் கொண்டிருக்கும் கணினியின் வேகத்தில்
ஏதாவது மாற்றம் ஏற்பட்டால் உடனடியாக ஆண்டிவைரஸ்
மென்பொருள் கொண்டு கணினியை சோதியுங்கள்.

* ஜீமெயில் பயன்படுத்துபவராக இருந்தால் பாஸ்வேர்ட்
ரெக்கவரியில் உங்கள் அலைபேசி எண்ணை சேமித்துவிடுங்கள்.

* அனைத்து இமெயில் Contact -ம் அவ்வப்போது சேமித்து
வையுங்கள்.

* இமெயில் உருவாக்கிய தேதியையும் செக்யூரிட்டி கேள்வியின்
பதிலையும் குறித்துவைத்துக்கொள்ளுங்கள்.

* சொந்தக்கணினி பயன்படுத்துபவராக இருந்தால் இமெயிலுக்கு
தனி உலாவியையும் , மற்ற வேலைகளுக்கு தனி உலாவியையும்
பயன்படுத்துங்கள்.

* எக்காரணம் கொண்டும் பாஸ்வேர்ட் நம் கணினியில் சேமித்து
வைக்காதீர்கள். ஒவ்வொரு முறையும் தட்டச்சு செய்து உள்ளே
செல்லுங்கள்.

*  நம் இமெயிலுக்கு வரும் எந்த லிங்கையும் சொடுக்காதீர்கள்
அது பேஸ்புக் வாழ்த்தாக இருந்தாலும் சரி சொடுக்கவே கூடாது.

* பல இமெயில் இருந்தால் ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு கடவுச்சொல்
வைக்கவும்,ஒரே கடவுச்சொல்லை பயன்படுத்த வேண்டாம்.

இதைத் தவிர பிரெளவ்சிங் செண்டர்களில் நாம் இமெயில் திறக்கும்
முன் அந்த கணினியில் கீலாக்கர் போன்ற எந்த மென்பொருளும்
இருக்கிறதா என்று சோதிதபின் பயன்படுத்துங்கள்.

Trojan code – கொண்டு யாருடைய இமெயில் கடவுச்சொல்லையும்
எந்த இணையதளத்தையும் கொள்ளை அடிக்கலாம் என்பது முற்றிலும்
உண்மை தான்.என்ன தான் செக்யூரிட்டி இருந்தாலும் எவ்வளவு பெரிய
இணையதளம் ஆனாலும் கணினி கொள்ளையர்கள் கண்ணில் இருந்து
தப்ப முடியாது. திருடராய் பார்த்து திருந்தாவிட்டால் இதை ஒழிக்க
முடியாது. நேரம் கிடைத்தால் Trojan மற்றும் SQL injection Query
மூலம் கணினி கொள்ளையர்கள் எப்படி கொள்ளை அடிக்கின்றனர்
என்பதை வீடியோவுடன் விளக்கமாக ஒரு பதிவு இடுகிறோம்.
வெகுவிரைவில் நம் வின்மணியிடம் இருந்து கடவுச்சொல் மற்றும்
கீலாக்கர் கொண்டு திருடப்படுவதை தடுக்க ஒரு மென்பொருள்
வெளிவரும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
நண்பர் சூரியகண்ணன் வலைப்பூவை பேக்கப் செய்து வைத்திருந்த
காரணத்தால் அனைத்து தகவலையும் அப்லோட் செய்து உடனடியாக
மாற்று வலைப்பூ உருவாக்கப்பட்டு உள்ளது என்பதையும் தெரிவித்துக்
கொள்கிறோம். இப்போதைய சூரியகண்ணனின் வலைப்பூ முகவரி
http://sooryakannan.blogspot.com

வின்மணி சிந்தனை
உண்மையான கணினி கொள்ளையன் ஒருபோதும் காசுக்கு
விலை போகமாட்டான். அரை வேக்காடு தான் காசுக்காக
அடுத்தவர் கணினியை பதம் பார்ப்பான், ஆனால் அவர்களின்
முடிவு மோசமாக இருக்கும்.
TNPSC  Questions  Group 1,Group 2,Group 3,Group 4
கடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட
வினாக்கள் மற்றும் பதில்கள்
1.நிகற்புகம் எனப்படுவது எத்தனை ?
2.அருணகிரிநாதர் எந்த ஊரில் அவதரித்தார் ?
3.கம்பளிக்காக வளர்க்கப்படும் அடுகளுக்கு பெயர் என்ன ?
4.உலக அமைதிக்கான நோபல் பரிசு யாரால் சிபாரிசு
 செய்யப்படுகிறது ?
5.’கருடா’ என்ற பெயர் கொண்ட விமானசேவை எந்த நாட்டில்
 இருந்து இயங்குகிறது ?
6.வெங்காயத்தில் அதிகமுள்ள வைட்டமின் எது ?
7.மனிதனைப்போல் தலையில் வழுக்கை விழும் குரங்கு எது ?
8.முதல் மோட்டார் ரோடுரோலர் எந்த நாட்டில் தயாரிக்கப்பட்டது?
9.’செலினியம் செல்’ என்ற போட்டோ முறையை 
  கண்டுபிடித்தவர் யார் ?
10.உயிரியல் கவிஞர் என்றழைக்கப்படுபவர் யார் ?
பதில்கள்:
1.100 கோடி, 2.திருவண்ணாமலை,3.மரினோ,
4.நார்வே அரசு,5.இந்தோனேஷியா,6.வைட்டமின் ‘பி’,
7.ஆண் குரங்கு,8.இங்கிலாந்து,9.1எர்னஸ்ட் வெர்னர்
10.சர் ஜெகதீஸ் சந்திர போஸ்.
இன்று ஜூலை 18   
பெயர் : நெல்சன் மண்டேலா,
பிறந்ததேதி : ஜூலை 18, 1918
தென்னாப்பிரிக்காவின் மக்களாட்சி முறையில்
தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் குடியரசுத் தலைவர்
ஆவார். அதற்கு முன்னர் நிறவெறிக்கு எதிராகப்
போராடிய முக்கிய தலைவர்களுள் ஒருவராக
இருந்தார்.இன்றைய உலகில் அதிகம் மதிக்கப்படும்
தலைவர்களில் ஒருவராக விளங்குகிறார்.

PDF ஆக தறவிரக்க இங்கே சொடுக்கவும்

ஜூலை 19, 2010 at 7:50 பிப 15 பின்னூட்டங்கள்

விண்டோஸ் விஸ்டா மற்றும் விண்டோஸ் 7-ல் ஏற்படும் 50 பிரச்சினைகளுக்கு தீர்வு

விண்டோஸ் விஸ்டா மற்றும் விண்டோஸ் 7-ல் அடிக்கடி பொதுவாக
ஏற்படும் முதல் 50 பிரச்சினைகளுக்கு தீர்வு கொடுக்கும் சிறிய
மென்பொருளைப்பற்றிய சிறப்பு பதிவு.

விண்டோஸ் விஸ்டா மற்றும் விண்டோஸ் 7-ல் அடிக்கடி ஏற்படும்
வைரஸ்,மால்வேர், ஸ்பைவேர் மற்றும் சிஸ்டத்தின் செட்டிங்
பிரச்சினைகளை தீர்க்க ஒரு மென்பொருள் உள்ளது. விண்டோஸ்
எக்ஸ்ப்ளோரர் , இண்டெர்னெட் கனெக்சன் ,மீடியா பிளேயர் ,
சிஸ்டம் டூல்ஸ் , மற்றும் திரையின் அளவு போல்டர் பிரச்சினை
Explorer.exe problem , Recycle bin பிரச்சினை மற்றும் டிஸ்க்
டிரைவில் ஏற்படக்கூட ஆட்டோ ரன் பிரச்சினை போன்று பொதுவாக
ஏற்படும் முதல் 50 பிரச்சினைக்கு தீர்வு வழங்க ஒரு மென்பொருள்
உள்ளது. இந்த முகவரியில் இருந்து மென்பொருளை தரவிரக்கிக்
கொள்ளவும்.

இணையதள முகவரி : http://www.thewindowsclub.com/downloads/FixWin.zip

அடிக்கடி எழும் சிறிய பிரச்சினைகளுக்கு யார் உதவியும் இல்லாமல்
எளிதாக நம் சிஸ்டத்தில் எழும் பிரச்சினைகளை நாமே சரி செய்யலாம்.
மென்பொருள் 175 KB தான் எந்த வைரஸ் பிரச்சினை இருந்தாலும்
உடனடியா முதலுதவி செய்ய கண்டிப்பாக இந்த சிறிய டூல் உதவும்.

வின்மணி சிந்தனை
அதிகம் படித்த மேதாவியாக இருந்தாலும் எல்லாவற்றையும்
படிப்பால் உணரமுடியாது சிலவற்றை அனுபவத்தால் தான்
உணரமுடியும்.
TNPSC  Questions  Group 1,Group 2,Group 3,Group 4
கடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட
வினாக்கள் மற்றும் பதில்கள்
1.திருவள்ளுவரின் மனைவி பெயர் என்ன ?
2.செஞ்சிக்கோட்டை எந்த மாவட்டத்தில் உள்ளது ?
3.ஜப்பான் மீது வீசப்பட்ட முதல் அணுகுண்டு எது ?
4.ஆப்கானிஸ்தானின் தலைநகரம் எது ?
5.இந்திய தேசியக்கொடியில் காவி நிறம் எதைக் குறிக்கின்றது ?
6.’நிக்கல்’ உலோகத்தை கண்டறிந்தவர் யார் ?
7.போர்ஸின் கோபுரம் எங்குள்ளது ?
8.அயோடின் நம் உடலில் எந்தெந்த இடத்தில் உள்ளது ?
9.’சகமா’ எனப்படும் அகதிகள் எந்த நாட்டைச் சேர்ந்தவர்கள் ?
10.’தி கைடு ‘ என்ற நூலின் ஆசிரியர் யார் ?
பதில்கள்:
1.வாசுகி, 2.விழுப்புரம், 3.லிட்டில்பாய்,
4.காபூல்,5.தியாகம், 6.கிரான்ஸ்டட்,7.நாங்கிங்,
8.தைராக்ஸின்,9.பங்காளதேஷ்,10.கே.ஆர்.நாராயணன்
இன்று மே 28 
பெயர் : என்.டி.ராமராவ் ,
பிறந்த தேதி : மே 28, 1923
பிர‌ப‌ல‌ தெலுங்கு திரைப்பட நடிகர், இயக்குனர்
மற்றும் அரசியல்வாதி.ஆந்திரப் பிரதேசத்தின்
முதலமைச்சராக‌ மூன்று த‌ட‌வை பொறுப்பு
வ‌கித்தவர்.தெலுங்கு திரைப்படத்துறையில்
ஆற்றிய பணிகளுக்காக அவ‌ர் 1968 இல் பத்மஸ்ரீ விருதை
பெற்றார். சிறந்த இறைபக்தி உள்ளவர்.
PDF ஆக தறவிரக்க இங்கே சொடுக்கவும்

மே 28, 2010 at 5:02 பிப 7 பின்னூட்டங்கள்


பதிவுகள் காப்பூரிமை

உங்கள் மின்னஞ்சலை
உள்ளிட்டு இவ்வலைப்பூவிற்கு
சந்தாதாரராகி,புதிய பதிவுகளை
மின்னஞ்சலில் பெறுங்கள்.

Join 2,744 other followers

வின்மணியின் சேவை

சிறந்த முறையில் இணையதளம் உருவாக்க GooLittle.com.நேர்மையான விலையில் சிறப்பான சேவை.

மேலும் விபரங்களுக்கு

அண்மைய பதிவுகள்

Our Sponsors

HOTEL SIVAMURUGAN KANYAKUMARI

HOTEL SIVAMURUGAN

நாள் காட்டி

பிப்ரவரி 2020
தி செ பு விய வெ ஞா
« நவ்    
 12
3456789
10111213141516
17181920212223
242526272829  

டிவிட்டரில் நம்மோடு சேர…

தகவல் பாதுகாப்பு

அனைத்து தகவல்களும் முறையாக Creative Common 2.5 - ஆல் காப்பிரைட் செய்யப்பட்டு வெளிவருகிறது.
Creative Commons License
winmani by winmani is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 2.5 License.

நம் வின்மணி இணைப்பு உங்க தளத்தில் கொடுக்க…

உடனுக்குடன் பெற

winmani

winmani.com

www.winmani.com

TNPSC Ebook

TNPSC Group 1, Group 2,Group 3, Group 4 மற்றும் VAO தேர்வில் அடிக்கடி கேட்கப்பட்ட 3000 வினாக்கள் கொண்ட சிறப்பு இ-புத்தகம். மேலும் விபரங்களுக்கு...

%d bloggers like this: