Posts filed under ‘விண்டோஸ் உதவிகள்’

உலகை திரும்பி பார்க்க வைக்கும் மைக்ரோசாப்ட் விண்டோஸ் 8 (Windows 8 ) இலவசமாக தரவிரக்கலாம்.

கணினி உலகை பொருத்த வரை ஆப்ரேட்டிங் சிஸ்டத்தில் என்றுமே சூப்பர் ஸ்டார் மைக்ரோசாப்ட் தான், பயன்படுத்துவதில் எளிமை, புதுமை என அனைத்து சேவைகளையும் கொடுத்து உலக அளவில் பல வாசகர்களை தன் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்த மைக்ரோசாப்ட்-ன் அடுத்த வெளியீடான விண்டோஸ் 8 ( Windows 8 )இலவசமாக தறவிரக்கலாம்.

DOS வெர்சனில் தொடங்கி விண்டோஸ் 3.1 முதல் விண்டோஸ் 7 வரை தன் கால் தடங்களை அழுத்தமாக பதித்து வரும் மைக்ரோசாப்ட் நிறுனத்தின் அடுத்த இமாலய படைப்பு தான் விண்டோஸ் 8. எத்தனை ஆப்ரேட்டிங் சிஸடம் வந்தாலும் விண்டோஸ் ஆப்ரேட்டிங் சிஸ்டத்திற்கு இருக்கும் மதிப்பு மரியாதை தனி தான், ஒவ்வொரு பதிப்பிலும் கூடுதல் சேவையை அளித்து வரும் மைக்ரோசாப்ட்-ன் அடுத்த வெளியீடான விண்டோஸ் – 8 என்னவெல்லாம் சேவையை கொடுக்க இருக்கிறது என்று இனி பார்க்கலாம்…

Continue Reading செப்ரெம்பர் 14, 2011 at 10:39 முப 8 பின்னூட்டங்கள்

குழந்தைகள் பணத்தை எப்படி செலவளிக்க வேண்டும் சொல்லித்தரும் பயனுள்ள தளம்.

குழந்தைகளுக்கு நாம் கொடுக்கும் பணத்தை எப்படி பயனுள்ள வழிகளில்
செலவு செய்யலாம் என்று சொல்லித்தர ஒரு இணையதளம் உள்ளது.
இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.

ஆரம்பத்தில் செலவு செய்வதை பயனுள்ள வழியில் செலவு செய்யா
விட்டால் பின் எவ்வளவு தான் முயன்றாலும் பணம் நம் கையில்
இருந்து தண்ணீராக செலவு செய்வதை யாராலும் தடுக்க முடியாது.
குழந்தையாக இருக்கும் போதே பணத்தை எப்படி எல்லாம் பயனுள்ள
வழிகளில் செலவு செய்யலாம் என்று நம் குழந்தைகளுக்கு சொல்லிக்
கொடுக்க ஒரு தளம் உள்ளது.

இணையதள முகவரி : http://zefty.com

இந்தத்தளத்திற்கு சென்று நம் குழந்தைகளுக்கு புதிதாக ஒரு பயனாளர்
கணக்கு உருவாக்கி கொடுக்க வேண்டியது மட்டும் தான் நம் வேலை
பயனாளர் கணக்கு உருவாக்கியதும் குழந்தைகள் அந்த பயனாளர்
கணக்கின் வழியாக உள்சென்று தங்களுக்கு கிடைக்கும் பாக்கெட் மணி
முதல் பிறந்த நாள் போன்ற நாட்களில் கிடைக்கும் பணம் வரை
அத்தனையையும் எப்படி பயனுள்ள வழியில் செலவு செய்யலாம் என்று
எளிமையாக சொல்லிக்கொடுக்கிறது. குழந்தைகள் அதிகமாக எதில்
பணம் செலவு செய்கின்றனர் அதை எப்படி எல்லாம் குறைக்கலாம்
என்று படிப்படியாக சொல்லிக்கொடுக்கிறது. கூடவே குழந்தைகளுக்கு
மட்டும் இல்லாமல் பெற்றோர்களும் தங்கள் பணத்தை எப்படி பயனுள்ள
வழியில் செலவு செய்யலாம் என்றும் சொல்லிக்கொடுக்கிறது.
அநாவசியமாக பணம் செலவு செய்ய விரும்பாத நபர்களுக்கு
இந்தத்தளம் பயனுள்ளதாக இருக்கும்.

 

வின்மணி சிந்தனை
வெற்றி பெற்றவர்கள் அனைவரும் பல விதமான 
போராட்டங்களை சந்தித்தப்பின் தான் அதை
அடைந்திருக்கிறார்கள்.
TNPSC  Questions  Group 1,Group 2,Group 3,Group 4
கடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட
வினாக்கள் மற்றும் பதில்கள்
1.சலவைக்கல் எதிலிருந்து வெட்டி எடுக்கப்படுகிறது ? 
2.உள்நாட்டு போக்குவரக்குக்கு அதிகம் பயன்படும்  இந்திய
  நதி எது ?
3.நாயை விட பல மடங்கு மோப்பசக்தி கொண்ட உயிரினம் எது?
4.பேருந்தை கண்டுபிடித்தவர் யார் ?
5.இந்திய மிக நீண்ட கோபுரம் எது ?
6.இந்தியாவின் முக்கிய உணவுப்பயிர் எது ?
7.பாரதிதாசன் நடத்திய பத்திரிகையின் பெயர் என்ன ?
8.அதிகமான மாவட்டங்கள் கொண்ட இந்திய மாநிலம் எது?
9.மலேரியா நோயில் எத்தனை வகையுண்டு ? 
10.நபிகள் நாயகம் அதிகம் பாசம் வைத்திருந்த அவரது மகள்
  பெயர் என்ன ?
பதில்கள்:
1.சுண்ணாம்புக்கல்,2.கங்கை, 3.விலாங்குமீன்,4.கிரிப்டோகிராபி,
5.குதுப்மினார்,6.நெல்,கோதுமை, 7.குயில், நெதர்லாந்து,  
8.உ.பி 55 மாவட்டம், 9.3, 10.அன்னை பாத்திமா
இன்று அக்டோபர் 17 
பெயர் : கவிஞர் கண்ணதாசன் ,
மறைந்ததேதி : அக்டோபர் 17, 1981
புகழ் பெற்ற தமிழ்த் திரைப்படப்  பாடலாசிரியரும்
கவிஞரும் ஆவார். நான்காயிரத்திற்கும் மேற்பட்ட
கவிதைகள், ஐந்தாயிரத்திற்கம் மேற்பட்ட 
திரைப்படப்பாடல்கள், நவீனங்கள், கட்டுரைகள்
பல எழுதியவர்.தமிழக அரசின் அரசவைக் கவிஞராக இருந்தவர்.
சாகித்ய அகாதமி விருது பெற்றவர்.

PDF ஆக தரவிரக்க இங்கே சொடுக்கவும்

ஒக்ரோபர் 17, 2010 at 2:42 முப 3 பின்னூட்டங்கள்

கோப்பு உருவாக்கிய தேதி, பயன்படுத்திய நேரம் போன்றவற்றை எளிதாக மாற்றலாம்

புதிதாக நாம் உருவாக்கும் கோப்பில் (File) அதை உருவாக்கிய தேதி
நேரம் மற்றும் கடைசியாக மாற்றப்பட்ட தேதி , நேரம் போன்றவற்றை
கொண்டிருக்கும் இதை நாம் எளிதாக மாற்றி அமைக்கலாம் எப்படி
என்பதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.

 

படம் 1

 

கோப்பு உருவாக்கிய நேரம் மற்றும் அதை நாம் மாற்றி அமைத்த
நேரம் ( Modify Date ) ,  இதற்கு முன் திறந்து பார்த்த நேரம்
( Last Access time) போன்ற அனைத்து தகவல்களையும் எளிதாக
மாற்றி அமைக்கலாம் நமக்கு உதவுவதற்காக ஒரு மென்பொருள்
உள்ளது.

Download

இந்த மென்பொருளை நம் கணினியில் தரவிரக்கி  சொடுக்கியதும்
விரும்பும் கோப்பு உருவாக்கிய தேதி , நேரம் மற்றும் இதற்கு
முன் திறந்து பார்த்த தேதி நேரம் போன்ற அனைத்து தகவல்களையும்
நமக்கு கொடுக்கும் இதில்  நமக்கு எந்த கோப்பின் உருவாக்கிய
தகவல்களை மாற்ற வேண்டுமோ அதை தேர்ந்தெடுத்துக்கொண்டு
டிராக் செய்து படம் 1-ல் உள்ளது போல் இருக்கும் கட்டத்திற்குள்
நகர்த்தியதும் அதை நாம் விரும்பும் தேதிக்கு மாற்றிக்கொள்ளலாம்.
விண்டோஸ் -ல் தேதியை மாற்றுவது மிக எளிதாக இருந்தாலும்
நாம் இந்த மென்பொருளை பயன்படுத்த என்ன காரணம் என்றால்
எந்த ரெக்கவரி மென்பொருள் கொண்டும் கோப்பை உருவாக்கிய
தேதி மற்றும் நேரத்தை கண்டுபிடிப்பது சற்று கடினம் அதனால் தான்.
கண்டிப்பாக இந்த மென்பொருள் அலுவலகத்தில் வேலை செய்யும்
பலருக்கு பயனுள்ளதாக இருக்கும்.

வின்மணி சிந்தனை
உதவி செய்தபின் அதை பிறர்பார்க்கும் படி சொல்லிக்காட்டுவது
இழிவான செயலாகும் , செய்த நன்றிக்கும் பலன் இருக்காது.
TNPSC  Questions  Group 1,Group 2,Group 3,Group 4
கடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட
வினாக்கள் மற்றும் பதில்கள்
1.ஆசிய வளர்ச்சி வங்கி எந்த ஆண்டு நிறுவப்பட்டது ?
2.காந்திஜி சுய சரிதை எந்த மொழியில் இயற்றினார் ?
3.உலக சமாதானத்தின் காவலன் என்று எந்த அமைப்பை
 அழைக்கின்றனர் ?  
4.கால்கள் இருந்தும் நடக்க முடியாத பறவை எது  ?
5.கரையான் அரிக்க முடியாத மரம் எது ?
6.பச்சைத்தங்கம் என்று எதை வர்ணிக்கின்றனர் ? 
7.குருநானக்கிற்கு வழிகாட்டியாக திகழ்ந்தவர் யார் ?
8.நிலக்கரி அதிகமாக கிடைக்கும் இந்திய மாநிலம் எது ?
9.இந்தியாவின் மிகப்பெரிய குகைக்கோவில் எது ?
10.புத்தர் பிறந்த இடம் எது ?
பதில்கள்:
1.1966, 2.ஆங்கிலம்,3.ஐ.நா.சபை, 4. ரீங்காரப்பறவை,
5.தேக்கு, 6.பசுமைக்காடுகள், 7.கபீர்தாசர், 
8.மேற்குவங்காளம், 9.எல்லோரா, 10.லூம்பினி.
இன்று அக்டோபர் 12 
பெயர் : ச. வையாபுரிப்பிள்ளை,
பிறந்ததேதி : அக்டோபர் 12, 1891
இருபதாம் நூற்றாண்டின்  முதன்மை தமிழ்
ஆராய்ச்சியாளர்களில் ஒருவர்.தமிழ் நூற்பதிப்புத்
துறையில் சிறந்த பதிப்பாசிரியராக விளங்கியவர்.
தமிழில் சிறந்த புலமை உள்ளவர்; ஆய்வுக 
கட்டுரையாளர், திறனாய்வாளர், கால மொழி
ஆராய்ச்சியாளர், மொழி பெயர்ப்பாளர், சொற்பொழிவாளர்
கதை கவிதைகள் புனையும் திறம் படைத்தவர் என
பல்முக பரிமாணங்களைக் கொண்டவர்

PDF ஆக தரவிரக்க இங்கே சொடுக்கவும்

ஒக்ரோபர் 12, 2010 at 6:56 பிப 6 பின்னூட்டங்கள்

ஆடியோ, வீடியோ டிரைவர் மென்பொருளை பேக்கப் எடுத்து வைக்கலாம்.

நாம் பயன்படுத்தும் விண்டோஸ் ஆப்ரேட்டிங் சிஸ்டத்தின் ஆடியோ
வீடியோ டிரைவர் மென்பொருள்-களை பாதுகாப்பாக சேமித்துக்
கொள்வது எப்படி என்பதைப்பற்றித்தான் இந்தப் பதிவு.

படம் 1

நாம் கணினி வாங்கிய போது டிரைவர் CD என்று ஒன்று கொடுப்பார்கள்
அதில் தான் நம் கணினியின் ஆடியோ, வீடியோ டிரைவர் மென்பொருள்
இருக்கும். எப்போதாவது நம் கணினியில் பிரச்சினை என்றால் நாம்
உடனடியாக விண்டோஸ் – ஐ அழித்து விட்டு புதிதாக நிறுவ முயற்சி
செய்யலாம் என்று நினைத்தாலும் நம்மிடம் ஆடியோ , வீடியோ டிரைவர்
CD இல்லையே என்று இப்போதைக்கு அழிக்காமல் பிரச்சினையோடு
பயன்படுத்துவோம் என்று இருக்காமல் ஏற்கனவே நம் கணினியில்
இருக்கும் ஆடியோ வீடியோ டிரைவர் மென்பொருளை நாம் பேக்கப்
செய்து பயன்படுத்தலாம் இதற்கு பல மென்பொருள்கள் இருந்தாலும்
அத்தனையும் காசு கொடுத்து தான் பயன்படுத்த முடியும் ஆனால்
சில மென்பொருள்கள் இலவசமாக ஆடியோ,வீடியோ டிரைவர்
சேமிக்க உதவுகின்றது அப்படி இருக்கும் மென்பொருளில் Double Driver
என்ற மென்பொருளைப்பற்றித்தான் பார்க்க இருக்கிறோம்.
இந்த சுட்டியை சொடுக்கி மென்பொருளை தரவிரக்கிக்கொள்ளவும்.

Download

இந்த மென்பொருளை தரவிரக்கி நம் கணினியில் இண்ஸ்டால் செய்து
கொள்ளவும். அடுத்து Double Driver என்ற மென்பொருளை இயக்கி
படம் 1-ல் உள்ளது போல் இருக்கும் Scan Current System என்ற
பொத்தானை அழுத்தவும். நம் கணினியில் நிறுவியிருக்கும் அனைத்து
டிரைவர் மென்பொருள்களையும் நமக்கு காட்டும் இதில் எதெல்லாம்
நமக்கு தேவையோ அதை தேர்ந்தெடுத்துக்கொண்டு Backup now
என்ற பொத்தானை அழுத்தி விரும்பும் இடத்தில் டிரைவர்
மென்பொருள்களை சேமித்துக்கொள்ளவும். டிரைவர் Cd இல்லாதவர்கள்
கண்டிப்பாக இப்போதே ஆடியோ, வீடியோ டிரைவர் மென்பொருள்களை
சேமித்து வைத்துக்கொள்ளவும். அவசர நேரத்தில் இணையத்தில்
சென்று தேடும் நேரமும் தரவிரக்கும் நேரமும் குறையும்.
விண்டோஸ் 98 முதல் விண்டோஸ் 7 வரை அனைத்து
விண்டோஸ் ஆப்ரேட்டிங் சிஸ்டத்திற்கும் துணை புரியும்.

வின்மணி சிந்தனை
நாம் செய்யும் தவறுக்காக அடுத்தவர் மனம் துன்பப்படுமேயானால்
கடவுள் நம்மை விட்டு உடனே சென்று விடுவார்.
TNPSC  Questions  Group 1,Group 2,Group 3,Group 4
கடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட
வினாக்கள் மற்றும் பதில்கள்
1.இந்தியாவிலுள்ள பாட்னாவின் பழைய பெயர் என்ன ?
2.திமிங்கலத்தின் உடலின் எவ்வளவு இரத்தம் இருக்கும் ?
3.சீனாவின் புனித விலங்கு எது ?
4.மாம்பழத்தின் பிறப்பிடம் எது ?
5.ஜப்பானியரின் தேசிய உடையின் பெயர் என்ன ?
6.தங்கப்போர்வை நிலம் எது ?
7.தென் ஆப்பிரிக்காவுக்கு எத்தனை தலைநகர்கள் உண்டு ?
8.கிரிக்கெட் மட்டை எந்த மரத்தால் தயாரிக்கப்படுகிறது ?
9.போக்குவரத்து காவலர்களே இல்லாத நாடு எது ?
10.சுருக்கெழுத்து முறையை கண்டுபிடித்தவர் யார் ?
பதில்கள்:
1.பாடலிபுத்திரம்,2.8 ஆயிரம் லிட்டர்,3.பன்றி,4.இந்தியா,
5.கிமோனா,6.ஆஸ்திரேலியா,7.மூன்று,8.வில்லோ மரம்,
9.நீயூசிலாந்து,10.பிட்மேன்.
இன்று ஆகஸ்ட் 30  
பெயர் : என். எஸ். கிருஷ்ணன் ,
மறைந்த தேதி : ஆகஸ்ட் 30, 1957
தமிழ்த் திரைப்பட நகைச்சுவை நடிகரும் பாடகரும்
ஆவார்.49 ஆண்டுகள் வாழ்ந்து ஆயிரம் ஆண்டு
காலச் சாதனையை கலைத்துறை மூலம் செய்து
காட்டியவர் கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன்
அவர்கள். கூத்தாடிகளாக, குறை மனிதர்களாக, அரிதார
வேலைக்காரர்களாகக் கருதி ஒதுக்கித் தள்ளப்பட்ட நடிகர்
சமுதாயத்தில், அறிவு விளக்கேற்றி வைத்து மக்களுக்குத்
தொண்டு செய்யப் பிறந்தவர்கள் என்ற நிலையை
உருவாக்கியவர்.

PDF ஆக தரவிரக்க இங்கே சொடுக்கவும்

ஓகஸ்ட் 30, 2010 at 7:49 பிப 8 பின்னூட்டங்கள்

கீபோர்ட்-ல் எந்த கீ பழுதானாலும் நாம் தட்டச்சு செய்யலாம்.

கணினி பயன்படுத்தும் நாம் அனைவருவே தெரிந்து வைத்துக்கொள்ள
வேண்டிய முக்கியமான தகவல் தான் இந்தப்பதிவு கீபோர்ட்-ல் எந்த
கீ பழுதானாலும் நாம் பிரச்சினை இல்லாமல் தட்டச்சு செய்யலாம்.

படம் 1

படம் 2

இரண்டு நாட்களுக்கு முன் மலேசியாவில் இருந்து நண்பர் கிருஷ்ணன்
அவரது மடிக்கணினியில் இரண்டு கீ (பொத்தான்) வேலை
செய்யவில்லை இதனால் அந்த குறிப்பிட்ட கீயைப் பயன்படுத்த
முடியவில்லை என்றும் கூறி இருந்தார். சரி நாமும் இவருக்காக
தேடிய போது சில மென்பொருட்கள் கிடைத்தது. கூடவே அதிசயமான
ஒன்றும் கிடைத்தது இதுவரை நாம் இதைப் பயன்படுத்தி இருப்போமா
என்று கூட தெரியவில்லை எந்த மென்பொருளும் இல்லாமல்,
ஆன்லைன் கூட செல்லாமல், நம் கணினியில் Start – > Run
சென்று OSk என்று கொடுத்தால் போதும் ஆன் ஸ்கிரின் கீபோர்ட்
ஒன்று நம் கண்முன்னால் வருகிறது. எந்த கீ தட்டச்சு செய்ய
வேண்டுமோ அந்த கீ மேல் மவுஸ்-ஐ வைத்து சொடுக்கினால்
போதும் எளிதாக நாம் அந்த கீ-யைப் பயன்படுத்த முடிகிறது.

படம் 3

குழந்தைகள் பயன்படுத்தும் சிலவகையான மடிக்கணினியில்
கண்டிப்பாக சில கீ பொத்தான் வேலை செய்யாமல் இருக்கும்
அவர்களுக்கும், கணினி பயன்படுத்தும் நாமும் தெரிந்து
வைத்திருக்க வேண்டிய முக்கியமான பதிவாக இது இருக்கும்.

வின்மணி சிந்தனை
பகையாளியாக இருந்தாலும் உதவி என்று நம்மிடம் வரும்போது
நாம் கண்டிப்பாக உதவ வேண்டும். எனென்றால் நாம் இந்த
பூமிக்கு வந்த விருந்தாளிகள்.
TNPSC  Questions  Group 1,Group 2,Group 3,Group 4
கடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட
வினாக்கள் மற்றும் பதில்கள்
1.இந்தியாவின் ’மாக்கிய வெல்லி’என்று அழைக்கப்பட்டவர் யார்?
2.எகிப்திய நாகரிகம் எங்கு தோன்றியது ? 
3.அசோகரின் கல்வெட்டுக்கள் பெரும்பாலும் எந்த எழுத்துக்களில்
 எழுதப்பட்டிருக்கின்றன ? 
4.ஒரு மின்னலின் சராசரி நீளம் என்ன ?
5.பாம்புகளே இல்லாத கடல் எது ?
6.பென்சில் தயாரிக்கப்பயன்படும் மூலப்பொருட்கள் எவை ?
7.காளான்களில் எத்தனை வகைகள் உள்ளது ?
8.கங்கையும் யமுனையும் கூடும் இடம் எது ? 
9.ஒருவர் மிகக்குறைந்த ஒலியை எங்கு கேட்க முடிகிறது ?
10.மக்கள் தொகையில் ஆண்களை விட பெண்கள் அதிகமாக
  உள்ள மாநிலம் எது ?
பதில்கள்:
1.சாணக்கியர்,2.நைல் நதிக்கரையில்,3.பிராமி,4.6 கி.மீ,
5.அட்லாண்டிக் கடல்,6.  காரியம் , களிமண், மரக்கூழ்,
7.70 ஆயிரம் வகைகள்,8.அலகாபாத்,9.பாலைவனத்தில்,
10.கேரளா.
இன்று ஆகஸ்ட் 24  
பெயர் : வே. இராமலிங்கம் ,
மறைந்த தேதி : ஆகஸ்ட் 24, 1972
தமிழறிஞரும், கவிஞரும் ஆவார். “கத்தியின்றி
இரத்தமின்றி யுத்தமொன்று வருகுது” போன்ற 
தேசபக்திய பாடல்களைப் பாடிய இவர் 
தேசியத்தையும், காந்தியத்தையுயும் போற்றியவர்.
முதலில் பாலகங்காதர திலகர் போன்றவர்களின் தீவிரவாதத்தால்
ஈர்க்கப்பட்ட இவர் மகாத்மா காந்தியின் கொள்கைகளால் 
ஆட்கொள்ளப்பட்டபின் அகிம்சை ஒன்றினால் மட்டுமே
விடுதலையைப் பெறமுடியும் என்ற முடிவுக்கு வந்தவர்.

PDF ஆக தறவிரக்க இங்கே சொடுக்கவும்

ஓகஸ்ட் 24, 2010 at 8:00 பிப 26 பின்னூட்டங்கள்

C , C++ , PHP புரோகிராம் – களை இனி ஆன்லைன் மூலம் இயக்கலாம்.

புரோகிராம் படிக்க வேண்டும் என்ற ஆசை எல்லோருக்கும் இருக்கலாம்
ஆனால் அதற்குரிய மென்பொருள் நாம் செல்லும் இடம் எல்லாம்
இன்ஸ்டால் செய்ய வேண்டுமே என்று பலர் இன்னும் இந்ததுறையை
இன்னும் தொடமல் இருக்கின்றனர் அவர்களுக்கு ஒரு நற்செய்தி
இனி C , C++ , PHP புரோகிராம் – களை ஆன்லைன் மூலம்
இயக்கலாம் எப்படி என்பதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.

படம் 1

எந்த மென்பொருளும் நம் கணினியில் இன்ஸ்டால் செய்யாமல்
சி, சி++  போன்ற மொழி புரோகிராம்களை நாம் ஆன்லைன் மூலம்
எளிதாக இயக்கிப் பார்க்கலாம் நமக்கு உதவுவதற்காக ஒரு
இணையதளம் உள்ளது.

இணையதள முகவரி : http://codepad.org

படம் 2

இந்த இணையதளத்திற்கு சென்று நாம் படம் 1 -ல் காட்டப்பட்டது
போல் எந்த மொழி என்பதையும் அதற்கான புரோகிராமையும்
தட்டச்சு செய்து Submit என்ற பொத்தானை அழுத்தவும்.
(உதாரணமாக நாம் ஒரு C புரோகிராமை கொடுத்திருக்கிறோம்)
அடுத்து வரும் திரை படம் 2-ல் காட்டப்பட்டுள்ளது. இதில்
நம் புரோகிராமை இயக்கி வரும் Output ம் சேர்த்தே கொடுக்கிறது
இதன் பின் நாம் புரோகிராமை எடிட் செய்ய வேண்டுமானாலும்
செய்து மறுபடியும் இயக்கிப் பார்க்கலாம். இன்று முன்னனியில்
இருக்கும் C, PHP, Ruby, Python, C++ போன்ற மொழிகளை
நாம் ஆன்லைன் மூலம் இயக்கலாம் எந்த மென்பொருளும்
தேவையில்லை கண்டிப்பாக இந்த செய்தி புரோகிராமருக்கும்,
கணினி மொழி படிக்க விரும்பும் அனைவருக்கும் பயனுள்ளதாக
இருக்கும்.

வின்மணி சிந்தனை
உதவி செய்யும் போது இவரால் நமக்கு திருப்பி உதவி செய்ய
முடியுமா என்று எண்ண வேண்டாம் ஏனென்றால் பலன்
எதிர்பார்த்து நாம் செய்யும் உதவி சிறப்பாக இருக்காது.
TNPSC  Questions  Group 1,Group 2,Group 3,Group 4
கடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட
வினாக்கள் மற்றும் பதில்கள்
1.பசுமைப்புரட்சிக்கு காரணமாக பயிர் எது ?
2.சணல் உற்பத்தி அதிகமாக உள்ள மாநிலம் எது ?
3.நமது உடலின் வியர்க்காத பகுதி எது ?
4.ஒட்டகத்துக்கு வேர்க்காதது ஏன் ?
5.ஸ்பெயின் நாட்டின் தேசிய சின்னம் எது ?
6.’ஆசியாவின் வைரம்’ என்று அழைக்கப்படும் நாடு எது ?
7.ஒரு மண்டலம் என்பது எத்தனை நாட்கள் ?
8.வேர் இல்லாத தாவரம் எது ?
9.இந்தியர்களே ஆரம்பித்த முதல் வங்கி எது ?
10.இந்தியாவில் எந்த நகரில் அரண்மனைகள் அதிகம் உள்ளன?
பதில்கள்:
1.கோதுமை,2.மேற்கு வங்காளம், 3.உதடுகள்,
4.அதற்கு வியர்வை நாளங்கள் கிடையாது, 5.கழுகு,
6.இலங்கை,7.48 நாட்கள், 8.இலுப்பை, 9.பஞ்சாப் நேஷனல்
 பேங்க்,10.கொல்கத்தா
இன்று ஆகஸ்ட் 17 
பெயர் : ஷங்கர்,
பிறந்த தேதி : ஆகஸ்ட் 17, 1963
இந்தியத் திரைப்பட இயக்குநர்,இவருடைய
படங்கள் தொழில் நுட்பம் , பிரம்மாண்டம் ,
அதிரடியான சமூகக் கருத்துகளை மையமாகக்
கொண்டு உருவாக்கப்படுகிறது.வரும் காலத்தில்
இந்தியாவின் பெருமையை உலகநாடுகளுக்கு
எடுத்துச் செல்வதில் இவரின் பங்கு முக்கியமானதாக
இருக்கும்.

PDF ஆக தறவிரக்க இங்கே சொடுக்கவும்

ஓகஸ்ட் 17, 2010 at 6:04 முப 13 பின்னூட்டங்கள்

உலகச்செய்திகளின் வீடியோவை ஒரே இடத்தில் இருந்து பார்க்கலாம்.

முதன்மையான உலகச்செய்திகள் முதல் அனைத்து செய்திகளையும்
வீடியோவுடன் பார்க்க பயனுள்ள தளம் ஒன்று உள்ளது இதைப்
பற்றித்தான் இந்தப்பதிவு.

அரசியல் செய்தி முதல் விளையாட்டு செய்தி வரை, பங்கு வர்த்தகம்
முதல் பொழுதுபோக்கு செய்திகள் வரை அனைத்தையும் வீடியோவுடன்
ஒரே இடத்தில் இருந்து பார்க்கலாம். CNN முதல் BBC வரை
அனைத்து செய்திகளின் வீடியோவையும் நல்ல தரத்துடன் பார்க்கலாம்.
முக்கியச் செய்திகள் அனைத்தின் வீடியோவையும் உடனடியாக
தளத்தில் காண முடிகிறது. மக்களால் அதிகமான பேர் பார்க்கப்பட்டு
பிரபலமான வீடியோ முதல் பக்கத்தில் இடம் பெற்றுள்ளது. ஒரு
தொலைக்காட்சி சேனலில் நாம் சென்று பார்க்கும் செய்தியைவிட
இந்த தளத்தின் மூலம் நாம் ஒரே இடத்தில் இருந்து அனைத்து
செய்திகளின் வீடியோவையும் பார்க்கலாம்.
இணையதள முகவரி :http://www.newsy.com

வின்மணி சிந்தனை
நம்மிடம் கற்றுக்கொள்ளும் ஆர்வம் இருந்தால் ஒன்றும் 
தெரியாத புதுத் துறையில் கூட நாம் ஜொலிக்கலாம்.
TNPSC  Questions  Group 1,Group 2,Group 3,Group 4
கடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட
வினாக்கள் மற்றும் பதில்கள்
1.உலகின் மிக நீளமான நதி எது ?
2.உலகின் முதல் டெலிபோன் எக்ஸ்சேஞ் எந்த ஆண்டு
 அமைக்கப்பட்டது ?
3.ரூமேனியா நாட்டின் தேசியப்பூ எது ? 
4.பின்லாந்து நாட்டின் தேசியப் பெயர் என்ன ?
5.பனிக்கட்டிகளால் சூழப்பட்ட கண்டம் எது ? 
6.இந்தியாவில் உயரமான கோபுரம் எது ? 
7.இந்தியாவில் உயரமான கோடை வாசஸ்தலம் எது ?
8.இந்தியாவில் உயரமான நீர்விழ்ச்சி எது ? 
9.அர்ஜூனா விருது பெற்ற முதல் செஸ் விளையாட்டு வீரர் யார்?
10.விண்வெளியில் பறந்த முதல் பிராணியின் பெயர் என்ன ? 
பதில்கள்:
1.நைல் நதி,2.1870,3.பூவரசம் பூ,4.ஸுமென் தஸாவல்ட்டா,
5.அண்டார்டிக்கா,6.குதுப்மினார் -240அடி,7.குல்மார்க்(காஷ்மீர்)
8.ஜெர்ஸொப்பா - மைசூர், 9.மானுவல் ஓரோன்,
10.லைகா என்னும் நாய்.
இன்று ஆகஸ்ட் 11  
பெயர் : ஜாக்சன் பாலக் ,
மறைந்த தேதி : ஆகஸ்ட் 11, 1894
ஒரு செல்வாக்குள்ள அமெரிக்க ஓவியர்
ஆவார். இவர் பண்பியல் வெளிப்பாட்டியக்
கலை இயக்கத்தில் முக்கியமான ஒருவராக
இருந்தார்.பல வண்ணங்களை பயன்படுத்தி
கோழி கிண்டுவது போல் கிறுக்கி ஒரு தத்ரூபமான
ஒவியத்தை உருவாக்குபவர்.

PDF ஆக தறவிரக்க இங்கே சொடுக்கவும்

ஓகஸ்ட் 11, 2010 at 2:55 முப 10 பின்னூட்டங்கள்

நம் கணினிக்கு ஆகும் மின்சார செலவை ஒரே நிமிடத்தில் கண்டுபிடிக்கலாம்.

நம் கணினிக்கு தினசரி ஆகும் மின்சார செலவை துல்லியமாக
கண்டுபிடிக்கலாம். திரைக்கு (Monitor) ஆகும் மின்சாரம் முதல் டிஸ்க்
(வன்தட்டு) -க்கு ஆகும் மின்சாரம் வரை அத்தனையையும் மிகச்சரியாக
கண்டுபிடிக்கலாம் இதைப்பற்றித் தான் இந்தப்பதிவு.

கண்டுபிடிப்பில் கூகுள்  மட்டுமல்ல நாங்களும் தான் என்று சொல்லும்
அளவிற்கு ’தல’ மைக்ரோசாப்ட்-ன் அடுத்த கண்டுபிடிப்பு நம்மை
மகிழ்ச்சியில் ஆழ்த்துகிறது. கணினிக்கு ஆகும் மின்சார செலவை
மென்பொருள் மூலம் கண்டுபிடிக்கலாம் என்ற புது சாதனையை
மைக்ரோசாப்ட் ஆராய்ச்சியாளர்கள் நிகழ்த்தியுள்ளனர்.
மென்பொருளின் பெயர் ”ஜோல் மீட்டர்” இந்த மென்பொருளை இங்கு
இருக்கும் சுட்டியை சொடுக்கித் தரவிரக்கிக் கொள்ளுங்கள்.

Download

கணினி ஆன் செய்ததில் இருந்து இதுவரை எவ்வளவு மணி நேரம்
நாம் பயன்படுத்திக் கொண்டிருக்கிறோம் இதற்கு ஆகும் மின்சாரம்
என்ன என்பதை கிலோவாட்ஸ் -ல் நமக்கு சொல்கின்றனர். நாம் எந்த
நாட்டில் இருக்கிறோமோ அந்த நாட்டின் மின்சார வரியைப் போட்டு
நாம் எளிதாக கண்டுபிடிக்கலாம். கண்டிப்பாக இந்தப்பதிவு பலருக்கும்
பயனுள்ளதாக இருக்கும்.

வின்மணி சிந்தனை
முதலிடம் பெறுவதை விட அதை தக்கவைத்துக்கொள்வதற்க்காக
மனிதன் செய்யும் எல்லாத் தவறுகளையும் நிறுத்தினால் இந்த
பூமி சொர்க்க பூமியாகும்.
TNPSC  Questions  Group 1,Group 2,Group 3,Group 4
கடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட
வினாக்கள் மற்றும் பதில்கள்
1.கலிங்கத்துப்பரணியை இயற்றியவர் யார் ?
2.’ மண நூல்’ என்பது எந்த நூலின் வேறுபெயர் ?
3.சென்னைப்ப் பல்கலைக்கழகம் எப்போது உருவாக்கப்பட்டது ?
4.இந்தியாவின் பிஸ்மார்க் என்று அழைக்கப்பட்டவர் யார் ?
5.பால் உற்பத்தியைப் பெருக்க அரசு கொண்டு வந்த திட்டத்தின்
 பெயர் என்ன ?
6.’சுதந்திரா கட்சி’யை உருவாக்கியவர் யார் ?
7.’திருத்தொண்டர் புராணம்’ என்பது எந்த நூலின் 
   வேறொரு பெயர்?
8.கல்பாக்கம் அனுமின் நிலையம் எந்த மாவட்டத்தில் உள்ளது?
9.சென்னை மாநகராட்சி எப்போது உருவாக்கப்பட்டது ?
10.பவானிசாகர் அணை எந்த மாவட்டத்தில் உள்ளது ?
பதில்கள்:
1.செயங்கொண்டார், 2.சீவகசிந்தாமணி,3.1857 ஆம் ஆண்டு,
4.சர்தார் வல்லபாய் படேல், 5.வெண்மைப் புரட்சி, 6.ராஜாஜி,
7.பெரியபுராணம், 8.காஞ்சிபுரம்,9.1688 ஆம் ஆண்டு,10.ஈரோடு
இன்று ஆகஸ்ட் 2
பெயர் : அலெக்சாண்டர் கிரகாம் பெல் ,
மறைந்த தேதி : ஆகஸ்ட் 2, 1922
இவர் ஆசிரியராகவும், அறிவியல் அறிஞராகவும்
அறியப்படுகிறார். இவரது தாயாரும்
மனைவியும் செவிடராதலினால் இவரது
ஆய்விற்கு இது ஓர் உந்துசக்தியாக
அமைந்திருக்கலாம். இவரது ஆய்வுகள் ஊடாக 1876 ஆம்
ஆண்டு தொலைபேசி உருவாக்கப்பட்டது. இவர் பெல்
தொலைபேசி நிறுவனத்தின் நிறுவனரும் ஆவார்.

PDF ஆக தறவிரக்க இங்கே சொடுக்கவும்

ஓகஸ்ட் 2, 2010 at 11:00 பிப 2 பின்னூட்டங்கள்

ஆங்கிலத்தில் சம்பிரதாய கடிதங்கள் இனி எளிதாக எழுதலாம்

பள்ளி முதல் கல்லூரிவரை , அலுவலகங்கள் முதல் சொந்தபந்தங்கள்
வரை அனைவருக்கும் ஆங்கிலத்தில் சம்பிரதாயமான கடிதம் இனி
எளிதாக எழுதலாம் எப்படி என்பதைப்பற்றி தான் இந்த பதிவு.

தமிழ் கடிதம் எழுத சொன்னால் உடனடியாக எழுதும் நம் தமிழ்
நண்பர்களுக்கு ஆங்கிலத்தில் கடிதம் எழுத கூறினால் சற்று யோசித்து
எழுதுகின்றனர்.அலுவலகத்துக்கோ, கல்லூரிக்கோ அல்லது அரசுக்கோ
கடிதம் எழுத கூறினால் அவர்கள் கூறும் முதல் வார்த்தை எங்களுக்கு
அனுபவம் இல்லை என்று, அனுபவம் இருந்தாலும் ஆங்கிலத்தில்
எழுதினால் இலக்கண பிழை ஏற்படுமோ என்ற பயம் உள்ளது.
ஆங்கிலத்தில் இனி எந்த கடிதம் வேண்டுமானாலும் எழுதலாம் நமக்கு
உதவுவதற்க்காகவே ஒரு இணையதளம் உள்ளது.

இணையதள முகவரி :  http://www.readwritethink.org/files/resources/interactives/letter_generator/

இந்த தளத்திற்க்கு சென்று நம் பெயரைக் கொடுத்து எளிதாக எந்த
கடிதம் வேண்டுமானாலும் உருவாக்கலாம். சம்பிரதாய கடிதங்கள் எப்படி
இருக்கவேண்டுமோ அப்படி இருக்க நமக்கு ஒவ்வொரு படியையும்
கையைப்பிடித்து அழைத்துச்செல்கிறது. எந்த இடத்தில் எதற்க்காக என்ன
பெயர் கொடுக்க வேண்டும் என்றும் அலுவலகத்தில் சம்பள உயர்வு
வேண்டும் என்றால் எப்படி கடிதம் எழுத வேண்டும் யாருக்கு எந்த
பதிவியில் இருப்பவர்களுக்கு எழுதவேண்டும், எதை மையப்படுத்தி
நாம் கேட்க வேண்டுவதை ஆங்கிலத்தில் எப்படி எல்லாம் எளிய
முறையில் இலக்கண பிழை இல்லாமல் எழுதலாம் போன்ற அத்தனை
தகவல்களையும் கொண்டு நம்மை ஆங்கிலத்தில் சம்பிரதாய கடிதங்கள்
எழுத உதவுகிறது. பார்ப்பதற்க்கு எளிதாக எந்த விளம்பரமும் இல்லாமல்
தெரிகிறது. கண்டிப்பாக இந்த இணையதளம் நமக்கு பயனுள்ளதாக இருக்கும்

வின்மணி சிந்தனை
அரை குறை படித்தவர்கள் எவ்வளவு தான் துதிபாடி உயர்ந்த
பதவிக்கு சென்றாலும் என்றாவது ஒரு நாள் உண்மை வெளியே
தெரியும் அப்போது பிறரால் ஒதுக்கப்படுவார்கள்.
TNPSC  Questions  Group 1,Group 2,Group 3,Group 4
கடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட
வினாக்கள் மற்றும் பதில்கள்
1.உலகிலேயே அதிக கோட்டைகள் உள்ள நாடு எது ?
2.தந்தி முறை கண்டுபிடிக்கப்பட்டு அனுப்பப்பட்ட முதல் வாசகம்
  என்ன ?  
3.FIAT கார் எப்போது வெளிவந்தது ? அதன் முழுப்பெயர் என்ன?
4.தென்கிழக்கு ஆசிய நாடுகளிலே மிகப்பெரிய உயரியல் பூங்கா
  எங்குள்ளது ? 
5.புத்தர் பிறந்த இடம் எது ?
6.சமாதானத்தின் சின்னமாக வெண்புறாவை அமைத்துக்
  கொடுத்தவர் யார் ?
7.இந்தியாவில் டி.வி எப்பொழுது அறிமுகப்படுத்தப்பட்டது ?
8.முதன் முதலாக தேசிய கீதம் எந்த நாட்டில் தோன்றியது ?
9.இந்தியாவில் முதன் முறையாக சிமெண்ட் எங்கு எப்போது
  தயாரிக்கப்பட்டது?
10.சென்னையில் முதல் திரையரங்கு எப்போது கட்டப்பட்டது ?
பதில்கள்:
1.செக்கோஸ்லோவாகியா, 2.What hath God Wrought
3.1899,Febrica Italiana Automobile Torino ,
4.அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா சென்னை வண்டலூர்,
5.லும்பினி,6.ஒவியர் பிக்காஸோ,7.15-09-1959-ல்,8.ஜப்பான்,
9.சென்னை 1904 ஆம் ஆண்டு,10.1900ஆம் ஆண்டு
இன்று ஜூன் 17 
பெயர் : ஜான்சி ராணி லட்சுமிபாய் ,
மறைந்த தேதி : ஜூன் 17, 1858
வட இந்தியாவின் ஜான்சி நாட்டின் இராணி. 
1857 இந்தியக் கிளர்ச்சியில் பெரும் பங்காற்றி
இந்தியாவில் பிரிட்டனின் ஆட்சிக்கு எதிராகக்
கிளர்ந்து எழுந்தோர்களின் முன்னோடியாகக் 
கணிக்கப்படுகிறவர்.வெள்ளையர் எதிர்ப்புக்காக நேதாஜி
பெண்கள் படை உருவாக்கியபோது அதற்கு "ஜான்சிராணி
ரெஜிமெண்ட்" என்று பெயரிட்டார்.

PDF ஆக தறவிரக்க இங்கே சொடுக்கவும்

ஜூன் 17, 2010 at 8:50 பிப 21 பின்னூட்டங்கள்

Older Posts


பதிவுகள் காப்பூரிமை

உங்கள் மின்னஞ்சலை
உள்ளிட்டு இவ்வலைப்பூவிற்கு
சந்தாதாரராகி,புதிய பதிவுகளை
மின்னஞ்சலில் பெறுங்கள்.

Join 2,724 other subscribers

வின்மணியின் சேவை

சிறந்த முறையில் இணையதளம் உருவாக்க GooLittle.com.நேர்மையான விலையில் சிறப்பான சேவை.

மேலும் விபரங்களுக்கு

அண்மைய பதிவுகள்

Our Sponsors

HOTEL SIVAMURUGAN KANYAKUMARI

HOTEL SIVAMURUGAN

நாள் காட்டி

ஜூன் 2023
தி செ பு விய வெ ஞா
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  

தகவல் பாதுகாப்பு

அனைத்து தகவல்களும் முறையாக Creative Common 2.5 - ஆல் காப்பிரைட் செய்யப்பட்டு வெளிவருகிறது.
Creative Commons License
winmani by winmani is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 2.5 License.

நம் வின்மணி இணைப்பு உங்க தளத்தில் கொடுக்க…

உடனுக்குடன் பெற

winmani

winmani.com

www.winmani.com

TNPSC Ebook

TNPSC Group 1, Group 2,Group 3, Group 4 மற்றும் VAO தேர்வில் அடிக்கடி கேட்கப்பட்ட 3000 வினாக்கள் கொண்ட சிறப்பு இ-புத்தகம். மேலும் விபரங்களுக்கு...

%d bloggers like this: