ஆண்ட்ராய்டு மொபைல் போனை குறிவைத்து தாக்க வருகிறது மால்வேர் – எச்சரிக்கை ரிப்போர்ட்.
ஏப்ரல் 19, 2012 at 4:45 பிப பின்னூட்டமொன்றை இடுக
உலக அளவில் அனைத்து மக்களிடமும் வேகமாக தனக்கென்று ஒரு இடம் பிடித்துக்கொண்டு முன்னேறி வரும் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் துணை புரியும் மொபைல் போன்கள்களை குறிவைத்து தாக்குவதற்காக ஒரு மால்வேர் உருவாக்கப்பட்டுள்ளது.. கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் இந்த மால்வேர் அதிக அளவில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது இதில் இருந்து எப்படி நம் ஆண்ட்ராய்டு மொபைல் போன் -ஐ பாதுகாக்கலாம் என்பதைப் பற்றிய சிறப்பு பதிவு.

படம் 1
ஆண்டிராய்டு போனில் வைரஸ் மற்றும் மால்வேர் தாக்குதல் குறைவாக இருக்கும் என்று எதிர்பார்த்திருந்த அனைவருக்கும் அதிர்ச்சி அளிக்கும் விதமாக ஒரு குறிப்பிட்ட அப்ளிகேசனை நிறுவிய சில நிமிடங்களிலே ஆண்ட்ராய்டு போனை செயல் இழக்க செய்யும் அளவிற்கு வெளிவந்திருக்கும் இந்த மால்வேர் எப்படிபட்டது இதிலிருந்து நம் மொபைல் போன்-ஐ பாதுகாப்பது எப்படி என்பதைப் பற்றி விரிவாக பார்க்கலாம்.
உங்கள் ஆண்ட்ராய்டு போனுக்கு ஒரு குறுஞ்செய்தி வரும் அதில் புதிதாக இலவசமாக கூகிள் ஒரு சேவை கொடுக்க இருக்கிறது இந்த சலுகையை உடனடியாக பெற இங்கு கொடுத்திருக்கும் இணைப்பில் சென்று தறவிரக்கி கொள்ளலாம் என்பது தான், மிகக்கவனமாக பார்த்தால் http://www.android வரை சரியாக இருக்கும் அதன் பின் ”-” சேர்த்து தொடர்ந்து முகவரி இருக்கும் இப்படி வரும் இணைப்பை சொடுக்கினால் நம் போனும் பாதிகப்படும். இந்த மால்வேர் வெளிவந்த இரண்டு நாட்களுக்குள்ளே இதற்கு பெயரும் வைத்துவிட்டனர் இதன் பெயர் UpdtBot என்பது தான். இந்த மால்வேர் நிறுவப்பட்ட பின் Remote Command and Control (C&C) server மூலம் தன் வேலையை தொடங்கும். பாதிகப்பட்டு இருக்கும் மொபைல் போனில் இருக்கும் அனைவருக்கும் இதே போல் செய்தி அனுப்பி வலை விரிக்க துவங்கிவிடும். இதுவரை இந்த மால்வேர் 1,60,000 ஆண்டிராய்டு போன்களை பதம் பார்த்துள்ளது. அதனால் இது போல் வரும் இணைப்புகளை சொடுக்காமல் இருந்தாலே பெரும் பாதிப்புகளில் இருந்து நம் மொபைல் போன்-ஐ பாதுகாக்கலாம்.
ஆண்ட்ராய்டு மொபைல் போன் மூலம் ஆங்கிலம் (Spoken English) பேச கற்றுக்கொடுக்கும் பயனுள்ள அப்ளிகேசன்.
அழகான மொபைல் இணையதளம் (Mobile Website ) இலவசமாக உருவாக்கலாம்.
மொபைல் மூலம் இருக்கும் இடத்தை கண்டுபிடிக்க உதவும் சோசியல் நெட்வொர்க்
தினம் ஒரு புத்தகம் என்.வி. கலைமணி அவர்கள் எழுதிய " ரமண மகரிஷி (வாழ்க்கை வரலாறு) " புத்தகம் தறவிரக்க இங்கு சொடுக்கவும்.
வின்மணி சிந்தனை மனதில் இரக்கம் இல்லாதவன் மிருகத்தை விட கொடிய உயிரினம்.
இன்று ஏப்ரல் 19பெயர் : சார்லஸ் டார்வின் மறைந்த தேதி : ஏப்ரல் 19, 1882 ஓர் ஆங்கிலேய இயற்கையியல் அறிஞர். இவர் முன்வைத்த உயிரினங்களின் படிவளர்ச்சிக் கொள்கை ஓர் அடிப்படையான புரட்சிகரமான அறிவியற் கொள்கை. இவர் தாம் கண்டுபிடித்த உண்மைகளையும், கொள்கைகளையும், 1859 ஆம் ஆண்டில் உயிரினங்களின் தோற்றம் (The Origin of Species) என்னும் தலைப்பில் ஒரு நூலாக வெளியிட்டார்.
Entry filed under: அனைத்து பதிவுகளும், ஆண்ட்ராய்டு, தொழில்நுட்ப செய்திகள், பயனுள்ள தகவல்கள்.
Subscribe to the comments via RSS Feed