ஆடைகள் வடிவமைக்க அசத்தலான ஐடியாக்களை கொடுக்கும் பயனுள்ள தளம்.
ஏப்ரல் 18, 2012 at 9:53 முப பின்னூட்டமொன்றை இடுக
மானத்தை மறைக்கத்தான் ஆடை என்று இருந்தது ஒரு காலத்தில் ஆனால் தற்போது ஆடை வடிவமைப்பில் நாளும் பல்வேறு கண்டுபிடிப்புகள் மட்டுமல்லாது அத்தனையும் மக்களிடம் பெரும் வரவேற்பைப்பெற்றுள்ளது அந்த வகையில் இன்று
நாம் பார்க்க இருக்கும் தளத்தில் ஆடைகள் உருவாக்க பலவிதமான புதுமையான ஐடியாக்களை அள்ளி கொடுக்கிறது இதைப் பற்றித்தான் இந்தப்பதிவு.

படம் 1
ஆடையில் அதிக முக்கியத்துவம் கொடுக்கும் பெண்கள் முதல் கல்லூரி மாணவர்கள், பள்ளி மாணவர்கள் , குழந்தைகள் என அனைவரும் தங்களுடைய உடல் வடிவமைப்புக்கு தகுந்தாற் போல் எப்படி எல்லாம் ஆடை வடிவமைத்தால் நன்றாக இருக்கும் என்பதை சொல்வதற்காக இந்தத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.
இணையதள முகவரி : http://costumeideazone.com
இத்தளத்திற்கு சென்று நாம் படம் 1-ல் காட்டியபடி Unique Costume Ideas, Costume Ideas for Couples, Costume Ideas for Groups ,Traditional Costume Ideas, Quick & Easy Costume Ideas என்று இருக்கும் தலைப்புகளில் நமக்கு வேறுபட்ட வடிவமைப்புக்கொண்ட ஆடைகளின் ஐடியாக்களை தெரிந்துகொள்ள Unique Costume Ideas என்ற பக்கத்திலும், திருமண ஜோடிகள் ,குரூப் நண்பர்கள் ஆடைகள், விழாக்கால ஆடைகள். எளிமையான ஆடைகள் என்று பல்வேறுப்பட்ட மக்களும் தாங்கள் விருப்பபடி தங்களுக்கு பிடித்தமான துறையில் ஆடைகளை தேர்ந்தெடுத்து அதில் தெரிவித்தப்படி நமக்கு தேவையான ஆடைகளை புதுமையாக வடிவமைத்து அனைவரின் பாராட்டையும் பெறலாம். ஆடை வடிவமைப்பாளர்கள் மட்டுமல்லாது ஆடை வடிவமைப்பில் ஈடுபாடுள்ள அனைவருக்கும் இந்தப்பதிவு பயனுள்ளதாக இருக்கும்.
இணையதள வடிவமைப்பாளருக்கு துணை செய்யும் பயனுள்ள இணையதளம்
3D-ல் பிடித்த வடிவங்களை எளிதாக ஆன்லைன் மூலம் உருவாக்கலாம்
உங்கள் புகைப்படத்துக்கு அழகான சட்டகம் வடிவமைக்கலாம் நொடியில்.
இணையதள சொந்தகாரருக்கும் வடிவமைப்பாளருக்கும் ஒரு வரப்பிரசாதம்
தினம் ஒரு புத்தகம் நாரா நாச்சியப்பன் அவர்கள் எழுதிய " ஏழாவது வாசல் (ராமகிருஷ்ண பரமஹம்சர் சொன்ன கதைகள்) " புத்தகம் தறவிரக்க இங்கு சொடுக்கவும்.
வின்மணி சிந்தனை சரியான நேரம் உடல் தூங்கி ஓய்வெடுத்தால் பெரும்பாலான நோய்களை தவிர்க்கலாம்.
இன்று ஏப்ரல் 18
பெயர் : ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் மறைந்த தேதி : ஏப்ரல் 18, 1955 பயன்பாட்டுக் கணிதத் திறமைகள் கொண்ட ஒரு கோட்பாட்டு இயற்பியல் அறிஞர் ஆவார். இருபதாம் நூற்றாண்டின் மிக முக்கியமான அறிவியலாளராகப் பொதுவாகக் கருதப்படுகிறார். இவர் புகழ்பெற்ற சார்புக் கோட்பாட்டைமுன்வைத்ததுடன் குவாண்டம் பொறிமுறை, புள்ளியியற் பொறிமுறை (statistical mechanics) மற்றும் அண்டவியல் ஆகிய துறைகளிலும் குறிப்பிடத்தக்க பங்களிப்புகளைச் செய்துள்ளார்.
Entry filed under: அனைத்து பதிவுகளும், இணையதளம், தொழில்நுட்ப செய்திகள், பயனுள்ள தகவல்கள். Tags: ஆடைகள் வடிவமைக்க அசத்தலான ஐடியாக்களை கொடுக்கும் பயனுள்ள தளம்..
Subscribe to the comments via RSS Feed