டிவிட்டர் நண்பர்களை வகைப்படுத்தி வகைக்க உதவும் பயனுள்ள தளம்.
மார்ச் 14, 2012 at 8:37 முப 1 மறுமொழி
டிவிட்டரில் இருக்கும் நம் நண்பர்கள் அனைவரையும் வகைப்படுத்தி வைத்து தேவைப்படும் நேரங்களில் எளிதாக ஒவ்வொருவரையும் எளிதாக தொடர்பு கொள்ள உதவியாக ஒரு தளம் உள்ளது இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.

படம் 1
டிவிட்டரில் இருக்கும் பல வகையான நபர்களில் சொந்தங்கள் முதல் நண்பர்கள், தெரிந்தவர்கள், தெரியாதவர்கள் என அனைவரையும் Organize செய்து வைப்பதற்கு உதவ ஒரு தளம் உள்ளது.
இணையதள முகவரி : http://www.peepnote.com
இத்தளத்திற்கு சென்று Sign in using Twitter என்ற பொத்தானை சொடுக்கி நம் டிவிட்டர் கணக்கை கொடுத்து உள்நுழைய வேண்டும் பின் எளிதாக நம் டிவிட்டர் Follower களை எளிதாக வகைப்படுத்த ஆரம்பிக்கலாம். ஒவ்வொரு Contact -க்கும் அதற்கு தொடர்பான பெயரை கொடுத்து வைக்கலாம், இதே போல் நம் டிவிட்டர் Tag -களை கூட எளிதாக Organize செய்து வைக்கலாம். இதோடு கூடுதல் சேவையாக Search Your peeps என்பதில் நம்மை பின் தொடர்பவர்கள் முதல் Notes என அனைத்தையும் எளிதாக தேடலாம். டிவிட்டர் பயனாளிகளுக்கு இந்தப்பதிவு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
டிவிட்டரில் ஆடியோ டிவீட் செய்ய நமக்கு உதவும் பயனுள்ள தளம்.
நம் டிவிட்டர் செய்திகள் அனைத்தையும் சேமிக்க (Backup) செய்ய ஒரு பயனுள்ள தளம்.
கூகுள் டிவி- யில் டிவிட்டர், ஃபிளிக்கர் பயன்படுத்தலாம் சிறப்பு பதிவு வீடியோவுடன்
டிவிட்டர் செய்திகளை பேச வைத்து காதால் கேட்கலாம்.
தினம் ஒரு புத்தகம் நா. வானமாமலை அவர்கள் எழுதிய " வ.உ.சி - முற்போக்கு இயக்கங்களின் முன்னோடி " புத்தகம் தறவிரக்க இங்கு சொடுக்கவும்.
வின்மணி சிந்தனை ஆலயங்கள் செல்வதை விட , மனதளவில் யாருக்கும் பாவம் செய்யாமல் இருப்பதே சிறந்தது.
தமிழ் - ஆங்கிலம் மொழிபெயர்ப்பு near நெருங்கிய ,அருகில் near நோக்கி,அருகே near by அண்மித்த ,அயல் near by அண்மை,அயல் nearby அக்கம், பக்கம் nearby அருகில்,கிட்டவுள்ளது nearest வெகு அருகாமையில் nearly அநேகமாக, கிட்டத்தட்ட neat சுத்தம் ,தெளிவு neat idea சிறப்பான யோசனை
இன்று மார்ச் 14
பெயர் : கார்ல் மார்க்ஸ் , மறைந்த தேதி : மார்ச் 14, 1883 ஜெர்மனிய மெய்யியலாளர்களுள் ஒருவர். மெய்யியலாளராக மட்டுமல்லாது அரசியல் பொருளாதார வரலாற்றியல் நிபுணராகவும், தலைசிறந்த ஆய்வறிஞராக,எழுத்தாளராக, சிந்தனையாளராக, புரட்சியாளராகவும் கார்ல் மார்க்ஸ் அறியப்படுகிறார்.பல்வேறு துறைகளிலும் ஏராளமான விவகாரங்கள் பற்றிய ஆய்வுகளையும் கருத்துக்களையும் இவர் வெளியிட்டுள்ளார்.
Entry filed under: அனைத்து பதிவுகளும், இணையதளம், தொழில்நுட்ப செய்திகள், பயனுள்ள தகவல்கள். Tags: டிவிட்டர் நண்பர்களை வகைப்படுத்தி வகைக்க உதவும் பயனுள்ள தளம்..
1.
HOTLINKSIN.com | 8:59 முப இல் மார்ச் 26, 2012
மிக மிக பயனுள்ள பதிவு