புகைப்படங்களை இலவசமாக பதிவேற்றவும் பகிர்ந்து கொள்ளவும் உதவும் பயனுள்ள தளம்.
மார்ச் 13, 2012 at 12:32 முப பின்னூட்டமொன்றை இடுக
நாம் எடுத்த புகைப்படங்களை நம் கணினியில் அல்லது சிடி டிவிடி என்று ஏதாவது ஒன்றில் சேமித்து வைத்திருப்போம், பிளிக்கர் , பிகாசா போன்ற தளங்களை போல் புதிதாக ஒரு தளம் வந்துள்ளது இந்தத்தளத்தில் நாம் இலவசமாக ஒரு பயனாளர் கணக்கு உருவாக்கி நம்மிடம் இருக்கும் புகைப்படங்களை எளிதாக பதிவேற்றியும் அதை பகிர்ந்து கொள்ளவும் செய்யலாம் இதைப் பற்றித்தான் இந்தப்பதிவு.

படம் 1
புகைப்படங்களை ஆன்லைன் மூலம் சேமித்து வைப்பதற்காகவும் அதை நண்பர்கள் பலருடன் பகிர்ந்து கொள்வதற்காகவும் உருவாக்கப்பட்ட தளம் தான் இந்தத்தளம்.
இணையதள முகவரி : http://sharypic.com
இத்தளத்திற்கு சென்று வலது பக்கம் மேல் இருக்கும் Create my account என்பதை சொடுக்கி புதிதாக ஒரு இலவச பயனாளர் கணக்கு உருவாக்கி கொள்ளலாம். அதன் பின் நம்மிடம் இருக்கும் புகைப்படங்களை மொத்தமாகவோ அல்லது ஒவ்வொன்றாகவோ பதிவேற்றலாம், பதிவேற்றிய பின் அந்த புகைப்படங்களை ஆல்பம் போல் செய்து நம் நண்பர்கள் தெரிந்தவர்கள் எனஅனைவருடனும்
எளிதாக பகிர்ந்து கொள்ளலாம். பிளிக்கர் பிகாசா போன்ற தளங்களில் இருக்கும் புகைப்படங்களை கூட நாம் இந்தத்தளத்தில் எளிதாக பகிர்ந்து கொள்ள செய்யலாம். புதுமை விரும்பிகளுக்கும் புகைப்பட கலைஞர்களுக்கும் இந்தத்தளம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
ஆன்லைன் -ல் புகைப்படங்களை வெட்ட , அளவுகளை மாற்ற உதவும் அசத்தலான இணையதளம்.
நம் புகைப்படத்துக்கு அழகான இமெஜ் எபெக்ட்ஸ் ( Image Effects ) நொடியில் ஆன்லைன் மூலம் செய்யலாம்.
ஆண்டிராய்டு போனில் உங்கள் புகைப்படத்தை அழகான கார்டூனாக மாற்றும் வித்தை வீடியோவுடன்.
புகைப்படங்களை பெரியதாக்கவும் சிறியதாக்கவும் உதவும் பயனுள்ள இலவச மென்பொருள்.
தினம் ஒரு புத்தகம் ந.சுப்புரெட்டியார் அவர்கள் எழுதிய " பாண்டி நாட்டுத் திருப்பதிகள் " புத்தகம் தறவிரக்க இங்கு சொடுக்கவும்.
வின்மணி சிந்தனை நாளும் நேரமும் ஒரு மனிதனுக்கு வாழ்க்கையில் ஒரு முறை தான் கிடைக்கிறது.
தமிழ் - ஆங்கிலம் மொழிபெயர்ப்பு naughtily குறும்புத்தனமான naughty சுட்டி, அடம்பிடித்தல் nausea வாந்தியெடுத்தல், குமட்டுதல் nautical கப்பல் துறை சார்ந்த nautical chart வழிகாணல் வரைப்படம் nautical mile கடல் மைல் navelanat தொப்புள் , நாபி to navigate கப்பற்பிரயாணம் செய் navigationeduc. இடம் மாற்றம் navy கப்பல்படை ,கடற்படை இன்று மார்ச் 13
பெயர் : ஜோசப் பிரீஸ்ட்லி , பிறந்த தேதி : மார்ச் 13, 1733 ஓர் ஆங்கிலேய வேதியியல் அறிஞர். இவருடைய பல கண்டுபிடிப்பு முயற்சிகளில் ஆக்ஸிஜனைக் (ஒட்சிசன், உயிர்வளி) கண்டுபித்தவர்.இவர் ஒரு சிறந்த ஆசிரியராகவும் மெய்யியல் அறிஞராகவும் திகழ்ந்தார். கார்பன்-டை-ஆக்சைடு (காபனீரொட்சைட்டு) பற்றிய இவருடைய ஆய்வுகளும் புகழ் பெற்றவை.
Entry filed under: அனைத்து பதிவுகளும், இணையதளம், தொழில்நுட்ப செய்திகள், பயனுள்ள தகவல்கள். Tags: புகைப்படங்களை இலவசமாக பதிவேற்றவும் பகிர்ந்து கொள்ளவும் உதவும் பயனுள்ள த.
Subscribe to the comments via RSS Feed