சில நிமிடங்களில் அழகான புதுமையான லேபிள் ( Label ) உருவாக்கலாம்.
மார்ச் 1, 2012 at 2:56 பிப 5 பின்னூட்டங்கள்
பலவிதமான சேவைகள் ஆன்லைன் மூலம் பல தளங்களில் கிடைக்கின்றது அந்த வகையில் இன்று அழகான லேபிள் நம் விருப்பபடி உருவாக்கலாம் நமக்கு உதவுவதற்காக ஒரு தளம் இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.

படம் 1
ஏதாவது ஒரு தளத்தில் அல்லது யாரவது உருவாக்கி கொடுத்தலேபிளைத்தான் இதுவரை பயன்படுத்தி வருகிறோம் நம் விருப்பப்படி லேபிள் உருவாக்க முடியுமா என்று நினைப்பவர்களுக்கு உதவ ஒரு பயனுள்ள தளம் உள்ளது.
இணையதள முகவரி : http://labeley.com/beer
இத்தளத்திற்கு சென்று நாம் நம் விருப்படி எந்த வண்ணத்தில் , எந்த வடிவத்தில் , என்னவெல்லாம் வேண்டும் என்று நினைத்தோமோ
அத்தனையும் ஒவ்வொன்றாக சில நிமிடங்களில் தேர்ந்தெடுத்து அழகான புதுமையான லேபிளை உருவாக்கலாம். முதலில் Pick a label shape என்பதில் எந்த வடிவத்தில் இருக்க வேண்டும் என்பதையும் அடுத்ததாக இருக்கும் Main Graphics என்பதில் லேபிள் உள்ளே என்ன டிசைன் இருக்க வேண்டும் என்பதையும் அடுத்ததாக Banners and ribbons என்பதில் எந்த பேனர் பிடித்திருக்கிறதோ அதையும் தேர்ந்தெடுத்து அடுத்ததாக Text and Upload என்பதில் தேவையான டெக்ஸ்ட் தகவலை கொடுத்து அடுத்து இருக்கும் Save and Share என்பதை சொடுக்கி நம் கணினியில் சேமித்து வைக்கலாம், உருவாக்கிய லேபிளை நம் நண்பர்களிடம் எளிதாக பகிர்ந்து கொள்ளவும் செய்யலாம். கண்டிப்பாக சிறுவகர்கள் மட்டுமின்றி அனைவருக்கும் இந்தப்பதிவு பயனுள்ளதாக இருக்கும்.
பழைய அட்டையில் லேப்டாப் கணினி உருவாக்கும் புதிய அதிசயம்
பேப்பர் அட்டையை வெட்டி பல அதிசயங்களை உருவாக்கலாம்
தன்னகத்தே மாறும் வகையில் பிளாக் தலைப்பு அட்டை எளிதாக உருவாக்கலாம்.
அழகான மல்டிமீடியா வாழ்த்து அட்டை ஆன்லைன் மூலம் எளிதாக நொடியில் உருவாக்கலாம்.
தினம் ஒரு புத்தகம் பெரியசாமி தூரன் அவர்கள் எழுதிய " முருகன் அருள்மணி மாலை " புத்தகம் தறவிரக்க இங்கு சொடுக்கவும்.
வின்மணி சிந்தனை கடவுள் எந்த நேரத்தில் வேண்டுமானாலும் நமக்கு உதவி செய்யலாம்.
தமிழ் - ஆங்கிலம் மொழிபெயர்ப்பு nationalization தேசியமயமாக்கு nationally தேசிய nationals குடிமகன் , பிரஜை nations நாடுகள் nationwide நாடு தழுவிய native உடன் பிறந்த native land பிறந்த நாடு ,அன்னை பூமி Native Place சொந்த இடம் , சொந்த ஊர் natives பழங்குடி மக்கள் natural food இயற்கை உணவு
இன்று மார்ச் 1
பெயர் : ஏ. டி. பன்னீர் செல்வம், மறைந்த தேதி : மார்ச் 1, 1940 சென்னை மாநிலத்தின் சட்டமன்ற உறுப்பினராகவும், (1930-1939) சென்னை மாநிலத்தின் நிதி உள்துறை அமைச்சராகவும் (1937) இருந்தவர். இங்கிலாந்தில் பார் அட் லா (Bar at Law) பட்டம் பெற்றவர். ஆங்கில அரசு அவருக்கு ராவ் பகதூர்,சர் பட்டங்களை வழங்கி சிறப்பித்தது. இரண்டாம் உலகப்போரின் போது ஆங்கில அரசின் போர்க்கால அமைச்சரவைக்கு ஆலோசகராகப் பணியாற்றினார்.
Entry filed under: ஆன்லைன் புரோகிராம், இணையதளம், தொழில்நுட்ப செய்திகள், பயனுள்ள தகவல்கள். Tags: சில நிமிடங்களில் அழகான புதுமையான லேபிள் ( Label ) உருவாக்கலாம்..
1.
S.SIVASUBRAMANIANN. | 6:08 பிப இல் மார்ச் 8, 2012
VERY NICE INFO. thanks
2.
அபராஜிதன் | 8:50 பிப இல் மார்ச் 9, 2012
Thanks for information
3.
chinnamalai | 11:15 முப இல் மார்ச் 15, 2012
ரொம்ப சூப்பர்
4.
ஆட்டோமொபைல் தமிழன் | 11:57 பிப இல் மார்ச் 29, 2012
அற்புதம்
5.
Ramadoss | 12:21 பிப இல் நவம்பர் 13, 2013
An usefull site