கணித திரைப்படங்கள் அனைத்தையும் ஒரே இடத்தில் காட்டும் பயனுள்ள தளம்.
பிப்ரவரி 20, 2012 at 9:09 முப 2 பின்னூட்டங்கள்
ஆங்கில திரைப்படங்களில் கணிதத்தை மையமாக வைத்து வெளிவந்த அனைத்து திரைப்படங்களையும் ஒரே இடத்தில் காட்ட நமக்கு ஒரு தளம் உதவுகிறது இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.

படம் 1
திரைப்படங்கள் பல வகையான பிரிவுகளில் வகைப்படுத்தப்பட்டு நமக்கு காட்ட பல இணையதளங்கள் இருந்தாலும் குறிப்பிட்ட துறை சார்ந்த திரைப்படங்களை தேடுவதென்பது இன்று வரை சிரமமாக உள்ளது என்று எண்ணும் அனைவருக்கும் கணிதத் திரைப்படங்களை வகைப்படுத்தி காட்ட ஒரு தளம் உதவுகிறது.
இணையதள முகவரி : http://www.math.harvard.edu/~knill/mathmovies/index.html
இத்தளத்திற்கு சென்று கணிதத்தை முன்னிருத்தி வெளிவந்த பல வகையான ஆங்கிலத் திரைப்படங்களில் இருந்து குறிப்பிட்ட திரைப்படத்தில் கணிதத்தை சொல்லும் காட்சிகள் அனைத்தையும் ஒரே சொடுக்கில் எளிதாக தறவிரக்கி பார்க்கலாம். இரண்டு வகையான ஃபார்மெட்டில்[ SWF, M4V ] இருந்து நமக்கு எந்த வகையான ஃபார்மெட் வேண்டுமோ அதை சொடுக்கி தரவிரக்கலாம். உதாரணமாக கணித்தை பற்றிய ஆங்கிலப்படங்களில் அதுவும் குறிப்பாக கணிதத்தை பற்றிய காட்சிகளை மட்டும் தறவிரக்க விரும்பும் அனைவருக்கும் இந்தப்பதிவு பயனுள்ளதாக இருக்கும்.
மிகத் துல்லியமான திரைப்படங்களை மட்டுமே கொடுக்கும் இணையதளம்
ஆன்லைன்-ல் திரைப்படங்களை இலவசமாக பார்க்கவும் தரவிரக்கவும் சிறந்த தளம்.
மைக்ரோசாப்ட்-ம் நாசாவும் இணைந்து எடுத்திருக்கும் செவ்வாயின் துல்லியமான படம்
மில்லின் கணக்கில் வீடியோக்களை அள்ளி கொடுக்கும் விக்கியின் புதிய பரிமாணம் Qwiki .
தினம் ஒரு புத்தகம் கல்கி அவர்கள் எழுதிய " ஸ்ரீகாந்தன் புனர்ஜன்மம் " புத்தகம் தறவிரக்க இங்கு சொடுக்கவும்.
வின்மணி சிந்தனை காலையில் எழும் போது நாம் இந்த உலகிற்கு வாடகைக்கு வந்தவர் தான் நான் என்ற எண்ணம் வர வேண்டும்.
தமிழ் - ஆங்கிலம் மொழிபெயர்ப்பு ear-ring தோடு , குண்டலம் , கடுக்கண் earache காதுக்குத்து eardrum பேரிகை , மேளம் , செவிப்பறை earfold காதுமடல் , செவிமடல் earl துரை , முடியரசின் மாநிலப் பிரதிநிதி earlier முன்னர் , மந்திய , ஆரம்ப earliest குறித்த காலத்த்ற்கு முன் , அதிகாலையில் earlobe காதுச்சோனை earlobe வெளிக் காது early முன்கூட்டியே , முன்னதாக
இன்று பிப்ரவரி 20
பெயர் : கா. நமச்சிவாயம், பிறந்த தேதி : பிப்ரவரி 20, 1876 தமிழகத்தின் சிறந்த புலவராக தமிழறிஞராக விளங்கியவர் தமிழ்ப்பேராசிரியர்.தைத்திங்கள் முதல்நாளைத் தமிழ்த் திருநாளாகக் கொண்டாட வழி செய்தவர்.திருவள்ளுவருக்கு முன் - திருவள்ளுவருக்குப் பின் என தமிழகத்துக்கு ஒரு சகாப்தகால அளவு கிடைக்க வழிவகுத்தவரும் இவரே. இதற்கு உற்ற துணையாக உ.வே.சாமிநாதய்யரும்,மறைமலை அடிகளாரும் இருந்தனர்.
Entry filed under: அனைத்து பதிவுகளும், இணையதளம், தொழில்நுட்ப செய்திகள், பயனுள்ள தகவல்கள். Tags: கணித திரைப்படங்கள் அனைத்தையும் ஒரே இடத்தில் காட்டும் பயனுள்ள தளம்..
1.
sudeesi | 10:49 முப இல் மார்ச் 2, 2012
பள்ளி மானவர்களுக்கு மிகவும் பயனுள்ள தளம் பகிற்வுக்கு மிக்க நன்றி
2.
sethuramasamy | 2:44 பிப இல் மார்ச் 2, 2012
உன்னைவிடத் தகுதியும் திறமையும் உடையோருடன் நட்புக்கொள் என்பர் பெரியோர் . வின்மணி நட்புக் கிடைத்தவுடன் அனுபவத்திலும் உணர்ந்து வருகின்றேன். இன்று அழகி விசுவிடமிருந்து பாராட்டுக் கடிதம் வந்தது. அந்தப்பாராட்டுக்குரியவர் வின்மணிதான்! நன்றி வின்மணியாரே! உங்களுக்கு மட்டும் புதிய தகவல்கள் எப்படிக் கிடைக்கின்றன? சூட்சுமம் சொல்வீரோ