மைக்ரோசாப்ட் பிங் தேடுபொறி நடத்தும் Deal shopping பயனுள்ள தகவல்.
பிப்ரவரி 16, 2012 at 8:39 முப 3 பின்னூட்டங்கள்
மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் பிங் தேடுபொறி இணையம் வழியாக பொருட்களை விற்பனை செய்வதற்காக Shopping என்ற புதிய பக்கத்தை அறிமுகம் செய்துள்ளது இதில் நாம் விரும்பும் பொருட்களை குறைந்த விலையிலும் தரமான நிலையிலும் வாங்கலாம் இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.
இணையம் வழியாக பொருட்களை விற்பதற்கு என்று பல இணையதளங்கள் இருந்தாலும் சில முக்கிய நிறுவனம் நடத்தும் Shopping தளங்களில் இருந்து பொருட்களை வாங்குவது தற்போது அதிகமாகிவருகிறது அந்த வகையில் பிங் தளம் தற்போது Deal Shopping என்ற பக்கத்தை அறிமுகப்படுத்தி இருக்கிறது.
இணையதள முகவரி : http://www.bing.com/shopping
மைக்ரோசாப்ட் தேடுபொறியான பிங் அறிமுகப்படுத்தியிருக்கும் இத்தளத்திற்கு சென்று Shopping என்ற பக்கத்தில் இருக்கும் பல வகைப்பட்ட துறைகளில் இருந்து எந்தத்துறை சார்ந்த பொருட்கள் வாங்க வேண்டுமோ அந்தத்துறையை தேர்ந்தெடுத்துக்கொண்டு பின் என்ன பொருட்கள் வாங்க வேண்டும் என்பதை தேர்வு செய்யலாம். பல நிறுவனங்களின் பொருட்கள் விலையுடன் காட்டப்பட்டிருக்கிறது, பல நிறுவனத்தின் பொருட்களை ஓப்பிட்டு பார்த்து எந்த நிறுவனத்தின் பொருள் நமக்கு சரியாக இருக்கும் என்று தெரிந்து கொண்டு வாங்கலாம். எந்தப்பொருள் நமக்கு வேண்டுமோ அதை தேர்வு செய்து ஆன்லைன் மூலம் பணம் செலுத்தி வாங்கும் வசதியும் இருக்கிறது. புதுமை விரும்பிகளுக்கும் ஆன்லைன் மூலம் பொருட்கள் வாங்க விரும்புபவர்களுக்கும் இத்தளம் பயனுள்ளதாக இருக்கும்.
உலகை திரும்பி பார்க்க வைக்கும் மைக்ரோசாப்ட் விண்டோஸ் 8 (Windows 8 ) இலவசமாக தரவிரக்கலாம்.
மைக்ரோசாப்ட் அறிமுகப்படுத்த இருக்கும் துல்லியமான வெப்கேமிரா
மைக்ரோசாப்ட்-ம் நாசாவும் இணைந்து எடுத்திருக்கும் செவ்வாயின் துல்லியமான படம்
மைக்ரோசாப்ட் அறிமுகப்படுத்த இருக்கும் விநோதமான பேட்டரி ஜார்சர்
தினம் ஒரு புத்தகம் கி.வா.ஜ. அவர்கள் எழுதிய " அபிராமி அந்தாதி - உரை " புத்தகம் தறவிரக்க இங்கு சொடுக்கவும்.
வின்மணி சிந்தனை அடுத்தவரை ஏமாற்ற நினைத்தால் நாம் ஏமாறுவதை யாராலும் தடுக்க முடியாது.
தமிழ் - ஆங்கிலம் மொழிபெயர்ப்பு dancer நடனமணி, நாட்டியக்காரி dancing master நாட்டிய ஆசிரியர் dandelion சிங்கப்பல் dandruff சொடுகு dandruffmed பொடுகு danger ஆபத்து ,இடர் , அபாயம்,எச்சரிக்கை danger of explosion வெடிகுண்டு ஆபத்து danger of life உயிருக்கு ஆபத்து danger pay அபாய சம்பளம் dangerous அபாயம் உண்டாக்கும்
இன்று பிப்ரவரி 16
பெயர் : தாதாசாஹெப் பால்கே, மறைந்த தேதி : பிப்ரவரி 16, 1944 தாதாசாஹெப் பால்கே என்று அழைக்கப்படும் துண்டிராஜ் கோவிந்த் பால்கே(Dhundiraj Govind Phalke)இந்திய திரைப்படத்துறையின் தந்தையாக கருதப்படுகிறார்.தாதாசாஹெப் பால்கே நாசிக்கில் பிறந்தார்.1910 முதல் 1940 வரை பல திரைப்படங்களை உருவாக்கினார்.பெரும்பாலும் அத்திரைப்படங்களை அவரே இயக்கவும் செய்தார்.அவருடைய நினைவாக தாதாசாஹெப் பால்கே விருது நிறுவப்பட்டது.
Entry filed under: அனைத்து பதிவுகளும், ஆன்லைன் புரோகிராம், தொழில்நுட்ப செய்திகள், பயனுள்ள தகவல்கள். Tags: மைக்ரோசாப்ட் பிங் தேடுபொறி நடத்தும் Deal shopping பயனுள்ள தகவல்., shopping.
1.
puduvaisiva | 12:23 பிப இல் பிப்ரவரி 25, 2012
useful info thanks winmani
if you have time write about how to start own e-shop (online shop)
2.
saravanan | 7:28 முப இல் பிப்ரவரி 26, 2012
This is for useful
And how to dead slow how to recover the Speed.
3.
saravanan | 7:28 முப இல் பிப்ரவரி 26, 2012
how to speed computer give some tips