கணினி மற்றும் இண்டநெட்-ல் பயன்படுத்தும் வார்த்தைகளுக்கு தெளிவான விளக்கம் கொடுக்க ஒரு தளம் உள்ளது.
பிப்ரவரி 13, 2012 at 3:20 பிப 1 மறுமொழி
டிக்ஸ்னரியில் சென்று தேடினாலும் சில கணினியில் பயன்படுத்தப்படும் வார்த்தைகளுக்கு விளக்கம் கிடைக்காது, பல தளங்களில் சென்று தேடிதான் விளக்கம் தெரிந்து கொள்ள முடியும் என்ற நிலை மாறி தற்போது கணினி மற்றும் இணையத்தில் பயன்படுத்தப்படும் வார்த்தைகளுக்கு விளக்கம் சொல்வதற்காக ஒரு தளம் இருக்கிறது இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.

படம் 1
கணினி தொடர்பான விளக்கங்களை தெரிந்து கொள்வதற்காக ஒரு டிக்ஸ்னரி இருந்தால் நன்றாக இருக்கும் என்று எண்ணுபவர்களுக்கு உதவி செய்யும் நோக்கில் கணினி மற்றும் இணைய கேள்விகளுக்கு விளக்கம் சொல்ல ஒரு தளம் உள்ளது.
இணையதள முகவரி:http://www.webopedia.com
இத்தளத்திற்கு சென்று நாம் படம் 1-ல் காட்டியபடி Search என்று இருக்கும் கட்டத்திற்குள் என்ன வார்த்தைக்கான விளக்கம் தெரிந்து கொள்ள வேண்டுமோ அதை கொடுத்து Search என்ற பொத்தானை சொடுக்கினால் போதும் அடுத்து வரும் திரையில் நமக்கு நாம் தேடிய கணினி சம்பந்தமான வார்த்தைகளுக்கான விளக்கம் தெளிவாக கொடுக்கப்பட்டிருக்கிறது. கணினி சம்பந்தப்பட்ட ஒரு முழுமையான டிக்ஸ்னரி இல்லையே என்று கவலையை இத்தளம் போக்கியுள்ளது. குழந்தைகள் முதல் கணினி பயன்படுத்தும் அனைவருக்கும் இந்தத்தளம் பயனுள்ளதாக இருக்கும்.
அனைவருக்கும் உதவும் விரிவான அதிகவேக லைவ் ஆங்கில டிக்ஸ்னரி
ஆன்லைன்-ல் வீடியோ டிக்ஸ்னரி புதுமையிலும் புதுமை
அனைத்து மொழிகளுடன் அதிக விளக்கம் தரும் புதுமையான டிக்ஸ்னரி
கூகுலின் தமிழ் டிக்ஸ்னரி பல புதுமைகளுடன்
தினம் ஒரு புத்தகம் சாவி அவர்கள் எழுதிய " கலியுக கர்ணன் (சிறுகதை) " புத்தகம் தறவிரக்க இங்கு சொடுக்கவும்.
வின்மணி சிந்தனை மொழியே நேசிப்பதைவிட மொழிக்காக பாடுபபட்டவர்களை மனதார நேசியுங்கள்
தமிழ் - ஆங்கிலம் மொழிபெயர்ப்பு to bear up தாங்கிக் கொள் , பொறுத்துக் கொள் to beat அடி , வெற்றிகொள் ,தாக்கு to become active சுறுசுறுப்படை , ஆர்வம் கொள் to become active நாட்டம் கொள் to become annihilated வேரோடு, to become aware of உணர்ந்திரு , அறிந்திரு to become disclosed விடி ,வெளிப்படு to become elated பெருமகிழ்ச்சியடை to become entwined கோத்துப் பின்னு ,சுற்றிப் படர் to become helpful சாதகமாகு, ஏதுவாகு
இன்று பிப்ரவரி 13
பெயர் :சரோஜினி நாயுடு, பிறந்த தேதி : பிப்ரவரி 13, 1879 பாரதீய கோகிலா(இந்தியாவின் நைட்டிங்கேல்) என்றும் அழைக்கப்படும் இவர் ஒரு பிரபலமான குழந்தை ஞானி, சுதந்திர போராளி மற்றும் கவிஞர் ஆவார். இந்திய தேசிய காங்கிரஸின் முதல் பெண் தலைவராகவும் மற்றும் உத்தரப்பிரதேச மாநிலத்தின் முதல் பெண் ஆளுனரும் ஆவார்.இந்திய சுதந்திரப் போராட்டத்தில் இவர் செய்த சேவைக்காக இந்தியநாடே இன்று பெருமிதம் கொள்கிறது.
Entry filed under: அனைத்து பதிவுகளும், இணையதளம், தொழில்நுட்ப செய்திகள், பயனுள்ள தகவல்கள். Tags: கணினி மற்றும் இண்டநெட்-ல் பயன்படுத்தும் வார்த்தைகளுக்கு தெளிவான விளக்கம.
1.
stalinwesley | 7:54 பிப இல் பிப்ரவரி 18, 2012
அருமையான தேவையான பதிவு-ண்ணா
நன்றி