உடல் நலம் பற்றிய அனைத்து வீடியோக்களையும் கொடுக்கும் பயனுள்ள தளம்.
பிப்ரவரி 12, 2012 at 2:10 முப 1 மறுமொழி
மனிதனாக பிறந்த அனைவருக்குமே உடல் நலம் பற்றிய ஒரு விழிப்புணர்வு இருக்கும் ஆனால் பல நேரங்களில் உடல் நலம் பற்றிய விழிப்புணர்வு கூட்டங்களுக்கு சென்று பங்கேற்க நேரம் இருக்காது இப்படி பல விதமான காரணங்களினால் உடல் நலம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ளாமல் இருக்கிறோம் நமக்கு ஆன்லைன் மூலம் உடல் நலம் பற்றிய அனைத்து தகவல்களையும் கொடுக்க ஒரு தளம் உள்ளது இதைப் பற்றித்தான் இந்தப்பதிவு.

படம் 1
அடிக்கடி தலைவலி வருகிறது என்ன காரணம் என்று தெரியவில்லை இப்படி நமக்கு எழும் பல விதமான காரணங்களுக்கு பதில்
அளிப்பதற்காகவும் உடல் நலம் மேல் அதிக கவனம் எடுத்துக்கொள்ள வேண்டும் என்ற நோக்குடன் வீடியோவுடன் பதில் சொல்ல ஒரு தளம் உருவாக்கப்பட்டுள்ளது.
இணையதள முகவரி : http://icyou.com
இத்தளத்திற்கு சென்று நாம் உடல் நலனில் நமக்கு எந்தப்பிரச்சினை தொடர்பாக வீடியோக்களை பார்க்க வேண்டுமோ அதை Search என்று இருக்கும் கட்டத்திற்குள் கொடுத்து தேடலாம், அடுத்து வரும் திரையில் நாம் தேடிய நோய் சம்பந்தப்பட்ட அனைத்து வீடியோக்களும் வரும் மருத்துவரின் பதிலில் ஆரம்பித்து நோயாளியின் நேரடி அனுபவம் வரை அனைத்தையும் தெளிவாக காட்டுகிறது. பல்லில் இரத்தம் வருகிறது என்பதில் தொடங்கி கேன்சர் வரை அனைத்துக்குமான தகவல்களும் வீடியோவுடன் கிடைக்கிறது.இதைத்தவிர உடல் நலம் பற்றிய ஒவ்வொரு துறை சார்ந்த வீடியோக்களும் அழகாக வகைப்படுத்தப் பட்டுள்ளது. மருத்துவத்துறையில் இருப்பவர்களுக்கு மட்டுமல்லாமல் நம்மவர்களுக்கும் உடல் நலம் பற்றிய ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்த இந்தத்தளம் பயனுள்ளதாக இருக்கும்.
நம் உடல் வியாதிகளுக்கு தீர்வு சொல்ல இலவச மருத்துவர் இருக்கிறார்.
மருத்துவரிடம் இலவச ஆலோசனை பெற முத்தான மூன்று இணையதளங்கள்.
தாய்மார்களுக்கு உதவும் கர்ப்ப கால அறிவுரைகளை துல்லியமாக கொடுக்கும் மருத்துவ காலண்டர்.
ஒவ்வொரு குறியீட்டுக்கும் (Symbol) அதன் அர்த்தத்தை எளிதாக கண்டுபிடிக்கலாம்.
தினம் ஒரு புத்தகம் நா.வானமாமலைஅவர்கள் எழுதிய " உயிரின் தோற்றம் " புத்தகம் தறவிரக்க இங்கு சொடுக்கவும்.
வின்மணி சிந்தனை அன்பையும் மகிழ்ச்சியையும் நம் உறவுகளுக்கு தெரிவிக்க ஒருபோதும் மறக்காதீர்கள்.
தமிழ் - ஆங்கிலம் மொழிபெயர்ப்பு to be grateful செய்நன்றியுடையவராயிரு to be greedy பேராசை கொள்வது, படு to be hasty மிக்க அவசரப்படு to be high lighted மேல் தோன்று,மேல் எழு to be hunched கூன் to be instrumental சாதகமாகு,ஏதுவாகு,உதவியாகு to be insulted அவமதிக்கப்படு to be interested in சுறுசுறுப்படை,ஆர்வம் கொள் to be jubilant பெருமகிழச்சியடை to be left out தள்ளி வைக்கப்படு
இன்று பிப்ரவரி 12
பெயர் :ஆபிரகாம் லிங்க்கன், பிறந்த தேதி : பிப்ரவரி 12, 1809 இவர் ஐக்கிய அமெரிக்காவின் 16 வது குடியரசுத் தலைவர் ஆவார். அடிமை முறைக்கு எதிர்ப்புத் தெரிவித்து அதனை ஒழிக்க முனைந்தவர்களில் ஒருவர்.1860ல் மேற்கு மாநிலங்களில் தலைவராக இருந்த இவர் ரிப்பப்ளிக்கன் கட்சியின் வேட்பாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு அமெரிக்காவின் குடியரசுச் தலைவராக வெற்றி பெற்றார்.அமெரிக்க ஒன்றியத்தின் ஒற்றுமைக்காக உயிர் துறந்து புகழ் எய்தினார்.
Entry filed under: அனைத்து பதிவுகளும், இணையதளம், தொழில்நுட்ப செய்திகள், பயனுள்ள தகவல்கள். Tags: உடல் நலம் பற்றிய அனைத்து வீடியோக்களையும் கொடுக்கும் பயனுள்ள தளம்..
1.
அ.சேஷகிரி | 11:23 முப இல் பிப்ரவரி 17, 2012
பயனுள்ள தகவல்களை தினமும் கொடுப்பதற்கு தங்களுக்கு மிக்க நன்றி.
அ.சேஷகிரி,
ஆழ்வார்திருநகரி.