ஆன்லைன் மூலம் EMS (Express Mail Service ) தபால் எங்கிருக்கிறது என்று கண்டுபிடிக்கலாம்.
பிப்ரவரி 11, 2012 at 9:50 முப 1 மறுமொழி
Worldwide Express Mail Service என்று சொல்லக்கூடிய EMS தபால்கள் தற்போது எந்த நாட்டில் எங்கு இருக்கிறது என்று எளிதாக கண்டுபிடிக்கலாம் நமக்கு உதவ ஒரு தளம் உள்ளது இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.

படம் 1
EMS தபால் அனுப்பிவிட்டு வந்திவிட்டதா என்று கேள்விகள் எல்லாம் கேட்க வேண்டாம் எளிதாக இருந்த இடத்தில் இருந்தே ஆன்லைன் மூலம் EMS எண்ணை மட்டும் கொடுத்து தற்போது தபால் எங்கிருக்கிறது என்று கண்டுபிடிக்கலாம்.
இணையதள முகவரி : http://www.ems-tracking.net
இத்தளத்திற்கு சென்று EMS Tracking Number என்று இருக்கும் கட்டத்திற்குள் நம்மிடம் இருக்கும் 13 இலக்க EMS எண்ணை கொடுத்து
Track என்ற பொத்தானை சொடுக்க வேண்டும் அடுத்து வரும் திரையில் Verification Code என்று ஒன்று வரும் அதையும் கொடுத்த பின் அடுத்து வரும் திரையில் தபால் தற்போது எந்த நாட்டில் இருக்கிறது என்பது பற்றிய முழுவிபரமும் தெரியவரும். சில உள்ளூர் EMS எண்களைக் கொடுத்தாலும் சரியாக எங்கிருக்கிறது என்பதை காட்டுகிறது கண்டிப்பாக இந்தப்பதிவு நம் அனைவரும் பயனுள்ள பதிவாக இருக்கும்.
நல்ல மீன்கள் எவை, கெட்ட மீன்கள் எவை என கண்டுபிடிக்க உதவும் பயனுள்ள தளம்.
இணையத்தில் பிரச்சினையா அல்லது இணையதளத்தில் பிரச்சினையா என்று கண்டுபிடிக்க உதவும் பயனுள்ள தளம்.
நம் தளத்திற்கு SEO மார்க் என்ன என்பதை உடனடியாக ஆன்லைன் மூலம் கண்டுபிடிக்கலாம்.
தினம் ஒரு புத்தகம் அண்ணாதுரைஅவர்கள் எழுதிய " நாடோடி (சிறுகதை) " புத்தகம் தறவிரக்க இங்கு சொடுக்கவும்.
வின்மணி சிந்தனை தீய எண்ணங்கள் இல்லாத மனிதன் எந்த வேலை செய்தாலும் வெற்றி கிடைக்கும்.
தமிழ் - ஆங்கிலம் மொழிபெயர்ப்பு to be applicable பிரயோகம் ஆகுதல், பொருந்து to be aroused தூண்டப்பெறு, கிளறு to be asleep நித்திரை கொள் to be beaten அடி வாங்கு to be bestowed கைவரப்பெறு, தேடு,பெருகு to be born பிற to be careful கவனமாக இரு to be caught foolishly தூண்டிலுக்கிரையாகு to be concluded முடிவடை to be confused குழம்பி போவது
இன்று பிப்ரவரி 11
பெயர் :ரெனே டேக்கார்ட், மறைந்த தேதி : பிப்ரவரி 11, 1650 ஒரு பிரெஞ்ச்சு நாட்டு மெய்யியல் அறிஞர். இவரைத் தற்கால மேற்குலக மெய்யியலின் தந்தை எனப் பலரும் கருதுவர்.இவர் கணிதத்துறையின் மேதைகளில் ஒருவர். இவர் இலத்தீன் மொழியில் ரெனேட்டஸ் கார்ட்டேசியஸ் (Renatus Cartesius) என அறியப்படுகின்றார்
Entry filed under: அனைத்து பதிவுகளும், இணையதளம், தொழில்நுட்ப செய்திகள், பயனுள்ள தகவல்கள். Tags: ஆன்லைன் மூலம் EMS (Express Mail Service ) தபால் எங்கிருக்கிறது என்று கண்டுபிடிக்கலாம்..
1.
தனபாலன் | 12:21 பிப இல் பிப்ரவரி 16, 2012
நல்ல தளத்தை அறிமுகபடுத்தியதற்கு நன்றி சார் !