மூன்றே நிமிடத்தில் ரிங்டோன் ( Ringtone ) உருவாக்க உதவும் பயனுள்ள மென்பொருள்
பிப்ரவரி 8, 2012 at 2:51 முப 3 பின்னூட்டங்கள்
அலைபேசி என்று சொல்லக்கூடிய Mobile Phone இல்லாத நபர்களே இல்லை என்று சொல்லும் அளவிற்கு அனைவரிடமும் மொபைல் போன் இருக்கிறது. மொபைல் போனில் நாம் விரும்பும் ரிங்டோன் எளிதாக சில நிமிடங்களில் உருவாக்கலாம் நமக்கு உதவுவதற்காக ஒரு இலவச மென்பொருள் உள்ளது இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.

படம் 1
விரும்பும் பாடலில் உள்ள குறிப்பிட்ட பகுதியை மட்டும் வெட்டி எளிதாக ரிங்டோன் உருவாக்கலாம் நமக்கு உதவ ஒரு இலவச மென்பொருள் உள்ளது.
இணையதள முகவரி : http://www.musetips.com/free-ringtone-maker.html
இத்தளத்திற்கு சென்று நாம் Download என்ற பொத்தானை சொடுக்கி மென்பொருளை இலவசமாக தறவிரக்கலாம், தறவிரக்கிய மென்பொருளை நம் கணினியில் நிறுவி இயக்கியதும் வரும் திரையில் Choose a Song From My Computer என்று இருக்கும் பொத்தானை சொடுக்கி நம்மிடம் இருக்கும் பாடலை தேர்ந்தெடுக்க வேண்டும் Next என்ற பொத்தானை சொடுக்கி அடுத்து வரும் திரையில் எதில் இருந்து எதுவரை தேர்ந்தெடுக்க வேண்டுமோ அதை Slider -ஐ சொடுக்கி தேர்ந்தெடுக்க வேண்டும், தேர்ந்தெடுக்கும் போதே Play செய்து பார்த்துக்கொள்ளும் வசதியும் இருக்கிறது. எல்லாம் தேர்ந்தெடுத்த பின் Save Ringtone to My Computer என்ற பொத்தானை சொடுக்கி நம் கணினியில் சேமிக்கலாம். ரிங்டோன் உருவாக்க விரும்பும் நம் அனைவருக்கும் கண்டிப்பாக இந்தப்பதிவு பயனுள்ளதாக இருக்கும்.
அட்டகாசமான அனிமேசனுடன் கூகிள் மேப் இலவசமாக உருவாக்கலாம்.
நம் புகைப்படத்துடன் ஹாலிவுட் மூவி போஸ்டர் (Hollywood Movie Poster ) உருவாக்கலாம்.
அழகான ஜப்பானிய மக்களின் Background Pattern விரும்பிய வண்ணத்தில் உருவாக்கலாம்.
அழகான மல்டிமீடியா வாழ்த்து அட்டை ஆன்லைன் மூலம் எளிதாக நொடியில் உருவாக்கலாம்.
தினம் ஒரு புத்தகம் மௌனி அவர்கள் எழுதிய " மனக்கோட்டை " புத்தகம் தறவிரக்க இங்கு சொடுக்கவும்.
வின்மணி சிந்தனை செய்த பாவத்திற்கு மன்னிப்பு கேட்பதை விட மனம் திருந்துவதே நல்லது.
தமிழ் - ஆங்கிலம் மொழிபெயர்ப்பு yea ஆம் year வருடம் , ஆண்டு yearbook ஆண்டுநூல் yearly வருடந்தோறும் yearning மிக்க ஆவல், தாபம் years old ஒரு வயது yeast காடி (மாவை புளிக்க வைக்க உதவும் பொருள்) yegg கொள்ளையன் yellow மஞ்சள் (நிறம்) yawning கொட்டாவி
இன்று பிப்ரவரி 8
பெயர் :சாகீர் உசேன், பிறந்த தேதி : பிப்ரவரி 8, 1897 இவர் இந்தியாவின் மூன்றாவது குடியரசுத் தலைவர் ஆவார்.1967இல் இருந்து 1969-ல் இருந்து அவர் இறக்கும் வரை அப்பதவியை வகித்தார். 1962-1967 காலத்தில் இவர் துணைக் குடியரசுத் தலைவராகவும் இருந்தார். சிறந்த மனிதர் மதத்தை விரும்பாத மனிதநேயமுள்ளவர்.
Entry filed under: அனைத்து பதிவுகளும், இணையதளம், தொழில்நுட்ப செய்திகள், பயனுள்ள தகவல்கள், Ringtone Maker ( ரிங்டோன் உருவாக்க உதவும் மென்பொருள்). Tags: Ringtone maker ( ரிங்டோன் உருவாக்க ).
1.
krishnamoorthy.s | 9:53 முப இல் பிப்ரவரி 13, 2012
ரிங்டோன் தயாரிக்க உதவும் வலைத்தளத்தைக் கூறியதற்கு நன்றி.
பதிவிறக்கம் செய்யாமலே கூட சில வலைத்தளத்தில் நேராகவே ரிங்டோன் தயாரிக்கலாமே.
2.
winmani | 2:46 பிப இல் பிப்ரவரி 13, 2012
@ krishnamoorthy.s
ஏற்கனவே நம் தளத்தில் ஆன்லைன் ரிங்டோன் உருவாக்கும் தளத்தை அறிமுகப்படுத்தி இருக்கிறோம்.
நன்றி
3.
தனபாலன் | 2:26 பிப இல் பிப்ரவரி 14, 2012
விரிவான விளக்கம் ! பயனுள்ள பதிவு ! நன்றி நண்பரே !