மைக்ரோசாப்ட்-ன் ஈடு இணையில்லாத Age of Empires விளையாட்டை இனி ஆன்லைன் மூலம் விளையாடலாம்.
பிப்ரவரி 7, 2012 at 9:48 முப பின்னூட்டமொன்றை இடுக
மைக்ரோசாப்ட்-ன் ஈடு இணையில்லாத Age of Empires விளையாட்டை இனி ஆன்லைன் மூலம் விளையாடலாம்.

படம் 1
ஆப்ரேட்டிங் சிஸ்டம் உலகில் எத்தனை புதிய OS வந்தாலும் இன்றும் மைக்ரோசாப்ட் ஆப்ரேட்டிங் சிஸ்டத்திற்கு தனி மதிப்பு உண்டு அந்த வகையில் மைக்ரோசாப்ட் நிறுவனத்தால் ஒரு காலத்தில் சக்கை போடு போட்ட Age of Empires விளையாட்டின் புதிய பதிப்பை கணினி மூலமும் ஆன்லைன் மூலமும் எளிதாக விளையாடலாம் இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு. எவ்வளவு நேரம் விளையாட வேண்டும் என்ற எந்த நிபந்தனையும் இல்லாமல் விளையாட்டின் முழு கட்டுப்பாட்டையும் நம் விரல் நுனிக்கே கொண்டு வரும் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் Age Of Empires விளையாட்டை ஆன்லைன் மூலம் விளையாட ஒரு தளம் உதவுகிறது.
இணையதள முகவரி : http://www.ageofempiresonline.com
இந்த விளையாட்டில் ஒரு நாட்டை நமக்கு கொடுத்து அதை எப்படி எல்லாம் மேம்படுத்தலாம், உணவில் ஆரம்பித்து பாதுகாப்பு வரை ஒவ்வொன்றையும் எப்படி எல்லாம் சிறப்பாக செய்யலாம் என்பதை நாமே முடிவு செய்யலாம்.சிறு குழந்தைகள் முதல் CEO வரை அனைத்து தரப்பினரும் விளையாடும் ஒரே விளையாட்டு இது என்பது தான் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் கூடுதல் சிறப்பு.த்து எக்காரணம் கொண்டும் இந்த விளையாட்டு நமக்கு சலிப்பை ஏற்படுத்தாது. ஒரு நாள் அல்லது 1 மாதம் அல்ல பல மாதங்கள் சென்றாலும் எந்தவிதமான சோர்வையும் ஏற்படுத்தாத விளையாட்டு, அறிவுக்கு தீனி போடும் விளையாட்டு மட்டுமல்ல புத்திசாலிதனத்தையும், திறமையையும் வளர்க்கும் ஒரு பயனுள்ள விளையாட்டு.ஏற்கனவே மென்பொருள் துணையுடன் ஆன்லைன் மூலம் விளையாடலாம் என்ற வசதியுடன் சேர்த்து இப்போது இனையதளம் வாயிலாக ஆன்லைன் மூலமும் விளையாடலாம். இதைப்பற்றிய ஒரு சிறப்பு அறிமுக வீடியோவையும் இத்துடன் இணைத்துள்ளோம்.
உலகை திரும்பி பார்க்க வைக்கும் மைக்ரோசாப்ட் விண்டோஸ் 8 (Windows 8 ) இலவசமாக தரவிரக்கலாம்.
மைக்ரோசாப்ட் அறிமுகப்படுத்த இருக்கும் துல்லியமான வெப்கேமிரா
மைக்ரோசாப்ட்-ம் நாசாவும் இணைந்து எடுத்திருக்கும் செவ்வாயின் துல்லியமான படம்
மைக்ரோசாப்ட் அறிமுகப்படுத்த இருக்கும் விநோதமான பேட்டரி ஜார்சர்
தினம் ஒரு புத்தகம் வ.சுப. மாணிக்கம் அவர்கள் எழுதிய " இலக்கியச் சாறு " புத்தகம் தறவிரக்க இங்கு சொடுக்கவும்.
வின்மணி சிந்தனை
கடவுளை யார் நம்புகிறாரோ அவரைத்தான்
கடவுள் அதிகமாக சோதிப்பார்.
தமிழ் - ஆங்கிலம் மொழிபெயர்ப்பு to yank கிழி , வெட்டுப்படு to yearn எண்ணி ஏங்கு to yell கூச்சலிடு,அலறு to yell கூக்குரல், கத்து to yelp (நரி நாய் ஓநாய்) yourself நீதான் yoke நுகத்தடி your convenient time உனக்கு ஏற்ற நேரம் yep ஆம் yep ஆமாம்
இன்று பிப்ரவரி 7
பெயர் : தேவநேயப் பாவாணர், மறைந்த தேதி : பிப்ரவரி 7, 1902 மிகச்சிறந்த தமிழறிஞரும், சொல்லாராய்ச்சி வல்லுனரும் ஆவார்.40க்கும் மேலான மொழிகளின் சொல்லியல்புகளைக் கற்று மிகஅரிய சிறப்புடன் சொல்லாராய்ச்சிகள் செய்துள்ளார். இவருடைய ஒப்பரிய தமிழறிவும் பன்மொழியியல் அறிவும் கருதி,சிறப்பாக மொழிஞாயிறு தேவநேயப்பாவாணர் என்று அழைக்கப்பட்டார்.இவரை கவுரவப்படுத்த இந்தியா தேவநேயப் பாவாணரின் படத்துடன் அஞ்சல்தலை வெளீயிட்டுள்ளது
Entry filed under: அனைத்து பதிவுகளும், ஆன்லைன் வேலை, இணையதளம், பயனுள்ள தகவல்கள், புரோகிராமர் உதவி. Tags: மைக்ரோசாப்ட்-ன் ஈடு இணையில்லாத Age of Empires விளையாட்டை இனி ஆன்லைன் மூலம் விளையாட.
Subscribe to the comments via RSS Feed