நாம் வாங்கும் கார் (Car) -ல் ஏற்படும் சிறிய பிரச்சினைகளை சரி செய்ய சொல்லி கொடுக்கும் பயனுள்ள தளம்.
பிப்ரவரி 3, 2012 at 4:02 பிப 2 பின்னூட்டங்கள்
இரண்டு சக்கர வாகம் பயன்படுத்திவிட்டு பொருளாதாரம் சற்று முன்னேறியவுடன் நடுத்தர மக்கள் அடுத்து வாங்குவது நான்கு சக்கர வாகனம் என்று சொல்லக்கூடிய கார் (Car). கார் வாங்குவதை விட அதில் ஏற்படும் சிறிய பழுதுகள் கூட பெரிய அளவில் செலவுகளை வைத்துவிடும் நமக்கும் அதைப்பற்றி விபரமாக தெரியாது என்பதால் கேட்கும் தொகையை கொடுத்து நடையை கட்ட வேண்டியது தான் என்று சொல்லும் நம்மவர்களுக்கு காரில் ஏற்படும் பிரச்சினைகளை தீர்க்க வழி சொல்கிறது ஒரு தளம் இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.

படம் 1
புதிதாக கார் வாங்குபவர்களுக்கும் ஏற்கனவே கார் வைத்திருப்பவர்களுக்கும் உதவும் வகையில் இத்தளம் வந்துள்ளது, அடிக்கடி காரில் ஏற்படும் பிரச்சினைகள் என்ன என்பதை பட்டியலிட்டு எப்படி அந்த பிரச்சினைகளை சரி செய்யலாம் என்பதை எளிதாக சொல்கிறது இந்தத்தளம்.
இணையதள முகவரி : http://www.automd.com
இத்தளத்திற்கு சென்று காரில் இருக்கும் ஒவ்வொரு பகுதியையும் எப்படி சரி செய்ய வேண்டும் என்று தெளிவாக சொல்லி கொடுக்கின்றனர், உதாரணமாக பிரேக்-ல் பழுதை எப்படி சரி செய்ய வேண்டும் என்று வீடியோவுடன் சொல்லி கொடுக்கின்றனர், Body & Interior , Engine , Transmissions & Drivetrains, Brakes, Steering & Suspension, Preventive Maintenance , பழுதான பொருளுக்கு மாற்றாக புதிய பொருள் வாங்குவதாக இருந்தால் எவ்வளவு செலவாகும் என்பதை துல்லியமாக சொல்கின்றனர், பல சிறிய பிரச்சினைகளை கூட நாமே எளிதாக சரி செய்யும் படி விளக்கி சொல்கின்றனர், இதைத்தவிர ஒரு பொருள் பழுதாவதற்கு முன்பு ஆரம்பத்தில் என்ன பிரச்சினைகள் எல்லாம் வரலாம் என்பதையும் தெளிவாக சொல்கின்றனர். கண்டிப்பாக கார் வைத்திருக்கும் அனைவருக்கும் , மெக்கானிக் படிக்கும் நண்பர்களுக்கும் இந்தப்பதிவு பயனுள்ளதாக இருக்கும்.
கார் ரிப்பேர் செய்ய வீடியோவுடன் சொல்லிக்கொடுக்கும் இணையதளம்
உங்கள் ஐபாட் ரிப்பேரை நீங்களே சரி செய்ய முத்தான மூன்று தளம்
கீபோர்ட்-ல் எந்த கீ பழுதானாலும் நாம் தட்டச்சு செய்யலாம்.
பழுதான CD / DVD -யில் இருந்து தகவல்களை எளிதாக பாதுகாப்பாக மீட்கலாம்
தினம் ஒரு புத்தகம் பெரியார் அவர்கள் எழுதிய " பெரியார் அறிவுச் சுவடி " புத்தகம் தறவிரக்க இங்கு சொடுக்கவும்.
வின்மணி சிந்தனை உதவும் குணத்தை குழந்தைகளுக்கு சொல்லி கொடுப்பதைவிட நாம் உதவுபவர்களாக இருந்தாலே போதும்.
தமிழ் - ஆங்கிலம் மொழிபெயர்ப்பு to shepherd பராமரி ,பாதுகாப்பது to shepherd கவனி to shift about அங்கும் இங்கும் போடு to shit பேளுதல் to shock அதிர்ச்சி உண்டாக்கு to shop கொள்வனவு செய் to shorten கட்டியாக்கு ,இறுகச் செய் to shower குளி to shuffle கலக்கு to shuffle பிசை
இன்று பிப்ரவரி 3
பெயர் : கா.ந.அண்ணாதுரை, மறைந்த தேதி : பிப்ரவரி 3, 1969 தமிழ் நாட்டின் ஆறாவது முதலமைச்சர். மத்திய தர நெசவுத் தொழிலாளர் குடும்பத்தில் பிறந்தவர்.குடியரசுனாதிற்குப்பிறகு ஆட்சி அமைத்த முதல் திராவிடக்கட்சித்தலைவர் என்றப் பெருமையுடன்,அருதி பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்தவர் என்ற பெருமையும் கொண்டவர். ”ஒன்றே குலம், ஒருவனே தேவன்”,"கடவுள் ஒன்று, மனிதநேயமும் ஒன்று தான்"என்ற உயர்ந்த தத்துவங்களை கொண்டவர்.கடமை கண்ணியம் கட்டுபாடு என்ற கொள்கை பிடிப்புள்ளவர்.
Entry filed under: அனைத்து பதிவுகளும், இணையதளம், கார் ரிப்பேர், தொழில்நுட்ப செய்திகள், பயனுள்ள தகவல்கள். Tags: நாம் வாங்கும் கார் (Car) -ல் ஏற்படும் சிறிய பிரச்சினைகளை சரி செய்ய சொல்லி கொடு.
1.
soul | 9:03 முப இல் பிப்ரவரி 6, 2012
all persons follow to winmani
2.
kamalanathan | 9:36 பிப இல் பிப்ரவரி 11, 2012
kudos to winmani