ஆன்லைன் மூலம் புரோகிராம் (கணினி மொழி) எழுதி நம்மை வல்லவர்களாக மாற்ற உதவும் தளம்.
பிப்ரவரி 2, 2012 at 4:35 பிப 3 பின்னூட்டங்கள்
புதிதாக கணினி துறைக்குள் புகும் நண்பர்கள் தான் தற்போது பலவிதமான கணினி மொழிகளை வெகுவிரைவாக கற்று அந்த மொழியில் வல்லவர்களாக உள்ளனர்,ஒருவர் எந்தத்துறையில் இருந்தாலும் கணினியில் புரோகிராம் எழுதி திறமையானவர்களாக மாற நமக்கு ஒரு தளம் உதவி செய்கிறது இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.

படம் 1
கணினி மேல் கொண்ட காதலால் பலர் இன்னும் கட்டற்ற பல மென்பொருட்களை இலவசமாக கொடுத்துக்கொண்டே இருக்கின்றனர். புதிதாக கணினி மொழி கற்க விரும்பும் அனைவருக்கும் எளிதாக கணினி மொழி கற்றுக்கொடுக்கவும் இயக்கி பார்க்கவும் ஒரு தளம் உள்ளது.
இணையதள முகவரி: http://www.programr.com
இத்தளத்திற்கு சென்று நாம் கணினி மொழியில் எந்த மொழியில் திறமையானவர்களாக மாற வேண்டுமோ அந்த மொழியை தேர்ந்தெடுக்க வேண்டியது மட்டும் தான் நம் வேலை அடுத்து வரும் திரையில் புதிதாக மொழி கற்பவர்கள் என்னென்ன அடிப்படை புரோகிராம்கள் உள்ளன என்பதை ஒவ்வொன்றாக சொடுக்கி பார்ப்பது மட்டுமல்லாமல் அதை இயக்கியும் ( RUN) பார்க்கலாம். ஏற்கனவே புரோகிராம் எழுதியவரின் கோடிங் Download என்பதை சொடுக்கி தரவிரக்கியும் நமக்கு தேவையென்றால் மாற்றம் செய்தும் பார்க்கலாம். கணினியின் அனைத்து முக்கிய மொழிகளுக்காக நேரடியான புரோகிராம் பயிற்சி நம்மை குறிப்பிட்ட அந்த மொழிகளில் வல்லவர்களாக்கிவிடுகிறது. இதைத்தவிர புரோகிராம் எழுத தெரிந்தவர்களுக்கு போட்டியும் வைக்கிறது இத்தளம், சவால் விடும் பல கோடிங்களும் இத்தளத்தில் எளிதாக கிடைக்கிறது, புரோகிராம் எழுதுபவர்களுக்கும் புதியவர்களுக்கும் இத்தளம் ஒரு வரப்பிரசாதமாக இருக்கும்.
புரோகிராமர் ஆன்லைன் மூலம் வீட்டில் இருந்தபடியே பணம் சம்பாதிக்க புதுமையான நேர்மையான வழி.
ஆன்லைன் மூலம் எங்கிருந்து வேண்டுமானாலும் புரோகிராம் எழுதிப்பழகலாம்.
கணினி பயன்படுத்துபவர்களுக்கும் புரோகிராமர்களுக்கும் உதவும் பீர்பால்
கணினி பயன்படுத்துபவர்கள் முதல் புரோகிராமர் வரை அனைவரின் பிரச்சினைக்கும் தீர்வு.
தினம் ஒரு புத்தகம் பாலூர் கண்ணப்ப முதலியார் அவர்கள் எழுதிய " திருக்குறள் வசனம் " புத்தகம் தறவிரக்க இங்கு சொடுக்கவும்.
வின்மணி சிந்தனை பிற உயிரை துன்பப்படுத்தாமல் நாம் செய்யும் ஒவ்வொரு செயலும் தவம் செய்வதற்கு இணையானது தான்.
தமிழ் - ஆங்கிலம் மொழிபெயர்ப்பு to set forth தீர்மானி to set forth நிர்ணயி , திட்டமிடு to set hand கை வை, தொடு to set right சரி செய், சரிபடுத்து to set up கட்டி எழுப்பு ,(பொறி) வை , நிர்மாணி to set up tent கூடாரம் போடு, அமை to settle (வர்த்தகம்) பணம் செலுத்து , தீர் to shake hands கை குலுக்கு to sharpen கூராக்கு to shatter பொடியாக்கு , தூள்தூளாக்கு
இன்று பிப்ரவரி 2
பெயர் : திமீத்ரி மென்டெலீவ், பிறந்த தேதி : பிப்ரவரி 2, 1907 ரஷ்ய வேதியியலாளரும் கண்டுபிடிப்பாளரும் ஆவார்.வேதியியல் தனிமங்களின் முதலாவது ஆவர்த்தன அட்டவணையை உருவாக்கியவர். இவர் காலத்தில் கண்டுபிடிக்கப்படாத தனிமங்களின் இயல்புகளை மென்டெலீவ் வரையறுத்தவர் என்பது குறிப்பிடத்தக்க சாதனையாகும்.
Entry filed under: அனைத்து பதிவுகளும், ஆன்லைன் புரோகிராம், இணையதளம், தொழில்நுட்ப செய்திகள், புரோகிராமர் உதவி. Tags: ஆன்லைன் புரோகிராம், புரோகிராமர் உதவி.
1.
abdus samadh | 10:56 பிப இல் பிப்ரவரி 3, 2012
thanks for d info brother….
2.
soul | 10:43 முப இல் பிப்ரவரி 4, 2012
thanks for your service
very use to me
3.
Ganesh | 10:46 முப இல் பிப்ரவரி 6, 2012
good post
keep it up………………