சுப்பிரமணியசாமி இணையதளத்தில் ஹேக்கர் செய்த அட்டகாசம் – வெளிவராத சிறப்பு தகவல்கள்.
பிப்ரவரி 1, 2012 at 12:16 பிப 2 பின்னூட்டங்கள்
ஜனதா கட்சியின் தலைவர் சுப்பிரமணியசாமியால் கடந்த ஆண்டு (2011) நவம்பர் மாதம் ஊழலுக்கு எதிரான நடவடிக்கை எடுக்க ஆரம்பிக்கப்பட்ட இயக்கம் ( Action Committee against Corruption in India) இந்த குழுவின் இணையதளம் கணினி கொள்ளையர்களால் சூறையாடப்பட்டுள்ளது இதைப்பற்றிய முழுவிபரத்தையும் அலசும் வின்மணியின் சிறப்பு பதிவு.

படம் 1
சுவிஸ் வங்கியில் இருக்கும் கருப்பு பணத்தை வெளிக்கொண்டு வரவும், ஊழலுக்கு எதிரான ஒரு அமைப்பாகவும் ACACI தன் செயல்பாடுகளை ஆரம்பித்திருக்கும் இந்த நேரத்தில் இதன் இணையதளம் பாகிஸ்தான் சைபர் தீவிரவாதிகளால் முடக்கப்பட்டுள்ளது என்ற செய்தி வந்துள்ளது இனி இதைப்பற்றி விரிவாக பார்க்கலாம்.
இணையதள முகவரி : http://acaci.in
யூடியுப் , பேஸ்புக் , டிவிட்டர் மற்றும் பல மென்பொருள் நிறுவனத்தின் இணையதளத்தை படாதபாடு படுத்திய கணினி கொள்ளையர்களுக்கு இது சாதாரண வேலை தான் ,ஆனால் வழக்கமாக இணையதளக் கொள்ளை கூட்டத்தில் இருந்து வெளிவரும் தகவல் ”இரனியன் சைபர் ஆர்மி” என்று தான் ஆனால் இத்தளத்தை Hack செய்தவர்கள் Pakistan Cyber police என்ற பெயர் போட்டு இருக்கின்றனர், இதில் இவர்கள் கொடுத்திருக்கும் லோகோவில் Pakistan CyRer police அதாவது Cyber என்று ஒரு இடத்திலும் மற்றொரு இடத்தில் CyRer என்றும் இருக்கிறது, இவர்கள் புத்தாசாலிகளாக இருந்தும் செய்த ஒரே தவறு என்னவென்றால்
எந்தவித தகவல்களும் நேரடியாக அப்லோட் செய்யாமல் masti-zone.com என்று படங்களை பதிவேற்றும் செய்யும் தளத்தில் படங்களை பதிவேற்றியுள்ளனர், படத்தின் பெயர் ( new03.png)கூடவே இவர்கள் யூடியுப் ஒன்றின் முகவரியும் சேர்த்துள்ளனர் ஆனால் தளத்தில் அந்த யூடியுப் வீடியோ தெரியவில்லை, அவசரத்திலோ அல்லது மறந்தோ அந்த யூடியுப் லிங் Delete செய்யாமல் விட்டுவிட்டனர், அந்த யூடியுப் வீடியோவில் ஒருவரது புகைப்படமும் பாடலும் சேர்ந்து வருகிறது. அதன் முகவரி http://www.youtube.com/v/JzvWUTu-Nbo இன்னும் பல தடயங்களை விட்டு சென்றுள்ளனர், தற்போது இந்தத்தளம் உடனடியாக சரி செய்யப்பட்டுவிட்டது ஆனாலும் இப்போது கொடுத்திருப்பதைவிட இணையதள பாதுகாப்பு இன்னும் சிறப்பாக செய்தால் கொள்ளையர்களின் பிடி நம்மை நெருங்காது.
யூடியுப்-ஐ தாக்கி சைக்கிள் ஒட்டிய கணினி கொள்ளையர்கள்
பேஸ்புக்-ல் கணினி கொள்ளையர்கள் மறுபடியும் கைவரிசையை காட்டியுள்ளனர்.
இந்தியாவின் முன்னனி மென்பொருள் நிறுவனத்தின் இணையதளத்தில் கணினி கொள்ளையர்கள் கைவரிசையா ?
டிவிட்டரை பதம் பார்த்த கம்ப்யூட்டர் கொள்ளையர்கள்
Entry filed under: அனைத்து பதிவுகளும், பயனுள்ள தகவல்கள். Tags: இணையதள வைரஸ் தகவல்கள், சுப்பிரமணியசாமி இணையதளத்தில் ஹேக்கர் செய்த அட்டகாசம் - வெளிவராத சிறப்பு .
1.
soul | 10:13 முப இல் பிப்ரவரி 2, 2012
ALL IS WELL
ALL IS GOOD
GITA
2.
soul | 10:16 முப இல் பிப்ரவரி 2, 2012
பதில்
ALL IS WELL
ALL IS GOOD
GITA