மதிப்பு மிக்க அனைத்து ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் ( Android Application Free ) இலவசமாக தறவிரக்க உதவும் பயனுள்ள தளம்.
பிப்ரவரி 1, 2012 at 4:03 பிப 1 மறுமொழி
ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வெளிவந்த சில காலத்திற்குள்ளே அனைவரின் கைகளிலும் தவழ்கிறது என்றால் பயன்படுத்துவதற்கு எளிமை மற்றும் தொல்லை கொடுக்கும் பிழைகள் மிக மிக குறைவு. பல முக்கியமான ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் அனைத்தும் காசு கொடுத்து வாங்க வேண்டிய நிலையில் ஒரு தளம் முக்கியமான அனைத்து ஆண்ட்ராய்டு அப்ளிகேசனையும் இலவசமாக கொடுக்கிறது இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.

படம் 1
ஒவ்வொரு ஆண்ட்ராய்டு அப்ளிகேசனையும் தேடி ஒவ்வொரு தளமாக சென்று கடைசியில் 5 டாலர் கொடுங்கள் என்று கேட்கும் பல தளங்களுக்கு மத்தியில் மதிப்பு மிக்க பல ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் அனைத்தையும் ஒரே இடத்தில் இருந்து எளிதாக தறவிரக்க நமக்கு ஒரு தளம் உதவுகிறது.
இணையதள முகவரி : http://www.getjar.com/gold
இத்தளத்திற்கு சென்று Gold Android Application அனைத்தையும் பார்க்கலாம் இதில் நமக்கு பிடித்த அப்ளிகேசன் -அருகில் இருக்கும் Free என்ற பொத்தானை சொடுக்கி எளிதாக தறவிரக்கலாம். வெளி சந்தையில் கட்டணத்திற்கு கொடுக்கும் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் இங்கு இலவசமாக கொடுக்க காரணம் என்னவென்றால் இத்தளத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் உருவாக்குபவர்கள் இணைந்திருப்பதால் பல மென்பொருட்களை இலவசமாக கொடுக்க முடிகிறது.தளத்தின் மேலே இருக்கும்
Search box -ல் நாம் விரும்பிய அப்ளிகேசனை தேடியும் தறவிரக்கலாம். ஆண்ட்ராய்டு போன் வைத்திருக்கும் அனைவருக்கும் இந்தப்பதிவு பயனுள்ளதாக இருக்கும்.
அனைத்துவகையான ஆண்டிராய்டு அப்ளிகேசன் (Android apps) ஒரே இடத்தில் இருந்து தறவிரக்கலாம்.
ஐபோன், ஆண்டிராய்டு போனில் வாய்ஸ்மெயிலை படிக்கக்கூடிய செய்தியாக மாற்றும் Yap.
ஆண்டிராய்டு போனில் உங்கள் புகைப்படத்தை அழகான கார்டூனாக மாற்றும் வித்தை வீடியோவுடன்.
ஆண்டிராய்டு (Android) போனில் டோரண்ட் ( Torrent ) கோப்புகளை தறவிக்க இலவச மென்பொருள்.
தினம் ஒரு புத்தகம் நா. பார்த்தசாரதி அவர்கள் எழுதிய " புகழ் என்னும் மாயை " புத்தகம் தறவிரக்க இங்கு சொடுக்கவும்.
வின்மணி சிந்தனை உடலை விட்டு உயிர் செல்லும் முன்பே மனிதன் ”நான் யார் “ என்பதை தெரிந்து கொள்ள வேண்டும்.
தமிழ் - ஆங்கிலம் மொழிபெயர்ப்பு wicker கூடை முடையும் பிரம்பு wile வஞ்சகம் windlass வளைவு wipe துடை , துப்பரவாக்கு wire gauze கம்பி வலை wisp வைக்கோல் கட்டு wit புத்தி , விவேகம் witticism நகைச்சுவைப் பேச்சு without each other ஒருவர் இல்லாமல் மற்றவர் widespread பரவலாக
இன்று பிப்ரவரி 1
பெயர் : கல்பனா சாவ்லா, மறைந்ததேதி : பிப்ரவரி 1, 2003 இந்தியாவில் பிறந்து விண்வெளியில் பறந்த முதல் பெண்மணி. STS-107 என்ற கொலம்பியா விண்ணோடத்தில் பறந்து பூமிக்குத் திரும்பும் பொழுது விண்கலம் வெடித்துச் சிதறியதில் உயிரிழந்தார்.கல்பனா சாவ்லாவை கௌரவிக்கும் விதமாக நியூயார்க் நகரிலுள்ள ஒரு வீதிக்கு அவரது பெயர் வைத்துள்ளனர்.
Entry filed under: அனைத்து பதிவுகளும், இணையதளம், தொழில்நுட்ப செய்திகள், பயனுள்ள தகவல்கள். Tags: மதிப்பு மிக்க அனைத்து ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் ( Android Application Free ) இலவசமாக தறவிரக்க.
1.
Elamurugan | 4:49 முப இல் பிப்ரவரி 3, 2012
வணக்கம் சார்,நலமா? வழக்கம் போல மற்றவர்கள் பயனை மட்டுமே கருதி வெளிவரும் ஒரே தளம் உங்கள் தளம்தான்,என்னால்தான் தொடர்ந்து பார்க்க முடியவில்லை,,,வாழ்க வளர்க
இளமுருகன்
நைஜீரியா