விளையாட்டு மூலம் இசைப்பயிற்சி கொடுக்கும் பயனுள்ள தளம்.
ஜனவரி 25, 2012 at 5:01 பிப 1 மறுமொழி
மனதை வருடும் இசை மூலம் மனதிற்கு மகிழ்ச்சியும் அன்பும் கிடைக்கும் என்பது நமக்கு தெரிந்த ஒன்று தான், சிறிய சிறிய விளையாட்டுகள் மூலம் இசைப்பயிற்சி அளிக்க ஒரு தளம் வந்துள்ளது இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.

படம் 1
விளையாட்டுகள் பொழுதுபோக்கிற்காக மட்டுமல்ல செஸ் ( சதுரங்கம் ) போன்ற விளையாட்டுகள் மூலம் புத்திசாலி தனத்தை வளர்க்கலாம். இதையெல்லாம் தாண்டி விளையாட்டு மூலம் எளிதாக இசைப்பயிற்சி அளிக்கலாம் நமக்கு உதவ ஒரு தளம் உள்ளது.
இணையதள முகவரி : http://www.musicgames.co/games-by-tag/ear-training/
இத்தளத்திற்கு சென்று நாம் புதிதாக ஒரு இலவச பயனாளர் கணக்கு உருவாக்கிக் கொண்டு உள்நுழையலாம், பல விதமான வேறுபட்ட விளையாட்டுகள் இத்தளத்தில் உள்ளது, Tones பற்றி முழுமையாக தெரிந்து கொள்ள ஒரு வகையான விளையாட்டு, Chords , Melody என்று ஒவ்வொன்று பற்றியும் தெரிந்து கொள்ள அதற்கு இணையான விளையாட்டு என்று பல வகைகளில் உள்ளது இதில் நாம் எந்த வகையான இசையைப்பற்றி தெரிந்து கொள்ள வேண்டுமோ அதை சொடுக்கி எளிதாக கற்கலாம் கண்டிப்பாக இசைப்பிரியர்களுக்கு இந்தப்பதிவு பயனுள்ளதாக இருக்கும்.
நம் பாடலுக்கு ஏற்ற இசையை நாமே உருவாக்க புதிய மெகா இசை ஸ்டூடியோ.
இசையின் அடிப்படையை விளையாட்டு மூலம் பயிற்சி கொடுக்கும் அபூர்வ தளம்.
இசைக்கலைஞர்கள் உருவாக்கும் ரிங்டோனை (Ringtone download) இலவசமாக தரவிரக்கலாம்.
இசையின் வெவ்வேறு பரிமாணங்களை இலவசமாக Download செய்யலாம்.
தினம் ஒரு புத்தகம் புலவர் த.கோவேந்தன் அவர்கள் எழுதிய "அறிவியல் நோக்கில் காலமும் கடிகாரமும் " புத்தகம் தறவிரக்க இங்கு சொடுக்கவும்.
வின்மணி சிந்தனை நல்லது செய்ய முடியாவிட்டாலும் அடுத்தவருக்கு துன்பம் செய்யாமல் இருப்பது சிறப்பானது.
தமிழ் - ஆங்கிலம் மொழிபெயர்ப்பு to repudiate முற்றாக நிராகரி to repudiate உரிமையை மறு to require அவசியமாகு , கோருதல் to require கேள் , வேண்டு to requirement விருப்பம் , கோரிக்கை to research ஆராய்ச்சி செய்தல், ஆய்வு to reserve முன்பதிவு to reset திரும்ப அமை to resign விலகு , ராஜினாமாச் செய் to resign நீங்கு
இன்று ஜனவரி 25
பெயர் : கொரசோன் அக்கினோ, பிறந்த தேதி : ஜனவரி 25, 1933 பிலிப்பைன்சின் அரசியல்வாதியும்,மக்களாட்சி, அமைதி, பெண்ணுரிமை போன்றவற்றிற்கு குரல் கொடுத்தவரும் ஆவார். இவர் பிலிப்பைன்சின் 11வது குடியரசுத் தலைவராக 1986 முதல் 1992 வரை பணியாற்றினார். அத்துடன் பிலிப்பைன்சின் முதலாவது பெண் ஜனாதிபதியும் ஆசிய நாடொன்றின் முதலாவது பெண் ஜனாதிபதியும் ஆவார்.
PDF ஆக தறவிரக்க இங்கே சொடுக்கவும்
Entry filed under: அனைத்து பதிவுகளும், இணையதளம், தொழில்நுட்ப செய்திகள், பயனுள்ள தகவல்கள். Tags: விளையாட்டு மூலம் இசைப்பயிற்சி கொடுக்கும் பயனுள்ள தளம்..
1.
stalinwesley | 9:01 பிப இல் ஜனவரி 29, 2012
இந்தப்பதிவு பயனுள்ளதாக உள்ளது