புகைப்படத்துக்கு சேதம் இல்லாமல் அளவு ( எடை ) குறைக்க உதவும் மிகவும் பயனுள்ள தளம்.
ஜனவரி 24, 2012 at 2:50 பிப 2 பின்னூட்டங்கள்
புகைப்படத்தின் தரத்தை பாதிக்காமல் புகைப்படத்தின் எடையை குறைக்க முடியுமா என்று கேள்விக்கு விடையாக இத்தளம் வந்துள்ளது, நீளம் அகலத்தை குறைக்காமல் புகைப்படத்தின் குவாலிட்டியை குறைக்காமல் இதெல்லாம் சாத்தியமா என்றால் சாத்தியம் தான் இதைப் பற்றித்தான் இந்தப்பதிவு.

படம் 1
புகைப்பட கலைஞர்கள் மட்டுமில்லாமல் புகைப்படம் எடுக்கும் நம்மவர்களுக்கும் இந்தப்பதிவு பயனுள்ளதாக இருக்கும், புகைப்படத்தின் குவாலிட்டி ( Quality) குறையாமல் படத்தின் கொள்ளவு (Size) மட்டும் குறைத்து கொடுக்க ஒரு பயனுள்ள தளம் உள்ளது.
இணையதள முகவரி : http://www.jpegmini.com/main/shrink_photo
போட்டோஷாப் மென்பொருளை பயன்படுத்தி புகைப்படத்தின் அளவை குறைப்பதைவிட இது பெரிதாக என்ன செய்துவிட முடியும் என்ற அலட்சியத்தில் இத்தளத்தை சோதித்து பார்த்து வியந்துவிட்டோம் உடனடியாக நாம் எடுத்து 4MB Size கொண்ட புகைப்படத்தை வெறும் 617 KB ஆக மாற்றியது தரத்தில் பெரிதாக எந்த வித்தியாசமும் இல்லை. இனி எப்படி இத்தளத்தை பயன்படுத்துவது என்று பார்ப்போம். இத்தளத்திற்கு சென்று Upload your photo என்பதை சொடுக்கி நம்மிடம் இருக்கும் புகைப்படத்தை பதிவேற்ற வேண்டியது மட்டும் தான் நம் வேலை, அடுத்து வரும் திரையில் நாம் பதிவேற்றிய புகைப்படத்தின் வலது பக்கம் இருக்கும் JPEG Mini என்பதை சொடுக்கி விட்டு புகைப்படத்திற்கு அடியில் இருக்கும் Download Photo என்பதை சொடுக்கி புகைப்படத்தை தறவிரக்கலாம்.Picasa மற்றும் Flickr இருக்கும் புகைப்படங்களை கூட நாம் எளிதாக தரம், அளவு குறையாமல் எடையை மட்டும் குறைத்து தரவிரக்கலாம். கண்டிப்பாக இந்தப்பதிவு நம் அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும்.
ஆன்லைன் -ல் புகைப்படங்களை வெட்ட , அளவுகளை மாற்ற உதவும் அசத்தலான இணையதளம்.
நம் புகைப்படத்துக்கு அழகான இமெஜ் எபெக்ட்ஸ் ( Image Effects ) நொடியில் ஆன்லைன் மூலம் செய்யலாம்.
ஆண்டிராய்டு போனில் உங்கள் புகைப்படத்தை அழகான கார்டூனாக மாற்றும் வித்தை வீடியோவுடன்.
புகைப்படங்களை பெரியதாக்கவும் சிறியதாக்கவும் உதவும் பயனுள்ள இலவச மென்பொருள்.
தினம் ஒரு புத்தகம் வல்லிக்கண்ணன் அவர்கள் எழுதிய "அறிவின் கேள்வி " புத்தகம் தறவிரக்க இங்கு சொடுக்கவும்.
வின்மணி சிந்தனை நம்மை கொல்ல வரும் மிருகம் கூட நம் அன்பான பார்வைக்கு கட்டுப்படும்.
தமிழ் - ஆங்கிலம் மொழிபெயர்ப்பு to rename பெயர் மாற்றம் to rend துண்டு துண்டாக பிரி to render அளி , தருவி to render homage மரியாதை செலுத்து to renovate பழுதுபார் , திருத்து to renovate செப்பனிடு to repair பழுதுபார் , திருத்து, செப்பனிடு to repay தவனைமுறையில் பணம்செலுத்து to repeal இரத்துச் செய் to repeople மீளக் குடியமர்த்து
இன்று ஜனவரி 24
பெயர் : ஓமி யெகாங்கிர் பாபா, மறைந்த தேதி : ஜனவரி 24, 1966 இந்திய அணு ஆற்றல் திட்டத்தில் முக்கியப் பங்களித்த ஒரு அணுக்கரு இயற்பியலாளர். 1937ஆம் ஆண்டு ஓமியும் ஹைட்லர் என்ற ஜெர்மானிய இயற்பியலாளரும் இணைந்து செய்த அண்டக்கதிர்-பற்றிய ஆராய்ச்சி அவர்களுக்கு உலகப்புகழைத் தந்தது.ஓமி பாபா இந்திய அணுக்கருவியலின் தந்தை.
PDF ஆக தறவிரக்க இங்கே சொடுக்கவும்
Entry filed under: அனைத்து பதிவுகளும், இணையதளம், தொழில்நுட்ப செய்திகள், பயனுள்ள தகவல்கள்.
1.
சேலம்தேவா(salemdeva) (@salemdeva) | 4:04 பிப இல் ஜனவரி 28, 2012
பயனுள்ள தகவலுக்கு நன்றி..!!
2.
mohan | 7:13 பிப இல் பிப்ரவரி 3, 2012
very useful information thanks a lot.