உங்கள் ஆங்கில கட்டுரை மற்றும் ஆவனங்களை இலவசமாக திருத்தம் செய்து கொடுக்க ஒரு பயனுள்ளதளம்.
ஜனவரி 23, 2012 at 9:44 முப பின்னூட்டமொன்றை இடுக
ஆங்கில கட்டுரைகளை இலக்கண பிழை இல்லாமல் எடிட் செய்வதற்கு உதவி செய்ய ஒரு தளம் உள்ளது, எளிதாக நம் கட்டுரைகளில் இருக்கும் பிழைகளை நீக்க உதவும் இத்தளத்தைப் பற்றித்தான் இந்தப்பதிவு.

படம் 1
கட்டுரைகளில் பெரும்பாலும் பல இடங்களில் இதற்கு பதில் இந்த வார்த்தையை பயன்படுத்தி இருப்பீர்கள் என்றால் இன்னும் சிறப்பாக இருக்கும் என்று பல பேர் கூறுவர் ஆனாலும் ஆங்கில மொழி தாய்மொழியாக உள்ளவர்கள் நம் கட்டுரையைப் படித்து அதில் இருக்கும் பிழையான தகவல்களை நீக்க உதவுகிறது ஒரு தளம்.
இணையதள முகவரி : https://kibin.com
இத்தளத்திற்கு சென்று நாம் படம் 1-ல் காட்டியபடி Get Started என்றபொத்தானை சொடுக்கி புதிதாக ஒரு பயனாளர் கணக்கு உருவாக்கலாம் அல்லது நம் பேஸ்புக் கணக்கை கொடுத்தும் உள்நுழையலாம். அடுத்து நம்மிடம் இருக்கும் கோப்புகளை பதிவேற்றம் செய்துவிட வேண்டியது தான் உலகின் ஒவ்வொரு பகுதிகளிலும் இருக்கும் எழுத்தாளர்கள் நம் கட்டுரையை படித்து அதில் இருக்கும் பிழை மற்றும் அழகான வார்த்தைகளை நமக்கு தெரியப்படுத்துவர், நமக்கு ஆங்கிலம் நன்றாக தெரியும் என்றால் நாம் கூட மற்றவரின் கட்டுரையை எடிட் செய்யலாம் யார் என்னென்ன மாற்றங்கள் செய்துள்ளனர் இதில் நமக்கு தேவையானவை என்ன என்பதை நாம் கண்டு சேர்க்க வேண்டியதை சேர்த்துக்கொள்ளலாம், புதுமை விரும்பிகளுக்கும் ஆங்கில கட்டுரை எழுதும் நம்மவர்களுக்கும் இத்தளம் பயனுள்ளதாக இருக்கும்.
தினம் ஒரு புத்தகம் நாரா நாச்சியப்பன் அவர்கள் எழுதிய ஏழாவது வாசல் (ராமகிருஷ்ண பரமஹம்சர் சொன்ன கதைகள்) புத்தகம் தறவிரக்க இங்கு சொடுக்கவும்.
வின்மணி சிந்தனை இயற்கை மேல் அன்போடு இருந்தால் ஒவ்வொரு நாளும் நாம் செய்ய வேண்டியதை அது நமக்கு உணர்த்தும்.
தமிழ் - ஆங்கிலம் மொழிபெயர்ப்பு to relinquish கவனிக்காது விடு to relinquish கைவிடு,துற to relinquish விலகு,நீங்கு to remarry மறுமணம் to remedy குணப்படுத்து to remind நினைவூட்டு to remit பணம் அனுப்பு to remonstrate எச்சரி to remonstrate ஆட்சேப்பனை செய் to remove நீக்கு,விலக்கு,ஒழுங்குபடுத்து
இன்று ஜனவரி 23
பெயர் : இராமலிங்க அடிகள், மறைந்த தேதி : ஜனவரி 23,1873 வள்ளலார் என்று அழைக்கப்படும் இராமலிங்க அடிகளார் ஓர் சிறந்த ஆன்மீகவாதி ஆவார். மூடப்பழக்க வழக்கங்களை எதிர்த்தவர். சன்மார்க்க சிந்தனையாளர்.அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை என்று எல்லா மதங்களையும் விட்டு தனித்து இருந்தவர். இவருடைய சிந்தனைகள் தற்போது வேகமாக உலகெங்கும் பரவிவருகிறது.
PDF ஆக தறவிரக்க இங்கே சொடுக்கவும்
Entry filed under: அனைத்து பதிவுகளும், இணையதளம், தொழில்நுட்ப செய்திகள், பயனுள்ள தகவல்கள். Tags: உங்கள் ஆங்கில கட்டுரை மற்றும் ஆவனங்களை இலவசமாக திருத்தம் செய்து கொடுக்க .
Subscribe to the comments via RSS Feed