டிவிட்டரில் நம்மைப்பற்றி முழுமையாக தெரிந்து கொள்ள உதவும் பயனுள்ள தளம்.

ஜனவரி 9, 2012 at 3:38 முப 1 மறுமொழி

சோசியல் வலைதளங்களில் முதன்மையானதாக வலம் வந்து கொண்டிருக்கும் டிவிட்டரில் நம்மைப்பற்றியும் நாம் இதுவரை கொடுத்திருக்கும் டிவிட் பற்றி வகைகள் பற்றியும் புள்ளிவிபரத்துடன் கூற ஒரு தளம் உள்ளது  இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.

படம் 1

டிவிட்டரில் எத்தனை பேர் நம்மை பின் தொடர்கிறார்கள் என்பதில் தொடங்கி நாம் அதிகமாக பயன்படுத்தும் வார்த்தை என்ன என்பது முதல் அனைத்து  தகவல்களையும் கொடுத்து உதவுகிறது ஒரு தளம்.

இணையதள முகவரி : http://twtrland.com

இத்தளத்திற்கு சென்று Search என்று இருக்கும் கட்டத்திற்குள் நம் டிவிட்டரின் பயனாளர் பெயர் கொடுத்து Enter சொடுக்கினால் போதும் அடுத்து வரும்  திரையில் எத்தனை பேர் நம்மை பின் தொடர்கின்றனர், இதுவரை நாம் எத்தனை டிவிட் செய்திருக்கிறோம்,அதிகமாக டிவிட்டரில் நாம் பயன்படுத்தும் வார்த்தை, இணைப்பு (Link) கொடுத்துஎத்தனை டிவிட் செய்திருக்கிறோம்,  Link இல்லாமல்  எத்தனை டிவிட் செய்திருக்கிறோம், எத்தனை டிவிட் செய்திகளை ரீடுவிட் செய்திருக்கிறோம் போன்ற அனைத்து தகவல்களையும் கொடுக்கின்றனர்.  யாருடைய டிவிட்டர் பயனாளர் பெயரும் கொடுத்து நாம் அவர்களை பின் தொடர்பவர்கள் மற்றும் அவர்கள் செய்த டிவிட் என அனைத்தையும் முழுமையான தெரிந்து கொள்ளலாம், டிவிட்டர் பயன்படுத்தும் அனைவருக்கும்  இந்தப்பதிவு பயனுள்ளதாக இருக்கும்.

கூகிள் பிளஸ்-ல் இருந்து டிவிட் செய்ய உதவும் பயனுள்ள நீட்சி.

டிவிட்டரில் ஆடியோ டிவீட் செய்ய நமக்கு உதவும் பயனுள்ள தளம்.

நம் டிவிட்டர் செய்திகள் அனைத்தையும் சேமிக்க (Backup) செய்ய ஒரு பயனுள்ள தளம்.

நம் பேஸ்புக் , டிவிட்டரில் இருக்கும் நண்பர்களின் புகைப்படங்களை இணைத்து சித்திர வேலைப்பாடு அமைந்த படமாக உருவாக்கலாம்.

வின்மணி சிந்தனை
விடா முயற்சியும் உண்மையான செயலும் என்றும்
நமக்கு வெற்றியை கொடுக்கும்.
 
தமிழ் - ஆங்கிலம்  மொழிபெயர்ப்பு
to nurse    பராமரி
noblemen  உயர் குடி மகன்
nose drops  மூக்குத் துளி மருந்து
nutrients  உணவு வகை சத்துக்கள்
nanotech     மிக நுண்ணிய
nanotechnology   நுண் தொழில்நுட்பம்
natural gas (fuel)    எரிவாயு
naught    இன்மை
negotiation   உடன்படிக்கை செய்துகொள்தல்
neighbourhood  அக்கம் பக்கத்தில் , அருகில்
 
இன்று ஜனவரி 9

பெயர் : ஹர் கோவிந்த் குரானா ,
பிறந்த தேதி : ஜனவரி 9, 1922
ஓர் இந்திய அமெரிக்க மூலக்கூற்று உயிரியல் 
அறிவியலாளர். மரபுக் குறியம் (genetic code)
பற்றியும் புரதத்தை செயற்கையாக உற்பத்தி
செய்வதில் அவற்றின் பங்கு குறித்தும் அவர்
ஆற்றிய ஆராய்விற்காக 1968ஆம் ஆண்டு மருத்துவம்
அல்லது உடலிங்கியல் துறையில் நோபல் பரிசினை
மார்சல் நோரென்பர்க், இராபர்ட் ஹாலி ஆகியோருடன்
பகிர்ந்து பெற்றவர்.

PDF ஆக தரவிரக்க இங்கே சொடுக்கவும்


Entry filed under: அனைத்து பதிவுகளும், இணையதளம், தொழில்நுட்ப செய்திகள், பயனுள்ள தகவல்கள். Tags: .

உலகெங்கும் எடுக்கப்பட்ட அரிய ஆவணப்படங்களை ஆன்லைன் மூலம் இலவசமாக பார்க்க உதவும் பயனுள்ள தளம். ஆன்லைன் மூலம் ஒரே நேரத்தில் 10 பேருடன் குழும அழைப்பு ( free conference call ) செய்து MP3 கோப்பாக சேமிக்கலாம்.

1 பின்னூட்டம் Add your own

  • 1. salemdeva  |  5:55 முப இல் ஜனவரி 12, 2012

    ட்விட்டர் உபயோகிக்கும் பலருக்கு பயனுள்ள பதிவு..!! நன்றி..!!

    மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

Subscribe to the comments via RSS Feed


பதிவுகள் காப்பூரிமை

உங்கள் மின்னஞ்சலை
உள்ளிட்டு இவ்வலைப்பூவிற்கு
சந்தாதாரராகி,புதிய பதிவுகளை
மின்னஞ்சலில் பெறுங்கள்.

Join 2,733 other followers

வின்மணியின் சேவை

சிறந்த முறையில் இணையதளம் உருவாக்க GooLittle.com.நேர்மையான விலையில் சிறப்பான சேவை.

மேலும் விபரங்களுக்கு

அண்மைய பதிவுகள்

Our Sponsors

HOTEL SIVAMURUGAN KANYAKUMARI

HOTEL SIVAMURUGAN

நாள் காட்டி

ஜனவரி 2012
M T W T F S S
« Dec   Feb »
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  

டிவிட்டரில் நம்மோடு சேர…

தகவல் பாதுகாப்பு

அனைத்து தகவல்களும் முறையாக Creative Common 2.5 - ஆல் காப்பிரைட் செய்யப்பட்டு வெளிவருகிறது.
Creative Commons License
winmani by winmani is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 2.5 License.

நம் வின்மணி இணைப்பு உங்க தளத்தில் கொடுக்க…

உடனுக்குடன் பெற

winmani

winmani.com

www.winmani.com

TNPSC Ebook

TNPSC Group 1, Group 2,Group 3, Group 4 மற்றும் VAO தேர்வில் அடிக்கடி கேட்கப்பட்ட 3000 வினாக்கள் கொண்ட சிறப்பு இ-புத்தகம். மேலும் விபரங்களுக்கு...

%d bloggers like this: