அட்டகாசமான அனிமேசனுடன் கூகிள் மேப் இலவசமாக உருவாக்கலாம்.

ஒக்ரோபர் 25, 2011 at 10:18 முப 2 பின்னூட்டங்கள்

மேப் என்ற வார்த்தை சொன்னவுடன் உடனடியாக நமக்கு ஞாபகம் வருவது கூகிள் மேப் தான் அந்த அளவிற்கு கிராமத்தை கூட விட்டு வைக்காமல் கூகிள் மேப்-ல் காட்டுவது மேலும் சிறப்பு, கூகிள் மேப் அனிமேசனுடன் காட்டினால் எப்படி இருக்கும் ஆம் கூகிள் மேப்-ஐ அனிமேசனுடன் ஒரு தளம் உருவாக்கி கொடுக்கிறது இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.

படம் 1

வேடிக்கையாக கூகிள் மேப் பார்க்க சென்றவர்களை கூகிள் மேப் விடாமல் பிடித்துக்கொள்கிறது என்று தான் சொல்ல வேண்டும் புதிதாக ஒரு நபர் குறிப்பிட்ட ஊர் எங்கிருக்கிறது என்ற பார்க்க வேண்டும் என்று கூகிள் மேப் பக்கம் சென்றால் எங்கிருக்கிறது என்ற தகவல் மட்டுமல்ல பேருந்தில்  பயணம் செய்தால் எத்தனை கி.மீ என்பது முதல் எவ்வளவு மணி நேரம் என்பது வரை துல்லியமாக கொடுக்கும் கூகிள் மேப் -ஐ அனிமேசனுடன் காட்டுவதற்காக ஒரு தளம் உள்ளது.

இணையதள முகவரி : http://www.animaps.com

புதிய கோணத்தில் உங்கள் மேப்-ஐ இலவசமாக வடிவமைக்க எங்களிடம்  வாருங்கள் என்று அழைக்கிறது இத்தளம். இங்கு சென்று நாம் Get Started என்ற பொத்தானை சொடுக்கி வரும் கூகிள் மேப் -ல் நம் இடத்தை தேர்ந்தெடுக்க வேண்டும், அதன் பின் நமக்கு தேவையான படங்களை மேப்-ல் எங்கு வைக்க வேண்டும் என்பது போன்ற எல்லாத்தகவல்களையும் கொடுத்து அழகான அனிமேசன் மேப் உருவாக்கலாம். ஒரு அனிமேசன்  மனிதன் கூகிள் மேப்-ல் நடந்து நம் இடத்திற்கு வருவது போல் கூட உருவாக்கலாம். புதிதாக இத்தளத்திற்கு வருபவர்களுக்கு எப்படி பயன்படுத்த  வேண்டும் என்பதைப்பற்றிய அறிமுக வீடியோவையும் இத்துடன் இணைத்துள்ளோம். இத்தளத்தின் கூடுதல் சிறப்பு என்னவென்றால் அனிமேசனுடன் நாம் உருவாக்கும் மேப்-ஐ நம் பிளாக்-ல் அல்லது  இணையத்தில் கூட பகிர்ந்து கொள்ளலாம், சில பெரிய நிறுவனங்கள் இப்படி மேப் உருவாக்க பெரியத் தொகையை கட்டணமாக வசூலிக்கின்றனர், நாமும் அனிமேசன் எல்லாம் செய்துள்ளனர் என்று கேட்கும் தொகையை கொடுக்கின்றோம், ஆனால் இனி எளிதாக இத்தளம் மூலம் நாமும் அனிமேசனுடன் கூகிள் மேப் உருவாக்கி நம் தளத்தில் பகிர்ந்து கொள்ளலாம். அனிமேசனுடன் கூடிய  அட்டகாசமான கூகிள் மேப் உருவாக்க விரும்பும் அனைவருக்கும் இந்தப்பதிவு பயனுள்ளதாக இருக்கும்.

பேருந்து , இரயில் ,விமானம் மூலம் நாம் செல்லும் இடத்துக்கு மேப், பயண நேரம் , செலவு கொடுக்கும் பயனுள்ளதளம்.

கண்ணைக் கவரும் டெக்ஸ்ட் அனிமேசன் எளிதாக உருவாக்கலாம்.

ஆன்லைன்-ல் ஜீப் ( Gif ) அனிமேசன் எளிதாக உருவாக்கலாம்

கூகுள் கணினி பற்றிய அடிப்படையை நம் பெற்றோருக்கு சொல்லிக்கொடுக்கிறது

 
வின்மணி சிந்தனை
நாம் செய்யும் ஒரு சிறிய செயலைக்கூட எவ்வளவு
சிறப்பாக செய்ய முடியுமோ அப்படி செய்ய வேண்டும்.
 
இன்று அக்டோபர் 25

பெயர் : பாப்லோ பிக்காசோ ,
பிறந்த தேதி : அக்டோபர் 25, 1881
எசுப்பானியா நாட்டைச் சேர்ந்த ஒரு புகழ்பெற்ற
ஓவியரும், சிற்பியும் ஆவார். 20 ஆம்
நூற்றாண்டின் ஓவியத் துறை தொடர்பில் மிகப்
பரவலாக அறியப்பட்டவர்களுள் இவரும்
ஒருவர். ஜோர்ஜெஸ் பிராக் (Georges Braque) என்பவருடன்
கூட்டாக கியூபிசம் என்னும் கலைப்பாணி ஒன்றை
ஆரம்பித்து வைத்தவர் என்ற வகையிலேயே இவர்
பெரிதும் அறியப்படுகிறார்.

PDF ஆக தரவிரக்க இங்கே சொடுக்கவும்


Entry filed under: அனைத்து பதிவுகளும், இணையதளம், கூகிள் உதவி, தொழில்நுட்ப செய்திகள், பயனுள்ள தகவல்கள். Tags: .

டிஜிட்டல் கேமிரா வாங்க விரும்புபவர்களுக்கு உதவும் பயனுள்ள தளம். நம் செல்லப்பிராணிகளுக்கு புதிதாக எவ்வகையான பொருட்கள் எல்லாம் வந்திருக்கிறது என்பதை சொல்லும் தளம்.

2 பின்னூட்டங்கள் Add your own

  • 1. சதீஸ் குமார்  |  10:43 முப இல் திசெம்பர் 1, 2011

    ur blog is awesome.

    i learn lots more frm ur site.

    thnk u frnd keep blogging

    மறுமொழி
    • 2. winmani  |  8:12 பிப இல் திசெம்பர் 1, 2011

      @ சதீஸ் குமார்
      மிக்க நன்றி

      மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

Subscribe to the comments via RSS Feed


பதிவுகள் காப்பூரிமை

உங்கள் மின்னஞ்சலை
உள்ளிட்டு இவ்வலைப்பூவிற்கு
சந்தாதாரராகி,புதிய பதிவுகளை
மின்னஞ்சலில் பெறுங்கள்.

Join 2,733 other followers

வின்மணியின் சேவை

சிறந்த முறையில் இணையதளம் உருவாக்க GooLittle.com.நேர்மையான விலையில் சிறப்பான சேவை.

மேலும் விபரங்களுக்கு

அண்மைய பதிவுகள்

Our Sponsors

HOTEL SIVAMURUGAN KANYAKUMARI

HOTEL SIVAMURUGAN

நாள் காட்டி

ஒக்ரோபர் 2011
M T W T F S S
« Sep   Nov »
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

டிவிட்டரில் நம்மோடு சேர…

தகவல் பாதுகாப்பு

அனைத்து தகவல்களும் முறையாக Creative Common 2.5 - ஆல் காப்பிரைட் செய்யப்பட்டு வெளிவருகிறது.
Creative Commons License
winmani by winmani is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 2.5 License.

நம் வின்மணி இணைப்பு உங்க தளத்தில் கொடுக்க…

உடனுக்குடன் பெற

winmani

winmani.com

www.winmani.com

TNPSC Ebook

TNPSC Group 1, Group 2,Group 3, Group 4 மற்றும் VAO தேர்வில் அடிக்கடி கேட்கப்பட்ட 3000 வினாக்கள் கொண்ட சிறப்பு இ-புத்தகம். மேலும் விபரங்களுக்கு...

%d bloggers like this: