போட்டி வைத்து பரிசு கொடுப்பதற்கென்றே பிரத்யேகமான இணையதளம்.

ஒக்ரோபர் 22, 2011 at 11:37 பிப 7 பின்னூட்டங்கள்

வேலை கொடுப்பவர்களுக்கு நாளும் வரும் வேலையை கூட ஒரு போட்டி போல் வைத்து தினமும் பலவகையான போட்டி நடத்தி
ஒவ்வொரு போட்டிக்கும் அதற்கு இணையான பணமும் முன்பே தெரிவித்து வெற்றி பெறுபவர்களுக்கு கொடுக்க ஒரு தளம் உள்ளது இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.

படம் 1

உழைக்காமல் பணம் வேண்டாம், எங்கே போட்டி நடக்கிறது என்று மட்டும் சொல்லுங்கள் நாங்களும் கலந்து கொண்டு வெற்றி  பெறுவோம் என்று சொல்லும் அனைவருக்கும் போட்டிகளை வைத்து பரிசுகளை அள்ளிக் கொடுப்பதற்கென்றே ஒரு தளம்  இருக்கிறது.

இணையதள முகவரி :http://prizes.org

வீட்டில் இருந்தே பணம் சம்பாதிப்பது எப்படி ? , ஆன்லைன் மூலம் பணம்  சம்பாதிக்க வழிமுறை என்ன ?, ஆன்லைன்  மூலம் வேலை செய்வது  எப்படி ? , இண்டெர்நெட் வழியாக பணம்  சம்பாதிப்பது எப்படி ? , இன்னும் நம்மவர்கள் கேட்கும் பல கேள்விகளுக்கு இந்தப்பதிவு பதிலாக இருக்கும்.  இத்தளத்திற்கு சென்று நாம் நம்முடைய பேஸ்புக் அல்லது டிவிட்டர் கணக்கைப் பயன்படுத்தி உள்நுழையலாம், இணையப் பயனாளர்கள் பலபேர் தங்களுக்கு செய்ய வேண்டிய வேலை மற்றும் பணம், எத்தனை நாட்களுக்குள் முடிக்க வேண்டும் என்று கொடுத்துள்ளனர், தினமும்  பலவகையான பிராஜெக்ட் இங்கு கிடைக்கிறது, இதில் நாம் எதில்   திறமைசாலியாக இருக்கிறோமோ அதில் விருப்பத்துடன் பங்கு பெறலாம். பல பேர் பங்கு பெறுவதில் போட்டி கொஞ்சம் அதிகமாக இருக்கும் ஆனால் வெற்றி பெற்றால் பணத்தை குவிக்கலாம். குறிப்பிட்ட விளம்பரத்தை கிளிக் செய்யுங்கள் மாதம் இவ்வளவு பணம் என்று ஏமாற்றும் கும்பலிடம் இருந்து தப்பிக்கலாம். உதாரணமாக இந்ததளத்தில் இருந்து ஒருவர் தன் நிறுவனத்திற்கு லோகோ  வேண்டும் என்று கேட்டிருக்கிறார் என்று  வைத்துக்கொள்வோம், நாமும் பங்கு கொண்டு வெற்றி பெற்றால் பணமும் கிடைக்கும், உங்கள் திறமை அவருக்கு பிடித்திருந்தால் அந்த நிறுவனத்தில் வேலையும் கிடைக்கும்.

ஐபேட் போட்டியாக சீனா அறிமுகப்படுத்த இருக்கும் ஐபெட் சிறப்பு வீடியோவுடன்

பிரிட்டன் செயிண்ட் டிஜிட்டல் நிறுவனம் நடத்தும் மாறுபட்ட பொழுதுபோக்கு போட்டி

சோசியல் மீடியாயை வைத்து போட்டி : எந்த நிறுவனம் பிரபலம் என்று அறியலாம்.

கூகிள் நடத்தும் இளம் விஞ்ஞானிகளுக்கான போட்டி எல்லா நாட்டு மக்களும் பங்குபெறலாம்.

 
வின்மணி சிந்தனை
உழைக்காமல் கிடைக்கும் பணம் தனக்கு தேவை இல்லை
என்று எண்ணுபவருக்கு நோயும் அருகில் நெருங்குவதில்லை. 
 
இன்று அக்டோபர் 22 

பெயர் : ஜான்சி ராணி லட்சுமிபாய் ,
பிறந்த தேதி : அக்டோபர் 22, 1828
வட இந்தியாவின் ஜான்சி நாட்டின் இராணி.
1857 இந்தியக் கிளர்ச்சியில் பெரும் பங்காற்றி
இந்தியாவில் பிரிட்டனின் ஆட்சிக்கு எதிராகக்
கிளர்ந்து எழுந்தோர்களின் முன்னோடியாகக்
கணிக்கப்படுகிறவர்.வெள்ளையர் எதிர்ப்புக்காக நேதாஜி
பெண்கள் படை உருவாக்கியபோது அதற்கு "ஜான்சிராணி
ரெஜிமெண்ட்" என்று பெயரிட்டார்

PDF ஆக தறவிரக்க இங்கே சொடுக்கவும்


Entry filed under: அனைத்து பதிவுகளும், ஆன்லைன் வேலை, இணையதளம், தொழில்நுட்ப செய்திகள், பயனுள்ள தகவல்கள், வீட்டில் இருந்து பணம் சம்பாதிக்க. Tags: .

விண்டோஸ் எக்ஸ்பி முதல் விண்டோஸ் 7 வரை உள்ள சிஸ்டத்தின் Driver Backup எளிதாக எடுத்துக்கொள்ளலாம். நம் புகைப்படத்துடன் ஹாலிவுட் மூவி போஸ்டர் (Hollywood Movie Poster ) உருவாக்கலாம்.

7 பின்னூட்டங்கள் Add your own

  • 1. puduvaisiva  |  12:48 முப இல் நவம்பர் 3, 2011

    useful info thanks winmani

    மறுமொழி
    • 2. winmani  |  1:03 முப இல் நவம்பர் 3, 2011

      @ puduvaisiva
      மிக்க நன்றி

      மறுமொழி
  • 3. stalinwesley  |  6:37 முப இல் நவம்பர் 3, 2011

    நல்ல தளம் பிரதர் …

    நன்றி

    மறுமொழி
  • 4. nancy  |  3:13 பிப இல் நவம்பர் 9, 2011

    very much useful site for, those who are all struggling for jobless at this 21st century, thanks lot.

    மறுமொழி
  • 5. techspeaker  |  6:58 பிப இல் நவம்பர் 20, 2011

    wow.i never heard of such sites

    மறுமொழி
  • 6. VENKAT  |  11:17 முப இல் ஏப்ரல் 2, 2012

    vanvedikAKI PA

    மறுமொழி
  • 7. saleem bathusha  |  7:49 பிப இல் ஜூலை 27, 2012

    how can we get thet prizes.pls reply in my account.

    மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

Subscribe to the comments via RSS Feed


பதிவுகள் காப்பூரிமை

உங்கள் மின்னஞ்சலை
உள்ளிட்டு இவ்வலைப்பூவிற்கு
சந்தாதாரராகி,புதிய பதிவுகளை
மின்னஞ்சலில் பெறுங்கள்.

Join 2,733 other followers

வின்மணியின் சேவை

சிறந்த முறையில் இணையதளம் உருவாக்க GooLittle.com.நேர்மையான விலையில் சிறப்பான சேவை.

மேலும் விபரங்களுக்கு

அண்மைய பதிவுகள்

Our Sponsors

HOTEL SIVAMURUGAN KANYAKUMARI

HOTEL SIVAMURUGAN

நாள் காட்டி

ஒக்ரோபர் 2011
M T W T F S S
« Sep   Nov »
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

டிவிட்டரில் நம்மோடு சேர…

தகவல் பாதுகாப்பு

அனைத்து தகவல்களும் முறையாக Creative Common 2.5 - ஆல் காப்பிரைட் செய்யப்பட்டு வெளிவருகிறது.
Creative Commons License
winmani by winmani is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 2.5 License.

நம் வின்மணி இணைப்பு உங்க தளத்தில் கொடுக்க…

உடனுக்குடன் பெற

winmani

winmani.com

www.winmani.com

TNPSC Ebook

TNPSC Group 1, Group 2,Group 3, Group 4 மற்றும் VAO தேர்வில் அடிக்கடி கேட்கப்பட்ட 3000 வினாக்கள் கொண்ட சிறப்பு இ-புத்தகம். மேலும் விபரங்களுக்கு...

%d bloggers like this: