கூகிள் ஒரு ரகசிய உளவாளி – வின்மணி வழங்கும் சிறப்பு பதிவு.

ஒக்ரோபர் 17, 2011 at 11:05 பிப 9 பின்னூட்டங்கள்

இணையத்தில் தேடுவதற்காக அனைவரும் பயன்படுத்தும் கூகிள் தனக்கு போட்டியே இல்லாமல் செய்வதற்காக நாளும் பல விதமான சேவைகளை அள்ளிக் கொடுத்து வருகிறது, கூகிளின் இந்த வளர்ச்சி நமக்கு பயனுள்ளதாக  இருந்தாலும் பல விதங்களில் கூகிள் நம்மிடம் இருந்து பல தகவல்களை தெரிந்து கொள்ளவும் செய்கிறது எப்படி என்பதைப்பற்றித்தான் இன்றைய சிறப்புப்பதிவு.

படம் 1

கூகிள் கொடுக்கும் சேவைகளில் ஒன்றான ஜீமெயில் பலவிதங்களில் நம்மைப்பற்றிய தகவல் எடுக்க வாய்ப்பு இருக்கிறது, நமக்கு  என்ன பிடிக்கும் யாரெல்லாம் நம் நண்பர்கள் என்பது முதல் தற்போது நாம் என்ன செய்து கொண்டு இருக்கிறோம் என்பது வரை நம்மைப்பற்றிய அத்தனை செய்திகளையும் விரல் நுனியில் வைத்திருக்கிறது எப்படி என்பதைப் பற்றி விரிவாக பார்க்கலாம்.

படம் 2

கூகிளின் ஜீமெயில் பயன்படுத்தும் பயனாளர்கள் கூர்மையாக கவனிக்க  வேண்டிய விசயம் ஒன்று இருக்கிறது. முன்பெல்லாம் நம் ஜீமெயில் கணக்கில் வரும் இமெயிலை திறந்தும் வலது பக்கத்தில் ஏதோ ஒரு விளம்பரம் வரும் இதை நாம் எப்போதும் பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை என்றாலும் தற்போது கூர்ந்து கவனித்தால் நமக்கு வந்திருக்கும் இமெயிலுக்கு  தகுந்தற்போல் விளம்பரம் கூகிளில் காட்டப்படுகிறது ( ஆங்கில மொழியில் வரும் இமெயிலுக்கு மட்டுமே சரியாக காட்டுகிறது). இதைக்கூட ஏதோ Catching Script வைத்து கொடுக்கின்றனர் என்று வைத்துக்கொண்டாலும் சில நேரங்களில் நமக்கு இமெயிலில் படங்கள் வருகிறது என்று  வைத்துக்கொள்வோம் அப்போது வரும் விளம்பரங்கள் தான் நம்மை ஆச்சர்யப்பட வைக்கிறது என்ன காரணம் தெரியுமா ? , நம் இமெயிலில் அதிகமாக எந்ததுறை சார்ந்த இமெயில் வருகிறதோ அதற்கு இணையான அல்லது தொடர்புடைய விளம்பரங்கள் காட்டப்படுகிறது. இதைத்தவிர நாம் ஜீமெயிலை திறந்து வைத்துக்கொண்டு இணையத்தில் உலாவினால் நாம் எந்தெந்த தளங்களை எல்லாம் பார்த்தோம் என்று Web history-ல் சேமிக்கப்பட்டு இருக்கிறது. இதை எல்லாம் விட இன்னொரு அதிசயம் இருக்கிறது அது என்னவென்றால் ஜீமெயில் கணக்கை திறந்து வைத்துக் கொண்டு கூகிள் தேடல் பயன்படுத்தினால் தான் நம் தகவலை  சேமிக்கின்றனர் என்று இல்லாமல் நாம் தொடர்ச்சியாக ஒரே IP முகவரியில் இருந்து கூகிள் தேடல் பயன்படுத்துகிறோம் என்றால் வழக்கமாக நாம்  எந்தெந்த தளங்களுக்கு செல்வோமோ அதை முதலில் பட்டியலிட்டு காட்டுகிறது. IP முகவரி வைத்துக்கூட கூகிள் Intelligent ஆக செயல்படுகிறது கூடவே அந்தெந்த பகுதியின் விளம்பரங்களையும் அசாதாரணமாக காட்டுகிறது. இவற்றை எல்லாம் வைத்து பார்க்கும் போது நம்மை அறியாமல் நம் தகவல்களை பார்க்கும் ஒரு உளவாளியாக கூகிள் உள்ளது என்பது மட்டும் நிதர்சனமான உண்மை.

யூடியுப்-ஐ தாக்கி சைக்கிள் ஒட்டிய கணினி கொள்ளையர்கள்

பேஸ்புக்-ல் கணினி கொள்ளையர்கள் மறுபடியும் கைவரிசையை காட்டியுள்ளனர்.

இந்தியாவின் முன்னனி மென்பொருள் நிறுவனத்தின் இணையதளத்தில் கணினி கொள்ளையர்கள் கைவரிசையா ?

டிவிட்டரை பதம் பார்த்த கம்ப்யூட்டர் கொள்ளையர்கள்

 
வின்மணி சிந்தனை
நம்முடன் இருக்கும் உளவாளியின் மேல் எப்போதும்
அதிக கவனத்துடன் இருக்க வேண்டும்.
 
இன்று அக்டோபர் 17 
பெயர் : கவிஞர் கண்ணதாசன் ,
மறைந்ததேதி : அக்டோபர் 17, 1981
புகழ் பெற்ற தமிழ்த் திரைப்படப்  பாடலாசிரியரும்
கவிஞரும் ஆவார். நான்காயிரத்திற்கும் மேற்பட்ட
கவிதைகள், ஐந்தாயிரத்திற்கம் மேற்பட்ட 
திரைப்படப்பாடல்கள், நவீனங்கள், கட்டுரைகள்
பல எழுதியவர்.தமிழக அரசின் அரசவைக் கவிஞராக இருந்தவர்.
சாகித்ய அகாதமி விருது பெற்றவர்.

PDF ஆக தரவிரக்க இங்கே சொடுக்கவும்


Entry filed under: அனைத்து பதிவுகளும், கூகிள் உதவி, தொழில்நுட்ப செய்திகள், பயனுள்ள தகவல்கள். Tags: .

இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் புத்திசாலித்தனமாக இலக்குகளை வடிவமைக்க நமக்கு உதவும் பயனுள்ள தளம்.

9 பின்னூட்டங்கள் Add your own

 • 1. stalinwesley  |  6:52 முப இல் ஒக்ரோபர் 27, 2011

  என்ன ஒட்டு கேக்குதா …..

  மறுமொழி
 • 2. nathnaveln  |  7:05 முப இல் ஒக்ரோபர் 27, 2011

  நல்ல பதிவு.
  வாழ்த்துக்கள்.

  மறுமொழி
 • 3. ஆன்மீகக்கடல்  |  9:39 முப இல் ஒக்ரோபர் 27, 2011

  சீனா ஏன் கூகுளைத் தடை செய்திருக்கிறது என்பது இப்போது இணையவாசிகளுக்குப் புரிந்திருக்குமே?

  மறுமொழி
 • 4. modi  |  1:36 பிப இல் ஒக்ரோபர் 27, 2011

  இதில் ஆச்சர்யப்பட என்ன இருக்கிறது! இப்படியெல்லாம் நடக்கவில்லையென்றால்தான் ஆச்சர்யம்! அவர்களின் சொந்த வீட்டுக்குள் இருப்பவர்கள் போல்தான்.. ஜீமெயிலில் கணக்கு வைத்திருப்போர்.

  மறுமொழி
 • 5. முனைவர் துரை.மணிகண்டன்  |  5:47 பிப இல் ஒக்ரோபர் 27, 2011

  அருமையான பதிவு.பல விடயங்கள் தெரியாமல் நாம் செயல்படுகிறோம். விழித்துக்கொள்ள வைத்த வின்மணிக்கு நன்றி

  அன்புடன்
  முனைவர் துரை.மணிகண்டன்.

  மறுமொழி
 • 6. Abarajithan  |  10:38 பிப இல் ஒக்ரோபர் 27, 2011

  சார், நீங்களும் மற்றவர்கள் போல் பேசுவது எனக்கு வியப்பாக இருக்கிறது.

  நீங்கள் கூறிய குற்றச்சாட்டுகள் கூகிள் நிறுவனத்திற்கு மட்டும் சொந்தமானவையல்ல. எல்லா இணைய நிறுவனங்களும் உங்கள் விபரங்களை கண்காணித்தபடியேதான் இருக்கின்றன. காரணம் வியாபாரம். ஆனால் அதிகம் பேர் கூகிள் சேவைகளைப் பயன்படுத்துவதால்தான் கூகிளுக்கு எதிராகக குற்றச்சாட்டுகள் அத்கம் எழுகின்றன.

  சரி, கூகிள் எமது தனிமையைச் சூறையாடுகின்றது என்பதுதானே குற்றச்சாட்டு? தனிமை என்பது என்ன? அமெரிக்க நகரங்களில் வீதிக்கு வீதி ஒவ்வொரு முடுக்கையும் கமராக்கண்கள் கண்காணித்தபடியேதான் இருக்கின்றன. கேள்வி கேட்க முடியாது. உங்கள் மீது சீஐஏ-வுக்கு சந்தேகம் வருகின்றது என வைத்துக்கொள்வோம். உங்கள் வீட்டின் அந்தரங்கமான பகுதிகளிலும் கேமரா வைத்து கண்காணிப்பார்கள். அது அவர்கள் நாட்டின் பாதுகாப்பு சம்பந்தப்பட்ட விஷயம். கேள்வி கேட்கமுடியாது.. அவ்வளவு ஏன்? கடவுளை நம்புபவரா நீங்கள்? அப்படியானால் எந்நேரமும் யாரோ ஒருவழ உங்களைக் கண்காணித்துக்கொண்டிருக்கிறாரே? எங்கே போனது தனிமை? கேள்வி கேட்கமுடியுமா? கடவுள்மேல் வழக்குத் தொடுக்க முடியுமா? முடியாது…

  என்னைப் பொறுத்தவரை கண்காணிப்பவருக்கும் கண்காணிக்கப்படுபவருக்கும் இடையே எந்த நேரடித் தொடர்பும் இல்லாதவரை (யார் எவர் எனத் தெரியாதவரை) தனிமை பறிபோவதில்லை.. கூகிளின் பொருட்களை நாம் இனாமாகப் பயன்படுத்துகிறோம். அதுவும் கூகிளின் சட்ட திட்டங்களை வாசித்து ஒத்துக்கொண்டு பயன்படுத்துகிறோம். எனவே நமது அந்தரங்கத் தகவல்கள் பொதுவிற்கு வராதவரை கூகிள் செய்வது தவறாகாது. (இத்தனைக்கும் நமது தகவல்களை கையாள்வது இயந்திரங்களேயன்றி மனிதர்களல்ல) நாம் இனாமாகப் பயன்படுத்தும் பொருளின் மூலம் அவர்களுக்கு ஏதோ ஒரு லாபம் வேண்டும். எனவே, இது தவறல்ல…

  மறுமொழி
 • 7. கி. பாபு, திருப்பூர்  |  4:13 பிப இல் ஒக்ரோபர் 28, 2011

  இது மட்டுமா, நாம் பார்வையிடும் தளங்களில், தள வடிமைப்பாளர்கள் உபயோகிக்கும் புரோம்கிராம்களையும் (jQuery) கூகிள் வழங்கி வருகிறது. இதன் மூலமாகவும், Google Analytics மூலமாகவும் அனைத்துத் தளங்களையும் வேவுபார்த்து வருகிறது. ஆனால் தவிர்க்க இயலாது.

  மறுமொழி
 • 8. rajasekar  |  8:12 பிப இல் ஒக்ரோபர் 28, 2011

  this is the main factor

  மறுமொழி
 • 9. chinnamalai  |  5:21 பிப இல் நவம்பர் 1, 2011

  அருமையான தகவல் ரொம்பவே நன்றி.

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

Subscribe to the comments via RSS Feed


பதிவுகள் காப்பூரிமை

உங்கள் மின்னஞ்சலை
உள்ளிட்டு இவ்வலைப்பூவிற்கு
சந்தாதாரராகி,புதிய பதிவுகளை
மின்னஞ்சலில் பெறுங்கள்.

Join 2,753 other followers

வின்மணியின் சேவை

சிறந்த முறையில் இணையதளம் உருவாக்க GooLittle.com.நேர்மையான விலையில் சிறப்பான சேவை.

மேலும் விபரங்களுக்கு

அண்மைய பதிவுகள்

Our Sponsors

HOTEL SIVAMURUGAN KANYAKUMARI

HOTEL SIVAMURUGAN

நாள் காட்டி

ஒக்ரோபர் 2011
தி செ பு விய வெ ஞா
« செப்   நவ் »
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

டிவிட்டரில் நம்மோடு சேர…

Error: Twitter did not respond. Please wait a few minutes and refresh this page.

தகவல் பாதுகாப்பு

அனைத்து தகவல்களும் முறையாக Creative Common 2.5 - ஆல் காப்பிரைட் செய்யப்பட்டு வெளிவருகிறது.
Creative Commons License
winmani by winmani is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 2.5 License.

நம் வின்மணி இணைப்பு உங்க தளத்தில் கொடுக்க…

உடனுக்குடன் பெற

winmani

winmani.com

www.winmani.com

TNPSC Ebook

TNPSC Group 1, Group 2,Group 3, Group 4 மற்றும் VAO தேர்வில் அடிக்கடி கேட்கப்பட்ட 3000 வினாக்கள் கொண்ட சிறப்பு இ-புத்தகம். மேலும் விபரங்களுக்கு...

%d bloggers like this: