அழகான மல்டிமீடியா வாழ்த்து அட்டை ஆன்லைன் மூலம் எளிதாக நொடியில் உருவாக்கலாம்.
ஒக்ரோபர் 9, 2011 at 9:20 முப 2 பின்னூட்டங்கள்
வாழ்த்து செய்தியை அனிமேசனுடன் கூடிய அழகான வாழ்த்து அட்டையாக ஆன்லைன் மூலம் நமக்கு தேவையான வடிவில் இருந்து எளிதாக உருவாக்கி அனுப்பலாம் இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.

படம் 1
நாளுக்கு நாள் வாழ்த்துச் செய்திகளை புதுமையாக சொல்லும் தளம் வந்து கொண்டு இருக்கிறது அந்த வகையில் இன்று நாம் பார்க்க இருக்கும் இந்தத்தளம் மூலம் மல்டிமீடியா வாழ்த்து அட்டை ஆன்லைன் மூலம் எளிதாக சில நிமிடங்களில் உருவாக்கலாம்.
இணையதள முகவரி : http://www.easyhi.com
இணையதளப் பெயரே Easy Hi என்று எளிதான முகவரியுடன் இருக்கிறது. இத்தளத்திற்கு சென்று படம் 1-ல் காட்டியபடி Get Started Now என்ற பொத்தானை சொடுக்கி வாழ்த்து அட்டை உருவாக்க ஆரம்பிகலாம். வாழ்த்து சொல்ல வசதியாக பல தரப்பட்ட அழகான படங்கள் , அழகான எழுத்துருக்கள், கண்ணைக்கவரும் அனிமேசன் என அனைத்துமே சிறப்பாக இருக்கிறது, விரும்பிய படங்களையும் அனிமேசனையும் சேர்த்து அழகான வாழ்த்து அட்டை நாமே உருவாக்கி விரும்பிய நபர்களுடன் அதை பகிர்ந்து கொள்ளலாம்.அனிமேசனுடன் வாழ்த்து சொல்ல விரும்பும் நபர்களுக்கு இந்தப்பதிவு பயனுள்ளதாக இருக்கும்.இத்தளத்தைப்பற்றிய ஒரு சிறப்பு அறிமுக வீடியோவையும் இத்துடன் இணைத்துள்ளோம்.
நம் முகத்துடன் அனிமேசனில் வாழ்த்து சொல்ல புதுமையான இணையதளம்.
ஆன்லைன்-ல் கிறிஸ்துமஸ் தாத்தா குரலில் வாழ்த்து சொல்லலாம்.
அமெரிக்கா வாழ் இந்தியர்கள் Postal தகவல்களை முழுமையாக அறியலாம்.
நண்பர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்தை போன் மூலம் இலவசமாக கூறலாம்.
வின்மணி சிந்தனை அன்பையும் வாழ்த்தையும் பகிர்ந்து கொள்ளும் போது சந்தோஷம் மேலும் மேலும் பெருகும்.
இன்று அக்டோபர் 9
பெயர் : எம்.பக்தவத்சலம், பிறந்ததேதி : அக்டோபர் 9, 1897 தமிழ் நாட்டின் முன்னாள் முதலமைச்சரும் இந்திய நாட்டின் விடுதலைப் போராட்ட வீரரும் ஆவார்.விடுதலைப் போராட்டக் காலங்களில் அமராவதி சிறையில் அடைக்கப்பட்டு எண்ணற்ற இன்னல்களை அனுபவித்தவர்.1963 ஆம் ஆண்டு தமிழக முதல்வராகப் பொறுப்பேற்ற பின் தமது நிர்வாகத் திறனை திறம்பட வெளிப்படுத்தியவர். நேர்மையின் சிகரம். இந்திய தேசத்திற்காக பாடுபட்ட உங்களை மரியாதையுடன் வணங்குகிறோம்.
PDF ஆக தரவிரக்க இங்கே சொடுக்கவும்
Entry filed under: அனைத்து பதிவுகளும், இணையதளம், தொழில்நுட்ப செய்திகள், பயனுள்ள தகவல்கள். Tags: அழகான மல்டிமீடியா வாழ்த்து அட்டை ஆன்லைன் மூலம் எளிதாக நொடியில் உருவாக்கல.
1.
Amirthalingam Nagarajan | 12:27 பிப இல் ஒக்ரோபர் 14, 2011
இது ஒரு புதிய மகிழ்சியான அணுபவம்
வாழ்க வளமுடன்…
நாகராஜன்
2.
winmani | 2:45 பிப இல் ஒக்ரோபர் 14, 2011
@ Amirthalingam Nagarajan
மிக்க நன்றி