இணையத்தில் பிரச்சினையா அல்லது இணையதளத்தில் பிரச்சினையா என்று கண்டுபிடிக்க உதவும் பயனுள்ள தளம்.
ஒக்ரோபர் 1, 2011 at 12:51 முப 1 மறுமொழி
இணையதளத்தைப்பொருத்தவரை பல நேரங்களில் நமக்கு புரியாத புதிராக இருக்கும் கேள்வி என்னவென்றால் ஒரு குறிப்பிட்ட தளத்தை திறக்கும் போது இணையப்பக்கம் தெரிவதில்லை காரணம் இணையத்திலா அல்லது இணையப்பக்கத்திலா என்பதை கண்டுபிடிப்பதற்குள் போதும் போதும் என்று ஆகிவிடும் ஆனால் இனி எளிதாக பிரச்சினை இணை இணைப்பிலா அல்லது இணையதளத்திலா என்று கண்டிபிடிக்க ஒரு தளம் உதவுகிறது இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.

படம் 1
இண்டர்நெட் சேவை கொடுக்கும் நிறுவனத்திற்கு தொடர்பு கொண்டு குறிப்பிட்ட இணையதளங்கள் தெரிவதில்லை என்றால் சில நேரங்களில் அவர்களின் பயர்பால் அல்லது ஏதாவது தடை செய்து வைத்திருக்கலாம் அப்படிபட்ட நேரத்தில் அவர்கள் சொல்லும் பதில் இந்த இணையதளம் தற்போது வேலை செய்யவில்லை என்பது தான் ஆனால் பிரச்சினை எதில் என்று கண்டுபிடிக்க நமக்கு இந்தத்தளம் உதவுகிறது.
இணையதள முகவரி : http://doj.me
இத்தளத்திற்கு சென்று படம் 1-ல் காட்டியபடி இருக்கும் கட்டத்திற்குள் Enter பொத்தானை சொடுக்கினால் போதும் அடுத்த நொடியிலே பதிலை சொல்லி விடுகிறது இந்தத்தளம் ஆம், இணையதளம் சரியாக வேலை செய்கிறது என்றால் UP என்றும் இணையதளத்தில் ஏதாவது பிரச்சினை என்றால் Down என்றும் நமக்கு காட்டும் இதிலிருந்தே எளிதாக பிரச்சினையை கண்டுகொள்ளலாம்.இணையதள சேவை கொடுப்பவர்களும் இணைய இண்டர்நெட் இணைப்பு கொடுப்பவர்களிடமும் எளிதாக பிரச்சினையை புரிய வைக்க கண்டிப்பாக இந்தத்தளம் உதவும்.
நாம் விரும்பும் வண்ணத்தில் எந்த இணையதளத்தையும் மாற்றி பார்க்கலாம் புதுமையான தளம்.
ஆன்லைன் -ல் புகைப்படங்களை வெட்ட , அளவுகளை மாற்ற உதவும் அசத்தலான இணையதளம்.
நம் தளத்திற்கு வரும் அனைத்து நண்பர்களுடனும் நொடியில் சாட் செய்ய புதுமையான இணையதளம்.
நம் முகத்துடன் அனிமேசனில் வாழ்த்து சொல்ல புதுமையான இணையதளம்.
வின்மணி சிந்தனை வாழ்க்கையில் முதலில் நன்மையை பெறுபவர்களை விட சிறிது காலம் கழித்து நன்மை அமைய பெறுபவர்கள் தான் சிறப்பானவர்கள்.
இன்று அக்டோபர் 1
பெயர் : சிவாஜி கணேசன், பிறந்த தேதி : அக்டோபர் 1, 1927 புகழ் பெற்ற தமிழ் திரைப்பட நடிகர். விழுப்புரம் சின்னையாப்பிள்ளை கணேசன் என்பது இவரது இயற்பெயர்.பராசக்தி என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் அறிமுகமானார். நடிகர் திலகம் என்று மக்களால் அன்போடு அழைக்கப்படுபவர்.
PDF ஆக தறவிரக்க இங்கே சொடுக்கவும்
Entry filed under: அனைத்து பதிவுகளும், இணையதளம், தொழில்நுட்ப செய்திகள், பயனுள்ள தகவல்கள். Tags: இணையத்தில் பிரச்சினையா அல்லது இணையதளத்தில் பிரச்சினையா என்று கண்டுபிடி.
1.
GANESH | 10:23 முப இல் ஒக்ரோபர் 7, 2011
Really super post.I need at this time.Thank you…