மிகப்பெரிய கோப்புகளை தனித்தனி Folder மற்றும் Size வாரியாக பிரிக்க உதவும் மென்பொருள்.

செப்ரெம்பர் 12, 2011 at 5:46 முப 2 பின்னூட்டங்கள்

மிகப்பெரிய கோப்புகளை இணையத்தில் பகிர்ந்து கொள்வது கொஞ்சம் கடினம் தான் இப்படி இருக்கும் மிகப்பெரிய கோப்புகளை தனித்தனி Folder ஆக நாம் விரும்பும் Size-ல் பிரிக்கலாம் நமக்கு உதவுவதற்காக ஒரு மென்பொருள் உள்ளது இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.

படம் 1

மிகப்பெரிய அளவுள்ள கோப்புகளை சிறிய அளவுள்ள கோப்புகளாக துண்டு துண்டாக பிரிக்க நமக்கு ஒரு மென்பொருள் உதவுகிறது. பிரிக்கும் Size -ஐயும் நாமே முடிவெடுக்கும் வண்ணம் நமக்கு உதவ ஒரு மென்பொருள் உள்ளது.

தறவிரக்க முகவரி : http://bkprograms.weebly.com/downloads.html

இத்தளத்திற்கு சென்று Download என்ற பொத்தனை சொடுக்கி மென்பொருளை தறவிரக்கலாம். தறவிரக்கி மென்பொருளை இயக்கி நம்மிடம் இருக்கும் பெரிய அளவுள்ள கோப்புகளை Select Folder என்பதை சொடுக்கி தேர்ந்தெடுத்துக்கொள்ள வேண்டும்.Destination  Folder என்பதில் எந்த இடத்தில் சேமிக்க வேண்டுமோ அதையும் கொடுத்து, அடுத்து இருக்கும் By Size என்பதில் எவ்வளவு அளவுள்ள கோப்புகளாக பிரிக்க வேண்டும் என்பதையும் கொடுத்து Files Should be என்ற ஆப்சனில் Copied என்பதையும் தேர்ந்தெடுத்து Split  என்பதை சொடுக்கினால் போதும் உடனடியாக கோப்புகள் நாம் குறிப்பிட்ட இடத்தில் நாம் குறிப்பிட்ட அளவில் இதை அப்படியே சேமிக்கப்பட்டிருக்கும். இணையத்தில் சிறிய கோப்புகளாக பிரித்து அனுப்புபவர்கள் File type என்பதில் Zip அல்லது Rar என்ற ஆப்சனை தேர்ந்த்தெடுத்து Split செய்தும் அனுப்பலாம். கண்டிப்பாக பெரிய அளவுள்ள கோப்புகளை சிறிய அளவுள்ள கோப்புகளாக பிரிக்க  விரும்புபவர்களுக்கு இந்தப்பதிவு பயனுள்ளதாக இருக்கும்.

ஆன்லைன் மூலம் ஒரே நேரத்தில் இரண்டு கோப்புகள் சரியாக இருக்கிறதா என்று நொடியில் சரிபார்க்கலாம்.

பாதிக்கப்பட்டுள்ள டாக்குமெண்ட் கோப்புகளை பாதுகாப்பாக மீட்கலாம் (Recover Corrupted Office Files)

ஆன்லைன் -ல் கோப்புகளை இலவசமாக தேடிக் கொடுக்கும் File library

ஆன்லைன் மூலம் பிடிஎப் கோப்புகளை எக்சல் கோப்புகளாக மாற்றலாம்.

 
வின்மணி சிந்தனை
அன்பான நண்பர் நம் அருகில் இருப்பது கடவுள் நம்
அருகில் இருப்பதைப் போன்றது.
 
TNPSC  Questions  Group 1,Group 2,Group 3,Group 4
கடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட
வினாக்கள் மற்றும் பதில்கள்
1.இந்தியாவில் வரியில்லா துறைமுகம் எது ? 
2.இந்தியாவின் மேற்கு கடற்கரைப்பகுதியில் எத்தனை
  பெரியத் துறைமுகங்கள் உள்ளன ? 
3.இந்தியாவில் ஆற்றுத்துறைமுகம் எது ?
4.பீகார் மாநிலத்தின் துயரம் என்று அழைக்கப்படும் நதி எது ?
5.ISO 9001 -2000 சான்றிதழ் பெற்ற மிகப்பெரிய துறைமுகம் எது?
6.இந்தியாவின் கிழக்கு கடற்கரைப்பகுதியில் எத்தனை பெரியத்
  துறைமுகங்கள் உள்ளன ? 
7.இந்தியாவில் மிகப்பழமையான துறைமுகம் எது ?
8.வங்காலத்தின் துயரம் துயரம் என்று அழைக்கப்படும் நதி எது?
9.காலநிலை மாற்றங்களால் பாதிக்கப்படாத துறைமுகம் எது ?  
10.இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கி எது ? 
பதில்கள்:
1.கண்ட்லா துறைமுகம், 2.6, 3.கொல்கத்தா துறைமுகம்,
4.கோசி நதி, 5.தூத்துக்குடி, 6.6, 7.மும்பை துறைமுகம், 
8.தாமோதர் நதி, 9.விசாகப்பட்டிணம்,
10.ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா.
 
இன்று செப்டம்பர் 12


பெயர் : சி. வை. தாமோதரம்பிள்ளை,
பிறந்த தேதி : செப்டம்பர் 12, 1832
பண்டைய சங்கத் தமிழ் நூல்கள் செல்லரித்து
அழிந்து போகாது, தமது அரிய தேடல்கள் மூலம்
அவற்றை மீட்டெடுத்து, காத்து,ஒப்பிட்டு
பரிசோதித்து, அச்சிட்டு வாழ வைத்த முதல்வர்.
தமிழின் நூல்கள் தொடர்ந்து தமிழ் மக்களுக்குக் கிடைக்க
வேண்டும். தமிழின் பெருமையை, அருமையை தமிழர்
உணர்ந்து உயர வேண்டும் என்ற அரிய நோக்கங்களோடு
தொண்டாற்றியவர். தமிழ்ப் பதிப்புத்துறையின் முன்னோடி.

PDF ஆக தறவிரக்க இங்கே சொடுக்கவும்


Entry filed under: அனைத்து பதிவுகளும், இணையதளம், தொழில்நுட்ப செய்திகள், பயனுள்ள தகவல்கள். Tags: .

நம் தளத்திற்கு SEO மார்க் என்ன என்பதை உடனடியாக ஆன்லைன் மூலம் கண்டுபிடிக்கலாம். ASCII ஆர்ட் வரைய நமக்கு உதவும் பயனுள்ள இணையதளம்.

2 பின்னூட்டங்கள் Add your own

  • 1. Amirthalingam Nagarajan  |  1:22 பிப இல் செப்ரெம்பர் 20, 2011

    பெரிய வீடியோ ஃபைல் களை இது சின்ன சின்ன ஃபைல்களாய் பிரிக்குமா?
    nagarajan

    மறுமொழி
    • 2. winmani  |  2:07 பிப இல் செப்ரெம்பர் 20, 2011

      @ Amirthalingam Nagarajan
      ஆம் , கண்டிப்பாக முயற்சித்துப்பாருங்கள்.
      நன்றி

      மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

Subscribe to the comments via RSS Feed


பதிவுகள் காப்பூரிமை

உங்கள் மின்னஞ்சலை
உள்ளிட்டு இவ்வலைப்பூவிற்கு
சந்தாதாரராகி,புதிய பதிவுகளை
மின்னஞ்சலில் பெறுங்கள்.

Join 2,746 other followers

வின்மணியின் சேவை

சிறந்த முறையில் இணையதளம் உருவாக்க GooLittle.com.நேர்மையான விலையில் சிறப்பான சேவை.

மேலும் விபரங்களுக்கு

அண்மைய பதிவுகள்

Our Sponsors

HOTEL SIVAMURUGAN KANYAKUMARI

HOTEL SIVAMURUGAN

நாள் காட்டி

செப்ரெம்பர் 2011
தி செ பு விய வெ ஞா
« ஆக   அக் »
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  

டிவிட்டரில் நம்மோடு சேர…

தகவல் பாதுகாப்பு

அனைத்து தகவல்களும் முறையாக Creative Common 2.5 - ஆல் காப்பிரைட் செய்யப்பட்டு வெளிவருகிறது.
Creative Commons License
winmani by winmani is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 2.5 License.

நம் வின்மணி இணைப்பு உங்க தளத்தில் கொடுக்க…

உடனுக்குடன் பெற

winmani

winmani.com

www.winmani.com

TNPSC Ebook

TNPSC Group 1, Group 2,Group 3, Group 4 மற்றும் VAO தேர்வில் அடிக்கடி கேட்கப்பட்ட 3000 வினாக்கள் கொண்ட சிறப்பு இ-புத்தகம். மேலும் விபரங்களுக்கு...

%d bloggers like this: