ஜீமெயில் பயனாளர்களுக்கு கூகிள் labs அறிமுகம் – சிறப்பு பதிவு.
ஓகஸ்ட் 26, 2011 at 11:53 பிப 5 பின்னூட்டங்கள்
கூகிள் வழங்கும் மிகப்பெரிய சேவைகளில் ஒன்றான ஜீமெயிலில் மேம்படுத்தப்பட்ட மதிப்பு கூட்டு அம்சங்களில் ஒன்றான கூகிள் லேப்ஸ் (Google Labs ) எப்படி பயன்படுத்த வேண்டும் என்பதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.

படம் 1
கூகிள் கொடுக்கும் சேவைகளை ஒரு முறை பயன்படுத்தியவர்கள் அதனால் கட்டுண்டு கிடப்பதற்கு காரணம் அதன் சேவைகள் தான், இலவசம் என்று கொடுக்கும் எந்த நிறுவனமும் சேவைகளில் முன்னுரிமை கொடுக்காத நேரத்தில் சொல்லப்போனால் நாளும் ஒரு சேவை அதுவும் மிகவும் சிறப்பான சேவை என்று நம் மனதில் இடம் பிடிக்கின்றனர். ஜீமெயில் பயனாளர்கள் கூகிள் லேப்ஸ் எப்படி பயன்படுத்துவதைப்பற்றி இனி பார்க்கலாம்.
இணையதள முகவரி : http://www.gmail.com

படம் 2
ஜீமெயில் தளத்தில் பயனாளர் கணக்கு இல்லாதவர்கள் தங்களுக்கென்று ஒரு ஜீமெயில் கணக்கு இலவசமாக உருவாக்கிக் கொள்ளவும். ஏற்கனவே ஜீமெயில் கணக்கு உள்ளவர்கள் தங்கள் கணக்கை பயன்படுத்தி ஜீமெயிலில் தங்கள் கணக்கை திறந்து கொள்ளவும். அடுத்து வலது பக்கம் மேல் இருக்கும் படம் 1-ல் காட்டியபடி Settings ஐகானை சொடுக்கி Mail Settings என்பதை தேர்ந்தெடுத்து சொடுக்கவும். அடுத்து வரும் திரையில் Labs என்ற மெனுவை தேர்ந்தேடுக்கவும். இதில் பலவகையான Labs சேவைகள் கிடைக்கிறது. இதில் நமக்கு வேண்டிய எந்த சேவை பிடித்திருக்கிறதோ அதன் பக்கத்தில் இருக்கும் Enable என்ற ஆப்சன் -ஐ தேர்ந்தெடுத்துவிட்டு Save Changes என்ற பொத்தானை அழுத்தவும். இனி நாம் தேர்வு செய்த கூகிள் லேப்ஸ் நம் ஜீமெயிலில் பயன்படுத்தலாம். உதாரணமாக நாம் Search for a lab என்ற கட்டத்திற்குள் undo என்று தட்டச்சு செய்யவும் இப்போது Undo Send என்ற லேப்ஸ் ஒன்று காட்டப்படும் இதன் அருகில் இருக்கும் Enable என்பதை சொடுக்கி பின் Save changes என்ற பொத்தானையும் அழுத்தவும். இப்போது நாம் தேர்ந்தெடுத்த கூகிள் லேப்ஸ்-ன் பயன் யாதெனில் ஒருவருக்கு நாம் மெயில் அனுப்பிய ஒரு சில நொடிகளுக்குள் Undo அதாவது திரும்ப பெற்று கொள்ளலாம்.இதே போல் கூகிள் லேப்ஸ் -ன் ஒவ்வொன்றையும் எளிதாக பயன்படுத்தலாம். கண்டிப்பாக கூகிள் லேப்ஸ் பற்றி தெரியவர்களுக்கு இந்தப்பதிவு பயனுள்ளதாக இருக்கும்.
கூகுள் டிவி- யில் டிவிட்டர், ஃபிளிக்கர் பயன்படுத்தலாம் சிறப்பு பதிவு வீடியோவுடன்
கணினியின் விசைப்பலகையை (Keyboard) சுத்தப்படுத்தும் சிறப்பு வீடியோ.
ஆப்பிள் அறிமுகப்படுத்தும் 1.5 இன்ஞ் நேனோ ஐபாட் சிறப்பு வீடியோவுடன்
ஹோலோ கிராபிக் செய்தி தொழில்நுட்பத்தின் வளர்ச்சி சிறப்பு வீடியோ
வின்மணி சிந்தனை பணத்துக்காக வளைந்து வளைந்து சலாம் போடுவதைவிட ஏழையாக சுதந்திரமாக வாழலாம்.
TNPSC Questions Group 1,Group 2,Group 3,Group 4 கடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட வினாக்கள் மற்றும் பதில்கள் 1.தேசிய வளர்ச்சிக்குழு ( NDC ) எந்த ஆண்டு தொடங்கப்பட்டது? 2.பிலாய் இரும்பு எஃகு தொழிற்சாலை எந்த மாநிலத்தில் அமைந்துள்ளது ? 3.2001 -ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இந்தியாவில் தாழ்த்தப்பட்டோர் மக்கள் தொகை எவ்வளவு ? 4.துர்க்காபூர் இரும்பு எஃகு தொழிற்சாலை எந்த நாட்டின் உதவியுடன் தொடங்கப்பட்டது ? 5.2001-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி எந்த மாநிலம் குறைந்த மக்கள் வளர்ச்சி கொண்டுள்ளது ? 6.National Population Policy எந்த ஆண்டு வெளியீடப்பட்டது ? 7.2001 -ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இந்தியாவில் பழங்குடியினர்மக்கள் தொகை எவ்வளவு ? 8.பொக்காரோ இரும்பு எஃகு தொழிற்சாலை எந்த ஐந்தாண்டு திட்டக்காலத்தில் தொடங்கபப்ட்டது ? 9.2001 -ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இந்தியாவில் பெண்கள் கல்வியறிவு சதவீதம் எவ்வளவு ? 10.பிலாய் இரும்பு எஃகு தொழிற்சாலை எந்த நாட்டின் உதவியுடன் தொடங்கபப்ட்டது ? பதில்கள்: 1.1952, 2.சத்தீஸ்கர், 3.16.66 கோடி, 4.இங்கிலாந்து (UK), 5.கேரளா, 6.2000, 7.16.23%, 8.3 வது ஐந்தாண்டுத்திட்டம் ( 1961-1966), 9.53.7%, 10.சோவியத் ரஷ்யா (USSR).
இன்று ஆகஸ்ட் 26
பெயர் : அன்னை தெரேசா , பிறந்த தேதி : ஆகஸ்ட் 26, 1910 அல்பேனியா நாட்டைப் பூர்வீகமாகக் கொண்டு இந்திய குடியுரிமை பெற்ற ரோமன் கத்தோலிக்க அருட்சகோதரிஆவார்.ஏழைஎளியோர்களுக்கும், நோய்வாய்ப்பட்டோருக்கும், அனாதைகளுக்கும், இறக்கும் தருவாயிலிருப்போர்களுக்கும் தொண்டாற்றிக் கொண்டே, முதலில் இந்தியா முழுவதும் பின்னர் ஏனைய வெளிநாடுகளுக்கும் மிஷினரீஸ் ஆப் சேரிட்டி-யை விஸ்தரித்தவர்.
PDF ஆக தரவிரக்க இங்கே சொடுக்கவும்
Entry filed under: அனைத்து பதிவுகளும், இணையதளம், கூகிள் உதவி, தொழில்நுட்ப செய்திகள், பயனுள்ள தகவல்கள். Tags: ஜீமெயில் பயனாளர்களுக்கு கூகிள் labs அறிமுகம் - சிறப்பு பதிவு..
1.
mtvenkateshwar | 5:49 முப இல் ஓகஸ்ட் 31, 2011
பகிர்வுக்கு நன்றி
2.
winmani | 4:18 பிப இல் ஓகஸ்ட் 31, 2011
@ mtvenkateshwar
மிக்க நன்றி
3.
Ravindran | 8:38 முப இல் ஓகஸ்ட் 31, 2011
There was a news item recently that the G mail is going stop this facility very shortly, If this so , I hope they incorporate some of the popular ones in the main page itself. It is a very useful function in G mail.
4.
கிரி | 9:01 முப இல் ஓகஸ்ட் 31, 2011
கூகுள் விரைவில் இந்த சேவையை நிறுத்தப்போகிறது.
5.
Abarajithan | 12:42 முப இல் செப்ரெம்பர் 1, 2011
It’d be better if u can explain few popular Labs for the ones not familiar with these.
@ Ravindran,
Google is gonna discontinue the “Google Labs” service. Not Gmail Labs. Gmail, docs, calendar labs will continue to exist…